மாற்றான் படம் குறித்து இயக்குனர் கே.வி.ஆனந்த பேட்டி‘மாற்றான்’ படம் வித்தியாசமான கதையமைப்புடன் உருவாகிறது. ’7ஆம் அறிவு’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சவுந்தரராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.
எடிட்டிங்கை ஆன்டனி கவனிக்கிறார். சூர்யா ஐந்து வித்தியாசமான ரோல்களை இந்தப் படத்தில் செய்கிறார். பால்கன் நாடுகள் எனப்படும் ரஷ்யா, செர்பியா, குரேஷியா, மாசிடோனியா மற்றும் அல்பேனியாவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ‘மாற்றான்’ படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சூர்யாவின் மாற்றான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.தமிழ் புத்தாண்டில் வெளிவருவதாக இருந்த இந்தத் திரைப்படம் ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இறுதிகட்ட பணிகளில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணமாகும்.கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மற்றும் காஜல் அகர்வால் இந்தப்படத்தில் இணைந்து நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் கே.வி.அனந்த் பேட்டியை பார்க்க .....


videoதெலுங்கில் டூப்ளிகேட் என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.சூர்யா படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உள்ளதால், இந்தப் படத்தை நேரடி தெலுங்குப் படம் என்ற அளவுக்கு பக்காவாக டப் பண்ணப் போகிறாராம் இயக்குநர் கே வி ஆனந்த். இந்தபடத்தில் முன்று வில்லன்களில் சூர்யாவும் ஒருவர் என்பது புதிய தகவல்.

-சத்யஜித்ரே
மேலும் மாற்றான் குறித்த இடுகை.....

சூர்யாவின் மாற்றான் - மாஸ்கோ படப்பிடிப்பு காட்சிகள்உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்