மலையாள நண்பர்கள் மனம் திறக்க ஒரு மடல்...


என் இனிய மலையாள நண்பர்களே ஒரு கதை சொல்கிறேன்.
‘‘ஒரு ஊர்ல ஏழை விவாசாயி இருந்தான். நல்லவன், நல்ல உழைப்பாளி, நேர்மையானவன். அவன் ஒரு முதலாளியிடம் விவசாய வேலை செய்து வந்தான். முதலாளியும் விவசாயியை நன்றாக கவனித்து கொண்டு அவனுக்கு வேண்டியதை செய்து கொடுத்து கொண்டு இருந்தார். ஆரம்பம் முதல் விவசாயின் பக்தி, நேர்மையை பார்த்துக் கொண்டு இருந்த கடவுள் ஒரு நாள் அவன் முன் தோன்றி உனக்கு வேண்டிய வரம் கேள் என்றார்.
அதற்கு விவசாயி எனக்கு வேண்டியதை என் முதலாளி நன்கு கவனித்து கொள்கிறார், அவர் நன்றாக இருக்க அருள்புரிய வேண்டினான். அவனின் நல்ல மனதை மெச்சிய கடவுள் ஒரு படி நெல் கொடுத்து இதை வைத்து நீ விவசாயம் செய்தால் விளைச்சல் நன்றாக இருக்கும் என்று வரத்தை கொடுத்தார். நடந்ததை முதலாளயிடம் கூறினான் விவசாயி. அவரும் அப்படியே செய் என்று சந்தோசபட்டு அனுமதி கொடுத்தார். விவசாயம் பெருகியது. வருமானம் நன்றாக இருந்தது இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இதை பார்த்துக்கொண்டு இருந்த பொறாமை பிடித்த நயவஞ்சகன் முதலாளியிடம் சென்று உன் நிலத்தில் இருந்துதான் வருமானம் வருகிறது அவனுக்கு ஏன் நீ பங்கு கொடுக்கிறாய் என்று முதலாளியின் மனதில் நஞ்சை விதைத்தான். இதனால் முதலாளி விவசாயிக்கு வஞ்சனை செய்தான். இதன் விளைவாக விவசாயி வறுமையின் பிடியில் சிக்கி உயிர் நீத்தான். நாட்கள் கடந்தன உழைக்க ஆள் இல்லாமல் முதலாளியின் நிலம் தரிசானது, வருமானம் குறைந்தது, முதலாளியும் இருந்ததை இழந்து தானும் உயிர் நீத்தான்.’’

 என்ன தோழா பழைய கதையாக இருக்கிறதா?..

ஆமாம் நீ சிறு வயதில் கேட்ட கதைதான். ஏன் சிறு வயதில் கதைகள் சொன்னார்கள் என்று நீ என்றாவது என்னிபார்த்தயா? காரணம் இல்லாமல் இல்லை. உன் மூளை வளர்ச்சி வரை நீ கேட்கும் விசயங்கள் தான் உன் வாழ்கை முழுவதும் தீர்மானிக்கும். அந்த காலகட்டத்தில் நீ நன்மைகளை சுலபமாக புரித்துக் கொள்ள வேண்டும் என்று பெரியோர்களால் கையாளப்பட்ட வழிமுறைதான் கதைகள். அப்படி சொல்லப்பட்ட கதைதான் இது. சரி இந்த கதையை இப்பொழுது ஏன் சொல்கிறோன் என்று குழப்பமாக இருக்கிறதா? .

இந்த கதையில் விவசாயி கையில் ஏன் கடவுள் நெல்லை கொடுக்க வேண்டும்? நிலம் இல்லாத விசாயிக்கு நிலம் கொடுத்து இருக்கலாமே? அப்படி இல்லாமல் நெல்லை ஏன் கொடுக்க வேண்டும். சிந்தித்து பார் தோழா... இங்குதான் கடவுளின் சூச்சமத்தை நீ தெரிந்து கொள்ளலாம். நிலம் கொடுத்து இருந்தால் இவனை நம்பிய முதலாளி பாதிக்கப்படுவான். சரியா? அதனால் தான் நெல் கொடுத்தார். இதனால் இருவரும் பயன் பெற்றனர்.

இப்பொழுது விசயத்திற்கு வருகிறேன். என் அருமை மலையாள நண்பர்களே கேரளா ‘‘கடவுளின் கொட்டில்’’ என்று அழைப்பார்கள். அங்கு தேயிலை, ரப்பர், பாக்கு, ஏலக்காய் என பணம் கொழிக்கும் பயிர்களை விளைவித்த கடவுள் உனக்கு தேவையான உணவு பயிரிட தேவையான வளத்தை கொடுக்க வில்லை என் என்று என்றாவது என்னி பார்த்தாயா? இப்பொழுது மேல் சொன்ன கதை ஓரளவு தெளிவு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

என் இனிய சகோதரனே முல்லை பெரியாறு இன்று ஒரு முன்னனி பிரச்சனையாக பார்க்க படுகிறது. ஏன் இந்த பிரச்சனை? எதனால் இந்த பிரச்சனை? யாரால் இந்த பிரச்சனை?. இந்தியாவில் அதிகம் படித்த மக்களை கொண்ட கேரள மக்களே உங்களை உங்கள் அரசியல்வாதிகள் முட்டாள் என்கிறார்கள் நீங்களும் ஆமாம் என்று ஒப்புக்கொண்டீர்கள் என்பதே உண்மை. ஏன் இந்த தாழ்வு நிலை உங்களுக்கு எண்ணி பாருங்கள்.

தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டாம் என்கிறார்கள் அதை என் என்று நீ கேட்க வேண்டாமா? சரி தண்ணீர் தரவேண்டாம். அந்த தண்ணீரை வைத்து நீ என்ன செய்ய போகிறாய்? மின்சாரம் தயாரிக்க போகிறாயா? தயாரித்துக் கொள். மின்சாரத்தை வைத்து தொழில்வளம் செய்ய போகிறாயா? செய்துக்கொள். தொழில் வளம் செய்து வருமானம் ஈட்டி காசுபார்க்க போகிறாயா? ஈட்டிக்கொள். சரி இது எல்லாம் சரிதான். ஆனால் காசு பார்த்து அந்த காசையா திங்க போகிறாய்? உண்ண உணவு? உணவுக்கு எங்கே போக போகிறாய்?  உன்னிடம் விளையும் கப்பக் கிழங்கையும், தேங்காயையும் தின்று எத்தனை காலம் உயிர்வாழ்வாய்? சிந்தித்து பார் என் தோழா...

தமிழகத்திற்கு நீ கொடுக்கும் தண்ணீரை வைத்து விவசாயம் செய்து நான் மட்டும் தின்னுக் கொழுக்க முடியுமா? தண்ணீரை கொண்டு உனக்காகவும் தான் நான் விவசாயம் செய்கிறேன். அதை நீ ஏன் உணர மறுக்கிறாய்?

என் இனிய மலையாள சகோதரனே! ஒரு மரத்தை பார். மரம் இடம் விட்டு இடம் நகராமல் தன்னையும் வளர்த்து பிறரையும் வளமாக்குகிறது. நாம் என்ன மரத்தை விட மட்டமானவர்களா? சொல்...

‘‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், நாம் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’’ என்று அங்கே பிறந்து இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கும் எங்கள் இதயகனி கேள்வி கேட்டார். பதில், ஒன்று மட்டுமே காரணம் ஒற்றுமையின்மை. ஆம் நம்மிடம் ஒற்றுமையில்லை. ஒற்றுமையிருந்திருந்தால் 400 வருடங்கள் அன்னியன் ஒருவன் நம்மை கொள்ளையடித்து போய் இருப்பானா?


அப்படி போக மீதி எவ்வளவு வளங்கள் கொட்டிகிடக்கிறது அதை வைத்து வல்லராசக நம்மால் முடியவில்லை சரியா? இன்னும் சொல்லப் போனால் இலங்கையில் என் ரத்தபந்தங்கள் கொல்லப்பட்ட போது நான் துடித்துக் கொண்டிருந்த நேரம் உனக்குள் பிரந்த சிவசங்கர மேனனும், எம்.கே.நாராயனும் அங்கே எப்படி மக்களை கொள்வது என்று பாடம் நடத்திக் கொண்டு இருந்தனர். இதனால் இன்று நான் பாதிக்கப் பட்டுள்ளேன் என்று மட்டும் என்னாதே... இதோ கால்லூன்றி விட்டான் சீனாகாரன் அங்கே இன்று என் மீனவனை அடிக்கிறான். நாளை உன்னை அடிப்பான் நீயும் விரைவில் வாங்கதான் போகிறாய். அதுதான் நடக்கப் போகிறது.

என் தோழனே நிமிர்ந்து நிற்க்கும் உன் மலைகள் போல் நீ நிமிர்ந்து பார்... என்ன தெரிகிறது. பரந்து விரிந்து கிடக்கும் வானம். சரி இப்பொழுது குனிந்து பார்... என்ன தெரிகிறது. ஒன்றுக்கு ஒன்றடி என பூமி தெரிகிறாதா? புரிகிறாதா? என்ன புரிய வில்லையா? ஒன்றுமில்லை சின்ன விசயம் தான். பார்க்கும் உன் கண்ணும் ஒன்றுதான். பரந்து விரிந்த வானம் நமது மனமாக இருக்க வேண்டும். நம் காலடியில் உள்ள பூமி நம் ஆசையாக இருக்க வேண்டும். சரியா. நம் ஆசை ஒன்றுக்கு ஒன்றடியில் இருக்கும் போதுதான் அது நம் காலடியில் இருக்கிறது. அது வானம் போல் பரந்து விரிந்து இருந்தால் நம்மால் அதை தாங்க முடியாது இல்லையா? சிந்தித்து பார் தோழா ஆசையை அடக்க கற்றுக்கொள். தங்க முட்டை போடும் வாத்து கதை கேட்டு இருப்பாய், வாத்தை வைத்து வாழ பார். அதை கழுத்தை அருத்து கொண்டு விடாதே...

வா நண்பனே நீ ஒரு கை கொடு நான் ஒரு கை கொடுக்கிறேன் அனைக்கு முட்டுக் கொடுப்போம் அதைவிட அதற்கு வேறு பலம் தேவையில்லை.

என்றும் உன் இனிய நண்பன் 
சு.கோபிநாத்

முல்லை பெரியாறு - மேலும் சில கட்டுரைகள்

கேரள அரசுக்கு ஆப்பு வைக்கும் ''அணை 555''


டேம்- 999 படத்தின் பொய்பிரச்சாரத்திற்கு பதிலடியாக குறும்படம் வெளியீடு.


உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments