கருவாடும் - சுடுகாடும்


ஏய்
மீனவ நண்பா
வாழ்க்கையென்னும்
கடலை நீந்திக்
கரை சேர்ந்தவன்
வெற்றியாளன்....


ஆனால் நீயோ
கடலையே வாழ்க்கையாய்
கொண்டவன்

எங்களுக்கு
கடலுக்குள் எல்லை இல்லை

ஆனால் ...
உனக்கு கடலின்
எல்லையே தொல்லை

எப்போதும் நீதான்
எங்களைப் பிடித்துக்கொண்டு
செல்வாய் கரைக்கு...

இப்போது
உன்னையல்லவா
பிடித்துக்கொண்டு
செல்கிறார்கள் சிறைக்கு...

எங்களை
காப்பாற்றத்தான்
யாருமில்லை
உன்னையுமா ?....

கடலை விட்டு
கரைக்கு வந்தால் தான்
நான் கருவாடு
ஆனால்
உனக்கு
கடலே சுடுகாடு....

மே.இளஞ்செழியன்


உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்