''என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா?..... '' யாழ்பாணத்தமிழனின் கேள்வி



ரஜினியின் மருமகன் என்பதாலோ என்னவோ தனுஷ் தமிழ்மொழி மீது கொலைவொறியோடு பாய்ந்ததற்கு தமிழ்நாட்டில் தமிழ் அறிஞர்கள் எதிப்பு தெரிவிக்கவில்லை.
கொலைவெறி பாடலுக்கு இசையமைத்தது சொளந்தர்யாரஜினியின் மாமா மகன் என்கிறார்கள். பெரிய இடத்து ஆட்கள் என்பதலோ என்னவோ எதிப்பும் இல்லை, பாராட்டுகளோடு பிரபலமும்மாகிவிட்டது. இதில் இந்தியபிரதமர் மன்மோகன்சிங்கின் பாராட்டு வேறு!!! முல்லைப்பெரியாறுபிரச்சனையில் தமிழகமும்,கேரளாவும் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது பிரதமரின் இசை ஆர்வத்தை என்னவென்று சொல்ல?.
நம் தாய்மொழியை சிதைக்கும் பாடலை பாடிய நடிகர் மீது கிறுக்கு பிடித்து அலையும் தமிழ் ரசிகர்கள் திருந்த மாட்டார்கள் .ஆனால் யாழ்பாணத்தமிழர் கொலைவொறி பாடல் மெட்டிலேயே ''என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா?..... '' என்ற பாடல் ஒன்றை பாடி,இசையமைத்துள்ளார்.அந்த உணர்ச்சிமிக்க பாடல் வரிகள் இதோ...

பாடல் வரிகள்

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…

கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…

செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…

கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்

தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!

தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு

தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…

பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…


பாடல் வரிகள் மற்றும் இசை: எஸ்.ஜெ. ஸ்டாலின்


-சத்யஜித்ரே
நன்றி- 4 தமிழ்மீடியா
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments