அரவான் கதைவசனகர்த்தா சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதெமி விருது


சு.வெங்கடேசன் மதுரை - திருப்பறங்குன்றம் பகுதியில் உள்ள ஹார்விபட்டியை சேர்ந்த வர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்.மிக இளம் வயதில் (42),  1050  பக்கம் கொண்ட காவல்கோட்டம் நாவலுக்காக சாகித்யஅகாதெமி விருது பெற்று க்கிறார்.தமிழ்நாவல் வரலாற்றில் அழுத்தமான தடம் பதித்த காவல்கோட்டம் நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கிபி.1300 லிருந்து 1900  வரையிலான மதுரையின் வரலாற்று காலத்தை இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறார்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதுரையை கைப்பற்றுவதில் துவங்கி ரேகைச்சட்டத்தால் களப்பளியாகும் ஒரு மக்கள் குழுவின் வரலாறாகவும் இந்த நாவல் விரிகிறது.என்னதான் முயன்றாலும் ஆங்கிலேய மூளைகளால் கணித்திடவே முடியாத ஒரு எளிய ஆனால் வலுவான உள்ளுர் பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்வதாகவும் காவல்கோட்டம் நாவல் அமைகிறது.

இவரின் மற்ற படைப்புகள்..
.பாசிவெளிச்சத்தில்(1997),ஓட்டையில்லாத புல் லாங் குழல்(1989), திசையெ ல் லாம்  சூரியன் (1990), ஆதிப்பூதிர் (2000) போன்ற கவிதை தொகுதிகளும், கலாச்சாரத்தின் ஆரசியல் (2001),ஆட்சிதமிழ் ஒரு வரலாற்று பார்வை(2001) போன்ற கட்டுரைத் தொகுதிகளும் வெளியிட்டுள்ளார்.மதமாற்ற தடைச்சட்டம் மறைந்திருக்கும் உண்மைகள்(2003), மனிதர்கள்,நாடுகள்,உலகங்கள்(2003),கருப்பு கேட்கிறான் கிடா எங்கே?(2003),உ.வே.சா.சமயம் கடந்த தமிழ்(2005) போன்ற சிறு வெளியீடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்றை மையமாக கொண்டு எழுதப்பட்ட காவல்கோட்டம் என்ற நாவல் இவரின் மிகபெரும் முயற்சியாகும்.இந்த நாவலுக்காக கனடாநாட்டின் போத்தம் இலக்கிய அமைப்பு வழங்கி இயல்விருதினை பெற்றுள்ளார்

தமக்கு கிடைத்த விருது குறித்து சு.வெங்கடேசன்....

 தமது பத்தாண்டுகால உழைப்பிற்கும்,முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும்.தகுதியானதொரு படைப்புக்கு உரிய  காலத்தில் அங்கீகாரம் பெற்றதென்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பொதுவாக மூத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த விருது தற்போது அந்த எல்லைகளைக் கடந்து இலக்கியத் தகுதியை மட்டுமே மையமாகக்கொண்டு தேர்வு செய்யப்பட்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது.

அ.தமிழ்ச்செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்
 select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

காவல்கோட்டம் வாசித்தேன். இன்னும் பிரமிப்பு மறையவில்லை. சு.வெங்கடேசனுக்கு சாகித்யஅகாடமி பரிசு வழங்கப்பட்டது மகிழ்ச்சியைத் தருகிறது.மதுரையும், சமணமலையும் நாவலின் முக்கியமான களங்கள். கட்டாயம் மதுரைக்காரர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம். பகிர்விற்கு நன்றி.