வரிச்சியூர் மலைப்பயணத்தில்(கிரீன்வாக்) கலந்து கொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மழைபெய்து கொண்டுக்கிற நேரத்தில் இது போன்ற மலைப்பயணத்தை மேற்கொள்வது நல்ல அனுபவமாக இருக்கும் என்றார். இதை சில நண்பர்கள் கூட நினைவுபடுத்தினார்கள். முத்துப்பட்டி மலைப்பயணம் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.மழை குறித்து கடைசியில் பார்க்கலாம்.முதலில் முத்துப்பட்டி மலை குறித்து ......
முத்துப்பட்டி மலை.....
கி.மு.2ம் நூற்றாண்டில் சமணர்கள் வாழ்ந்த மலைப்பகுதியாகும். சமணப்படுக்கைகளும், குகைகளும் கொண்டதாக முத்துப்பட்டி மலை காணப்படுகிறது.
முத்துப்பட்டி மலையின் சிறப்பு அம்சமாக மகாவீரரின் புடைப்புச் சிற்பங்களும், தனிசிலையாகவும் காணப்படுகிறது. மேலும் புடைப்புச் சிற்பங்களுக்கு கீழே காணப்படும் வட்டெழுத்துக்களும், அதன் அருகே காணப்படுகிற பிராமி கல்வெட்டுக்களும் உள்ளன.
சமணர்களின் படுக்கைகள் பள்ளிக்கூடமாக மாறியது எப்படி.......
கிருத்துவுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகம் வந்த சமணத்துறவிகள் மலைக்குகைகளில் தங்கத் துவங்கினர்.சமணர்கள் வாழ்ந்த இடங்களை ''சமணப்பள்ளி'' என்றே அழைக்கிறார்கள். ''பள்ளி'' என்ற சொல்லுக்கு ''படுக்கை'' என்றே பொருள்.பள்ளியறை என்றால் படுக்கையறை என்று பொருள்.பள்ளிகொள்ளுதல் என்றால் உறங்குதல் என்று பொருள். ஆனால் சமணப்பள்ளி என்பது கல்விக்கூடம் என்ற பெருளிலேயே அழைக்கப்படுகிறது. சிறுபிள்ளைகளை பாடம் கற்க தங்கள் குகைகளுக்கு அழைத்துச்சென்ற சமணர்கள் அவர்களை பள்ளி தளத்தின் மீது(கற்படுக்கைகள் மீது) அமர வைத்து பாடம் கற்பித்தார்கள், அதனால் பள்ளியறையாக இருந்த பள்ளிதளம் பள்ளிக்கூடம் ஆயிற்று.தென் தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட சமணபள்ளிகள் இருந்துள்ளன.
கல்லூரி என்ற சொல்கூட ''கல்லூரி நற்கொடிலா''(995) என்ற சமண நூலாகியசீவகசிந்தாமணியிலிருந்து பெறப்பட்டது.''மாணாக்கன்,மாணக்கி'' ஆகிய வார்த்தைகள் சமண கல் வெ ட்டு களிலேயே காணப்படு கின்றன.ஆண் துறவிகளுக்கு இணையாக பெண் துறவிகளும் இருந்துள்ளனர்.இவர் களை கனகவீரக் குரத்தியர்,பட்டினக் குரத்தியடிகள் என கல்வெட்டுகள் குறிக்கின்றன.சமணத்தை போல வேறு எந்த மதங்களும் கல்விக்கு முக்கியதுவம் கொடுக்கவில்லை.மேலும் கல்வி கற்பதற்கு சாதியை அளவு கோலாகக் சமணம் ஏற்றுக்கொள்ளவில்லை.
பிற்காலத்தில் சமணத்திற்கென்றே ''வாக்தேவி''என்ற தெய்வமும் பிறந்தது. அதுவே வைதிக நெறியின் ''சரஸ்வதி'' க்கு முன்னோடியாகும் என அறிஞர்கள் கருதுவர். சரஸ்வதிக்குரிய வெள்ளுடை என்பது சமணப்பெண் துறவிகளின் வெள் ளையாடை மரபிலிருந்து வந்ததாக இருக்க லாம்.இன்று மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படும் தீபாவளி சமணமத்தின் 24ம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் இறந்த நாளாகும், அதையே வைதிக மரபுகள் நரகாசுரன் அழிந்த நாள் என்கின்றன.தமிழகத்தின் தென்மாவட்டங்களில் காணப்படும் இயக்கி வழிபாடு, மதுரை, முகவை மாவட்டங்களில் காணப்படும் சாத்தான்(ஐயனார்) வழிபாடு,முனீஸ்வரன் என்றும் தவசி என்றும் வழங்கப்படும் நிர்வாணத் துறவிகளின் சிலைகள் அனைத்தும் சமணதீர்த்தங்கரர்களின் சிலைகளே ஆகும்.
தகவல்கள்
பண்பாட்டு அசைவுகள்
தொ.பரமசிவன் நூலிலிருந்து..
மழையும் - மலையும்......
''வெயில் எவ்வளவு அடிச்சாலும் தாங்கலாம், மழையில் கொஞ்சநேரம் நிற்க முடியலேயே ?'' என்பார்கள், அதை முத்துப்பட்டி மலைப்பயணத்திற்கு வந்த நண்பர்கள் மாற்றிக்காட்டினார்கள். மழையில் நனைந்துகொண்டே சமணர்கள் வாழ்ந்த இடத்தில் உணவருந்தியதும், எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன், தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், புதிய நண்பர்களுடன், கூடுதல் நேரம் பேசிப்பழகவும் வாய்ப்பாகவே அமைந்தது.சில நண்பர்கள் மழையில் நனைந்து கொண்டே புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள், அதிலும் சிறுவன் ஒருவன் மழையில் நடனமாடியதும் மறக்கமுடியாத நிகழ்வு.மேகம் தழுவிகொண்டிருந்த மலைகள், மழைத்தூரல், பசுமையான காட்சிகள், குளிர் என உள்ளம் குளிந்த நிகழ்வாக முத்துப்பட்டி மலைப்பயணம் அமைந்தது.
படம் விளக்கம்
1.முத்துப்பட்டி மலை
2. மகாவீரர் புடைப்பு,தனிச்சிற்பங்கள்
3. சமணப்படுக்கைகள்
4. மேலே வட்டெழுத்து, கிழே தமிழ் பிராமி எழுத்துக்கள்
5. மழையில் நனையும் சிறுவன்
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
அ.தமிழ்ச்செல்வன்
மேலும் சில மலைப்பயணங்கள்.....
Comments
புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றி
-முனைவர் தி.நெடுஞ்செழியன்