விஸ்வரூபம் கதாநாயகியும் - கமல், விஜய் டான்ஸும்



கமல் படங்களில் கதாநாயகியை முடிவு செய்வதில் இத்தனை இழுவை ஏற்பட்டதில்லை. ஆனால் விஸ்வரூபம் படத்துக்கு அத்தனை இழுவை.
முதலில் தபங் நாயகி சோனாக்ஷி சின்கா,  அப்புறம் அனுஷ்கா,  அதற்கும் பிறகு வித்யா பாலன்,  கடைசியாக சமீரா ரெட்டி என பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
ஆனால் தற்போது அமெரிக்காவில் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டு, பாலிவுட் மற்றும் அமெரிக்க இந்தியர்கள் இயக்கும் ஆங்கிலக் கலைப்படங்களில் நாயகியாக நடித்து புகழ்பெற்றிருக்கும் பூஜா குமாரை  விஸ்வரூபம் படத்திற்காக ஒப்பந்தம் செய்து அவருடம் முதல்கட்ட படப்பிடிப்பையும் முடித்து திரும்பிவிட்டார் கமல்.



இது குறித்து பூஜா குமார் தனது டுவிட்டர் இணையதளத்தில் உற்சாகமாக டுவிட் செய்துள்ளார்!  " டாம் குரூஸ் படத்திற்கு நாயகியாக நடிக்க கேட்டால் எவ்வளவு சந்தோஷப்படுவனோ அதைப் போல் கமல் சார் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன உடன் சந்தோஷப் பட்டேன். எதற்காக என்னை படத்தின் நாயகி ஆக்கினார் என்று நான் கேட்கவில்லை.
எனது முந்தைய ஜென்மத்தில் ஏதோ நல்லது செய்து இருக்கிறேன் அதனால் தான் இந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. கமல சார் ஒரு லெஜெண்ட். படத்தின் பாத்திரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்வார். கமல் சாருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை எனக்கான அதிஷ்டமாக நினைக்கிறேன்” என்கிறார் பூஜா குமார்.

கமல், விஜய் டான்ஸ்


 கமல் இம்முறை தனது 57 வதுபிறந்த நாளை முழு புத்துணர்ச்சியுடன் கொண்டாடி இருக்கிறார்.
கமல் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஹைலைட்டாக கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக் ஆகியிருகிறது, கமல் விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து ஆடியிருக்கும் கலக்கல் நடனம்.
கமல் பிறந்தநாள் பார்ட்டியில்தான் விஜயும் கமலும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கிறார்கள். அந்த டான்ஸ் பார்ட்டி புகைப்படத்தை விஜயின் உதவியாளர் தனது மொபைல் போனில் படமெடுத்து கோலிவுட் செய்தியாளர்களுடன் பகிர்ந்துள்ளார். பொதுவாக மாஸ் ஹீரோக்கள் தங்கள் ஈகோவை தூரமாக தூக்கி வைத்து விட்டு இப்படி சேர்ந்து நடனமாடுவது பாலிவுட் வழக்கம். இந்த நல்ல விஷயத்துக்கு கமலும் விஜயும் பிள்ளையார் சுழி போட்டிருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
தொகுப்பு 
- சத்யஜித்ரே

Comments

கமல்ஹாசனின் விஸ்வரூபம் எப்பொழுது திரைக்கு வரும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். கமலும் விஜயும் ஆடும் படத்தில் கமலின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. கமல்ஹாசன் தன்னை தானே வரைவது போன்ற சித்திரம் பொக்கிஷம். கமல்ஹாசன் தன் படங்களில் சித்திரக்காரர்களையும், சித்திரங்களையும் பயன்படுத்தியதை குறித்த பகிர்வை வாசிக்க 'அபூர்வ சகோதரர் கமல்ஹாசன்'
www.maduraivaasagan.wordpress.com

நன்றி