2012 ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள்லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் கோலாகல விழாவில் ஹுகோ படத்துக்கு 5 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன. உலகின் மிக பெரிய விருதான “ஆஸ்கார் விருது” வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் (26.02.2012)  நடந்தது.


இந்த விழாவில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தொடங்கிய கோலாகல விழாவில் ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டன.   அதில் “ஹுகோ” படத்துக்கு 5 விருதுகள் கிடைத்தன. சிறந்த ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்ஷன், சவுண்டு மிக்சிங், எடிட்டிங் மற்றும் சிறந்த விஷ்வல்எபெக்ட்ஸ் போன்றவற்றுக்கு வழங்கப்பட்டன.

ரெயில் நிலையத்தில் காணாமல் போகும் சிறுவனின் தவிப்பை இப்படம் சித்தரிக்கிறது. இந்த படத்தை டைரக்டர் மார்டின் ஸ்கார்ஸஸி இயக்கியுள்ளார். இது 11 விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

சிறந்த துணை நடிகைக்கான விருது ஆக்டாவியா ஸ்பென்சருக்கு கிடைத்தது. “தி ஹெல்ப்” என்ற படத்தில் இவரது சிறந்த நடிப்புக்காக விருது வழங்கப்பட்டது. தற்போது தான் இவர் முதன் முதலாக ஆஸ்கார் விருது பெற்றுள்ளார். “தி ஆர்டிஸ்ட்” படத்துக்கு சிறந்த காஸ்டியூம் டிசைனுக்கான ஆஸ்கார் விருது கிடைத்தது. இப்படம் 10 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

சிறந்த “மேக்அப்”க்கான விருது “தி அயர்ன் லேடி” என்ற படத்துக்கு வழங்கப்பட்டது. அதை ஒப்பனை கலைஞர்கள் மார்க்கூலியர், ஜெராய் ஹெலாண்டு ஆகியோர் பெற்று கொண்டனர். இப்படம் இங்கிலாந்து முன்னாள் பெண் பிரதமர் மார்க்கரெட் தாட்சர் பற்றிய கதையாகும்.

சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருது ஈரானின் “எ செப்பரேசன்” என்ற படத்துக்கு கிடைத்தது. சிறந்த எடிட்டிங்குக்கான “தி கர்ள் வித் தி டிராகன் டாட்டு” என்ற படத்துக்கு வழங்கப்பட்டது. அதை கிர்க் பாஸ்டர், ஆங்கஸ்வால் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சிறந்த அனிமேஷன் படமாக “ராங்கோ” தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

சிறந்த டாக்குமெண்டரி படமாக “அன்டி பீடெட்” தேர்வாகி விருது பெற்றது. சிறந்த துணை நடிகருக்கான விருது கிறிஸ்டோபர் பிளம்மருக்கு கிடைத்தது. “பிகின்னர்ஸ்” படத்தில் இவரது நடிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

-சத்யஜித்ரே


உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்