பறக்கும் தட்டுகளில் வந்த வேற்றுக்கிரக மனிதர்களின் ஆபுர்வ புகைப்படங்கள்


நம் கண்ணுக்கு முன்னால் எல்லையற்று விரிந்து பரந்திருக்கிற பிரபஞ்சத்தில் நம்மைப்போன்ற மனிதர்கள் இருக்கிறார்களா, பூமியில் வாழ்கின்ற மனிதர்களாய் நாம் மட்டும் தனித்துவிடப்பட்டுள்ளோமா? என்பது ஒரளவு அறிவியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக நிண்ட நாள் கேள்வி. இந்தக் கேள்விகளை மையமாக கொண்டே மென்பிளாக், மார்ஸ்அட்டாக், அவதார்..... போன்ற படங்கள் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றன.மேலும் அறிவியல் முறையில் விடைகான வேற்றுகிரக மனிதர்களை தேடும் முயற்சி பல்வேறு விதமாக தொடந்து நடந்து கொண்டுதான் உள்ளது.  கெப்ளர் என்கின்ற தொலைநோக்கி வானிலிருந்து பிரபஞ்சத்தின் ரகசியங்களை கண்டுபிடிக்க அனுப்பட்டது.
கடந்த வார செய்தியான பூமியில் இருந்து சுமார் 600 ஒளி வருடங்களில் உள்ள ஒரு கோள்(கெப்ளர் 22 பி) கண்டு பிடிக்கப்பட்டது . இதுவரை கெப்ளர் 22 பி போல் சுமார் 1094 கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதும் முக்கியமான் ஒன்றாகும்.மேலும் கெப்ரல் தொலைகாட்டி மூலம் 2,326 புதிய கோள்கள் அறியப்பட்டுள்ளன. அவற்றில் 207 கோள்கள் பூமியை ஒத்தவை. பூமியை விட நான்கு மடங்கு பெரியவற்றை Super Earth என அழைக்கப்படவிருக்கின்றன.இதில் நீர் உள்ளதா, உயிர்கள் வாழ்கின்றனவா அல்லது வாழ இயலுமா என்பதெல்லாம் வரும் காலங்களில் அவிழ்க்கப்படும் முடிச்சுகள்
.

இதனிடயே பறக்கும் தட்டுகள் வருவதாக செய்திகள் பரபரப்புகள் அடிக்கடி ஏற்படுத்தப்படுகிறது. சில பறக்கும் தட்டுகளின் புகைப்படங்களும், வீடியோக்களும் கிடைத்துள்ளன. தற்போது National Geography  சேனல் மூலமாக வேற்றுகிரக மனிதர்களின் புகைப்படங்கள் வெளியியப்பட்டுள்ளது.

சில கேள்விகள்......

பூமிக்கு வரும் வேற்று கிரகமனிதர்கள் நம்முடன் ஏன் தொடர்பு கொள்வதில்லை?
அவர்கள் தொடர்பு கொள்கின்ற மொழியில்,அல்லது முறை நமக்குப் புரியவில்லையா?
அவர்கள் பூமிக்கு வந்து செல்வதன் நோக்கம் என்ன?
நம்மை சந்திப்பதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை?

 இந்த கேள்விகளுக்கான விடைகள் விரைவில் கிடைக்கலாம், வேற்றுகிரக மனிதர்கள் இருப்பது உண்மையானால் இன்னும் 10 ஆண்டுகளில் நிச்சயம் அவர்களுடன் நாம் தொடர்பு கொள்கின்ற வாய்ப்பு கிடைக்கும்.

அ.தமிழ்ச்செல்வன்.

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Sankar Gurusamy said…
சிலர் நாம் கும்பிடும் பல கடவுள்கள் வேற்றுகிரகத்தவர் என்றும் கூறுவது உண்டு.. நல்ல தகவல்கள்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/
இப்படங்கள் உண்மைதானா?
இவர்களை பற்றிய விரிவான ஆராய்ச்சி அவசியம்...



வாசிக்க:
ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...
Unknown said…
எல்லாம் கடவுள் செயல் தேவனாலே கூடாத காரியம் ஒன்றும் இல்லலை. அப்படி இருப்பது உண்மையானால் தேவனை வேண்டுவோம்.