மதுரையின் வரலாறு சொல்லும் யானைமலை



மதுரையை சுற்றி பசுமலை,திருப்பரங்குன்றம் மலை,நாகமலை,என மலைகளும், குன்றுகளும் இருந்தாலும் மதுரையின் 2500 ஆண்டு வரலாற்றோடு மிகநெருக்கமானது யானைமலை.

இம் மலையில் கி.பி.முதல் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் இன்னும் காணக்கிடைக்கின்றன.அதில்...

 ''இவகுன்றத்து உறையுள் பாதந்தான் 
எரிஆரிதன் அந்துவாயி அரட்டக்காயிபன்''



என்று குறிப்பிடப்பட்டுள்ளது .இதில் இவ குன்றம் என்றால் யானைமலை என்று பொருள், அதாவது ''இந்த யானைமலையில் எரிஆரிதன், அத்துவாயி அரட்டக்காயிபன் ஆகிய இரண்டு சமண முனிவர்களுக்கான கற்படுக்கை''என்பது இந்த வரிகளின் பொருள். ஆக 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த மலை யானைமலை என்றே அழைக்கப் பட்டிருக்கிறது.மதுரையைக்கு வடக்கு திசையிலிருந்து வருபவர்களுக்கு ஒத்தக்கடை என்ற ஊரை நெருங்கும் போதை யாரும் சொல்லமலேயே யானை படுத்திருப்பது போன்ற தோற்றத்தை தரும் இந்த மலை ஒரு பெரும் பாறை என்பதே உண்மை.இதன் நீளம் சுமார் 4 கி.மீ, அதாவது 4000 மீட்டர் நீளம்,1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்ட மிகப்பெரிய பாறை உலகிலேயே யானைமலையாகத்தான் இருக்க முடியும்.


கி.பி.முதலாம் நூற்றாண்டு துவங்கி மதுரையின் கலாச்சாரம்,பண்பாடு,இலக்கியம்,சமயசார்ந்த நிகழ்வுகளில் யானைமலை முக்கிய சாட்சியாக இருந்துள்ளது.

கி.பி.7ம் நூற்றாண்டில் இங்கு சமணப்பள்ளி இருந்ததாக திருஞானசம்பந்தர் எழுதிய மதுரைப்பதிகம் கூறுகிறது.

கி.பி. 8ம் நூற்றாண்டில் பராந்தக நெடுஞ்செழியனின் மந்திரி எயினன்,அவன் தம்பி மாரன்காரி இருவரும் நரசிங்கபொருமாள் கோயிலை உருவாகினர்.

கி.பி.9 நூற்றாண்யில் யானைமலையின் தென்பகுயில் அமைந்துள்ள குகையில் சமணப்பள்ளிகள் இருந்ததாகவும் அதன் அருகே சமண முனிவர்கள் தங்கிய இடம் இருந்தாகவும் அறியமுடிகிறது.

இன்றைய ஒத்தக்கடை 9ம் நூற்றாண்டில் நரசிங்கமங்கலம் என்று அழைக்கப்பட்டது.

மாமல்லபுரம் குடைவரை கோயில் போல இங்கு நரசிங்க பொருமாளு க்கும், லாடன்கோயில் என்ற பெயரில் முருகனுக்கும் கோயில்கள் உள்ளன. முருகனுக்கு குடைவரை கோயில் உள்ள ஒரே இடம் இது தான்.

கி.பி.11ம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் மதுரையை தாக்க வந்த யானையை சொக்கேசர் நரசிங்கர்  கணை தொடுத்துக் கட்டிப் போட்டிருக்கிறார் என்ற ஒரு கதை உள்ளது.அன்றைக்க சமணமதத்திற்கு எதிராக சைவர்களும்,வைணவர்களும் சேர்ந்து சமணத்தை விழ்த்திய வரலாற்றையும் யானைமலை மறைமுகமாக சொல்கிறது.
மேலும் யானைமலையில் அமைந்துள்ள சமணர்கள் வாழ்ந்த குகையின் நெற்றிப்பகுதியில் 9 புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. முக்குடையின் கீழ் அமர்ந்துள்ள சமணதீர்தங்கரர் மகாவீரர், பார்தவநாதர், பாகுபலி, இயக்கிஅம்பிகா,தாமரை மலர்கள் ஆகிய சிற்பங்கள் 2000 ஆண்டுகளுக்கு பின்பும் பார்பவர்களை வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன.

யானை படுத்தால் ஆபத்தா? எழுந்தால் ஆபத்தா?

சொக்கேசன் கட்டப்போட்ட யானை எழுந்துவிட்டால் மதுரைக்கு ஆபத்து என்ற நம்பிக்கை கொண்டிருக்கிற மக் களி டம், யானைபடுத்திருப்பதுமதுரை   க்கும்,தமிழகத்திற்கும் நல்ல தல்ல, யா னை யை படுத்துக்கிடப் பதால் ன் நாம் வளர்ச்சியடை யவி ல்லை. இதனால் 900 அடி உயரத்தில் நின்ற நிலையில் ஒருயானை கம்பீரமாக நடந்து செல்வது போலவும் அதில் மன்னர் ஒரு கையில் திருக்குறளை எந்தியபடி உட்காந்திருப்பதாகவும்,மேலும் தஞ் சை பெரியகேயில் போல ஒரு கோயில்  ஒன்றையும் நிர்மாணிக்கப்போகிறோம் என்கிறார்கள்.இத்திட்டதிற்கு ரூ.1200 கோடி செலவாகும் என கணகிட்டப்பட்டது, ஆனால் சிற்பங்களை செதுக்கும் போது சிதறுகிற கற்பாறைகளின் மதிப்பே ரூ.5000 கோடியை தாண்டும் என்கிறார்கள்.
           இந்த சிற்பநகரம் திட்டத்திற்கு பெருந்தச்சர் அவையம் எனும் அமைப்பின் நிறுவனரான வக்கீல் அரசு நிண்டகாலமாக அரசை வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது.அதனையொட்டி சிற்பநகரம் அமைக்க 2010 ல் அன்றைய தி.மு.க. அரசு 9 பேர் கொண்ட குழுவை அமைத்ததாகவும்,இதற்கான அரசாணை(அரசாணை 227-:2009) ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.யானைமலையைச்சுற்றி 5 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் யானைமலையை ஒட்டி மட்டும்10,000 வீடூகள் உள்ளன. இத்திட்டம் செயல்படுத்தபட்டால் 25ஆயிரம் குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். சிற்பநகரம் என்ற பெயரில் கிரணைட் கொள்ளையர்கள் மலையை சிதைக்க முனைவதாக யானைமலையை சுற்றியுள்ள பொதுமக்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர்.அதனால் சிற்பநகரத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.ஆனால் தற்போது மீண்டும் சிற்பநகர முயற்சி துவக்கப்பட்டுள்ளதாகவும், அதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று யானைமலை பாதுகாப்புகுழு பொறுப்பாளர்கள் உறுதியாக இருப்பது நம்பிக்கை தரும் செய்தி. இயற்கை வடித்த சிற்பத்தை சிதைக்க மனிதர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. மனித போராசையால் பல வரலாற்று தளங்களை இழந்து விட்டோம்.இனி இருப்பதையாவது பாதுகாப்போம், வரலாற்றை சிதைப்பதும், இழப்பதும் ஒரு இனத்தையே அழித்துவிடும்.

படவிளக்கம்-
1. யானை மலை (1800 களில் எடுக்கப்பட்டது)
2,3. முக்குடையின் கீழ் அமர்ந்துள்ள சமணதீர்தங்கரர் மகாவீரர், பார்தவநாதர், பாகுபலி, இயக்கிஅம்பிகா,
4. லாடன்குடைவரை கோயில்(முருகன் கோயில் முகப்பு)
5. யானைமலை பாதுப்புகுழு

அ.தமிழ்ச்செல்வன்
மேலும் மலை பயண அனுபவங்கள்

மழைப்பயணமாக மாறிய மலைப்பயணம்


உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

இயற்கை வடித்த சிற்பத்தை சிதைக்க மனிதர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. மனித போராசையால் பல வரலாற்று தளங்களை இழந்து விட்டோம்.இனி இருப்பதையாவது பாதுகாப்போம், வரலாற்றை சிதைப்பதும், இழப்பதும் ஒரு இனத்தையே அழித்துவிடும்.\\
அற்புதமான வரிகள். யானைமலை குறித்த தங்கள் பதிவு அருமை. நானும் பசுமைநடையாக யானைமலை சென்றதைக் குறித்து தொடர்பதிவு எழுதிவருகிறேன். செவனேன்னு படுத்திருக்கும் யானையை எழுப்பி மதம் பிடிக்க வைக்கக் காத்திருக்கும் சிற்பநகரக்குழுவினரை வன்மையாக கண்டிக்கிறேன். பகிர்விற்கு நன்றி.