அவதார் - 2 : ஆழ்கடல் பகுதியில் கேம்ஸ் கேமரூன் - வீடியோ பேட்டி



உலகத் திரைப்பட வரலாற்றில் புதிய சாதன படைத்த அவதார் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தனது அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்.
இந்தப் படம் அவதாரின் தொடர்ச்சியாக இருக்கும். உலகின் மிக ஆழமான கடல் பகுதி என வர்ணிக்கப்படும் மரியானாவின் சேலஞ்சர் டீப் பகுதியில் தனது அவதார் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கிறார். சேலஞ்சர் டீப் பகுதியில் 6.8 மைல் ஆழத்துக்கு பயணம் செய்கிறார் ,உலகின் மிக உயரமான

ஏவரஸ்ட் சிகரத்தையே முழ்கடித்துவிடும் ஆழம் உள்ள கடல் பகுதி இது. கேமரூன். அவதார் படத்தின் களமான பண்டோரா கிரகத்தின் ஆழ்கடல் பகுதியில் இந்தக் கதை நடக்கிறது. இது கடலுக்கு அடியில் 10, 972 மீட்டர் சென்று மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா அகழியின் அடிவாரத்திற்குச் செல்லவிருக்கிறது. இதற்காக பல கோடி ரூபாய் செலவில் கப்பல் ஒன்றை தயாரிக்க ஆர்டர் கொடுத்தார் கேமரூன். ஆஸ்திரேலியாவில் தயாராகும் இந்தக் கப்பலின் பாதிப் பணிகள் முடிந்துவிட்டன. முழுமையடைந்ததும், கேமரூன் மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட சிலர் மட்டும் இந்தக் கடல் பகுதிக்குள் செல்லப் போகிறார்களாம்.
இரு இருக்கைகள், வெப்பமூட்டும் கருவி, 3 டி கேமரா ஆகியவை அந்த கப்பலில் இருக்கும். .50 ஆண்டுகளுக்குப் பிறகு சேலஞ்சர் டீப் பகுதிக்கு விசிட் அடிக்கும் முதல் நபர் ஜேம்ஸ் கேமரூன் மட்டுமே!1960-ம் ஆண்டு விஞ்ஞானி ஒருவரும், கடற்படை லெப்டினன்ட் ஒருவரும் மரியானா அகழிக்குச் சென்றனர். கடல் அடிமட்டத்தை நெருங்க அவர்களுக்கு 5 மணி நேரம் ஆனது. அவர்கள் அங்கு 20 நிமிடங்கள் தான் இருந்தனர். கேமரூனின் இந்த முயற்சி மூலம் மக்களுக்கு இன்னொரு புதிய அனுபவம் கிடைக்கவுள்ளது.அவதார்-2 படப்பிடிப்பைத் தற்போது தொடங்கும் கேமரூன், அதை முடித்து 2014ல் படத்தை திரைக்குக் கொண்டு வருகிறார். பின்னர் 2015ம் ஆண்டிலேயே அவர் அவதார்-3 படத்தையும் தொடங்கவுள்ளார்.



கேமரூன் வீடியோ பேட்டி

-சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments