கமல் தனது ‘தலைவன் இருக்கிறான்’ படத்தை துவங்க முடியாமல் தவித்து வந்தார். தற்பொழுது ஒருவழியாக ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில் ‘தலைவன் இருக்கிறான்’ஐ துவங்கவுள்ளார். ரவிச்சந்திரன் தயாரிப்பில் மருதநாயகம் (அ) தலைவன் இருக்கிறான் படத்தை கமல் உருவாக்கலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ‘தலைவன் இருக்கிறான்’ஐ கமல் கையில் எடுத்துள்ளார். மருதநாயகம் கைவிடப்பட்டதில் அவரது ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றம் என்ற போதிலும், ‘தலைவன் இருக்கிறான்’ஆல் சிறிது ஆறுதல் அடைந்துள்ளனர்.
தற்பொழுது இப்படத்தின் கதைக்கு இறுதி வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கும் கமல், ‘தசாவதாரம்’ போன்று பெரிய படமாக உருவாகவுள்ள ‘தலைவன் இருக்கிறானின்’ கதை உலகளாவிய சமூகத்தை பற்றியது என கூறியுள்ளார்.
இப்படத்தில் உலகமுழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ள ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை ஹாலிவுட் மற்றும் சீன படங்களில் நடித்த ஜாக்கி சான் முதன்முறையாக கோலிவுட்டில் நடிக்கிறார். ,அதில் நடிக்குமாறு கமல் ஜாக்கியை அணுகியுள்ளார். அவர் ஒப்புக் கொண்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. மேலும் அவருக்கு என்ன மாதிரி கதாபாத்திரம் என்ற தகவலையும் கமல் கசிய விடவில்லை.
தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஜாக்கி சான் வந்தார் என்பது நினைவிருக்கலாம். அந்த விழாவில் அவர் கமல் ஹாசனின் நடிப்பை மனதாரப் பாராட்டினார்.
ஊழலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்
-சத்யஜித்ரே
மேலும் சினிமா செய்திகள்
ஜாக்கிசான்- 100
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments