விஸ்வரூபம் படத்தின் தரத்தை உயர்த்த கதக் கற்கும் கமல்!


பொதுவாகவே, தனது பாத்திரத்தை மெருகேற்கச் செய்ய உடலை குறைப்பது, ஏற்றுவது, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது என்று பெரும் கவனம் செலுத்துபவர் நடிகர் கமல்
ஹாசன்.அவர் நடித்து அடுத்தபடியாக வெளியாகப்போகும் படம் விஸ்வரூபம். அப்படத்தின் தயாரிப்பு வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அப்படத்தில் இடம் பெறும் பாடலொன்றில் அவர் கதக் ஆட வேண்டியுள்ளது. இதனால் கதக் கலையின் நவீன வடிவங்களைக் கற்றுக் கொள்ளும் வேலையில் கமல் கவனம் செலுத்துகிறார்.


கமலின் முதல் நடன அரங்கேற்றம்

இளம் வயதிலேயே திரைப்படத்துறைக்கு நடிக்க வந்துவிட்டாலும், நடனக்கலைஞராகவும் பணியாற்றினார். கிட்டத்தட்ட அனைத்து வகை நடனங்களிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார்.
சலங்கை ஒலி படத்திற்காக கதக், கதகளி போன்ற நடனங்களைக் கற்றுக் கொண்டார். தற்போது விஸ்வரூபம் படத்தில் ஒரு பாட்டிற்காக அவர் கதக் நடனமாட வேண்டியுள்ளது. ஏற்
கெனவே கதக் நடனத்தை அவர் கற்றுக் கொண்டிருந்தாலும் அதன் நவீன வடிவங்களைத் தற்போது கற்றுக் கொள்கிறார்
-சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்