கேரள அரசுக்கு ஆப்பு வைக்கும் ''அணை 555''


முல்லைப்பெரியாறு தமிழ்நாடு கேரள மக்களிடயே பெரும் பிரச்சனையாக உருவெடுத்த காரணங்களில் முக்கியமானது டேம் 999 படமும் ஒன்று.
அறிவியல் ஆதாரமற்ற கருத்துக்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு பதிலடியாக அணை விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்பதை விளக்கும் படமாக ’அணை 555’  என்ற படம் வெளிவரஉள்ளது .இந்திய குற்றவியல் கழகத்தின் மதுரை கிளையானது தனது சொந்த நிதியில் இருந்து டேம் 999 படத்துக்கு பதிலடியாக ’அணை 555’ என்ற

திரைப்படத்தை தயாரிக்க, பாரதிராஜா, தங்கர்பச்சான் ஆகிய முன்னனி இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார் இந்த அமைப்பின் மதுரைக் கிளைச் செயலாளர் கோபிநாத்.

இவர் மேலும் கூறும்போது

“முல்லை பெரியாறு அணை பற்றி தமிழ்நாடு மூத்தபொறியாளர் சங்கம் ஒரு ஆவணபடத்தை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணபடத்தின் குறுவட்டுகளை அச்சடித்து தேனி மற்றும் அதைச்சுற்றியுள்ள ஆறுமாவட்டமக்களுக்குவழங்க இருக்கிறோம். முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் உண்மை நிலைஎன்ன, அணை எத்தனை உறுதியானது என்பதை வெட்டவெளிச்சம் ஆக்கியிருக்கிறது இந்த ஆவணபடம்.  இந்த ஆவணபடத்தை  அடிப்படையாகவைத்து ‘அணை 555‘ என்றமுழு நீள திரைபடத்தை எடுக்க திட்டமிட்டு முன்னனி இயக்குனர்களான பாரதிராஜா, தங்கர்பச்சான் இருவரிடமும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளோம். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிராஜா இந்தப் படத்தை இயக்கித்தந்தால் இன்னும் உணர்வு பூர்வமாக இருக்கும்.

விரைவில் படப்பிடிப்பை தொடங்கி ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட விரும்புகிறோம். டேம் 999 படத்தில் முல்லை பெரியாறு அணை உடைந்து பேரழிவு ஏற்படுவது போல காட்டப்பட்டுள்ளது. ஆனால் ‘அணை 555‘ திரைபடம் உண்மையின் ஆவணமகா இருக்கும். இதில் அந்த பகுதி விவசாயிகளே நடிகர்களாக வாழ்ந்து காட்டுவார்கள்” என உணர்ச்சி பொங்க சொல்கிறார்.முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழகத்திற்கு சாதகமாகதான் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்,அப்படி வந்தாலும் கேரள அரசு அதை நிறைவேற்றாது.  தமிழக பகுதியில் உற்பத்தியாகும் முல்லைபெரியாறு நதி கேரள பகுதியில் வரும் வழியில் அடந்த காட்டுப்பகுதியில் பல உடைப்புகளை ஏற்படுத்தி முல்லைபெரியாறு அணைக்கு வரும் தண்ணீர் அளவை ஏற்கனவே குறைத்துவிட்டார்கள் என்பதே உண்மை. இத்தனை ஆண்டுகளாக திருட்டுத் தனமாக தமிழக அரசை ஏமாற்றிய கேரள அரசும், இதை கண்டுகொள்ளாத தமிழக அரசுகளுமே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு காரணம்.மக்கள் போராட்டமே வெல்லட்டும்.

-அ.தமிழ்ச்செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

விரைவில் படம் வெளிவந்து கேரளாவின் முகமூடி கிழிய வேண்டும்
Hotlinksin.com said…
வித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.
asalam said…
எல்லாம் உண்மையைத்தான் சொல்லி இருக்கிறீர்கள். இனி நடப்பது எல்லாம் இனிதே நல்லதாக நடக்க
இறைவனை பிராதிப்போம்.