எனது நடிப்பில் வரும் ஒவ்வொரு படத்தின் வசூலையும் அடுத்த படம் தாண்ட வேண்டும் - சூர்யா


தீபாவளிக்கு வெளியான படங்களில் 75 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்திருகிறது 7-ஆம் அறிவு. ஆனால் விஜயின் வேலாயுதம் 45 கோடியைத் தாண்டமுடியவில்லை.
ஏழாம் அறிவு இன்னும் சில தினங்களில் எந்திரனின் வசூலை மிஞ்சிவிடும் என்று ஃபாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்து வரும் சூழ்நிலையில்,


சூர்யா பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து பேசும்போது


 “ படம் எவ்வளவு வசூல் செய்து இருக்கிறது என்பதை தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூற வேண்டும். எனது நடிப்பில் வரும் ஒவ்வொரு படத்தின் வசூலையும் அடுத்த படம் தாண்ட வேண்டும் என்று நினைப்பேன்.
அதைப் போல எனது 'சிங்கம்' படத்தின் வசூலை இப்பவே 7ஆம் அறிவு படம் தாண்டி விட்டது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. 7- ஆம் அறிவு படத்தில் போதிதர்மன் காஞ்சிபுரத்தில் வாழ்த்தாக காட்டி இருப்போம்.
அதைப் போலவே தெலுங்கிலும் அப்படித்தான் காட்டி இருக்கிறோம். தேவையில்லாமல் தெலுங்கில் வெளியான படத்தில் குண்டூரில் வெளியானது போல் காட்டி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.இதும போன்ற செய்திகள் முற்றிலும் தவறானவை. படத்தினை பார்த்துவிட்டு பேச வேண்டும். தெலுங்கு படத்தினை பார்க்காமல் செய்திகளை பரப்புகிறார்கள். இந்தியில் நாங்கள் இன்னும் படத்தினை வெளியிடவே இல்லை. அதற்குள் இந்தியில் போதிதர்மன் தாராவியில் பிறந்து இருப்பது போல் காட்டி இருக்கிறார்கள் என்று செய்தி நிலவி வருகிறது. எப்போதுமே எனது படத்தினை முதல் 10 நாட்களுக்குள் தியேட்டரில் போய் பார்க்க மாட்டேன். சில காட்சிகளை இன்னும் கொஞ்சம் நல்ல செய்து இருக்காலமே என்று தோன்றும்.
                            முதன் முறையாக ரஜினி சார் வெளியே வந்து பார்த்த படம் ஏழாம் அறிவு. படத்தை பார்த்து பெண்டாஸ்டிக் பிலிம் என்று கட்டிபிடித்து பாராட்டினார். அவரிடம் நிறைய நேரம் பேச எனக்கு நேரம் அமையவில்லை. கமல் சார் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவரை பார்க்க சென்றேன். அப்போது என்னை மிகவும் பாராட்டினார். எனது அப்பா  7ஆம் அறிவு படத்தை பார்த்து விட்டு நான் புதிதாக இருக்கும் பெசண்ட் நகர் வீட்டிற்கு வந்து கட்டிபிடித்து அழுது பாராட்டியது எனது வாழ்நாளிலும் மறக்க முடியாத நிகழ்வு.

நான் டிவிட்டர் ,ஃபேஸ்புக் இணையத்தில் எல்லாம் இல்லை. இணையத்தில் அனைவரும் வெவ்வேறு விமர்சனங்கள் வந்து இருக்கின்றன. அவ்வளவு நிறை குறைகள் அனைத்தையும் நான் ஏற்கிறேன். இனிமேல் வரலாற்று படங்களில் நடிப்பீர்கள் என்று கேட்கிறார்கள். இப்படத்தில் முதல் 20 நிமிட காட்சிகளுக்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. ஒரு பெரிய இயக்குனர் என்னிடம் ஒரு வரலாற்று கதை கூறி இருக்கிறார். இடைவேளை வரை நன்றாக இருந்தது.அதற்கு பிறகு தயார் செய்து வருகிறார். அனைத்தும் நல்ல விதமாக அமைந்தால் அப்படத்தில் நடிப்பேன். எனது படங்களுக்கு நான்தான் கதை கேட்கிறேன். இயக்குனர் வஸந்த் கதை கேட்டு நான் நடித்தால் இன்னும் சந்தோஷப்படுவேன்.
           விஜய் சார் இன்னும் 7ஆம் அறிவு படத்தினை பார்க்க வில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவரது மனைவிக்கு ஜோ டிக்கெட் கொடுத்து படத்தினை பார்க்க வைத்திருக்கிறார். " ஒரு படத்திற்கு என்னமா உழைத்து இருக்கிறீர்கள்?!" என்று மெசேஜ் அனுப்பி இருந்தார். சந்தோஷமாக இருந்தது.
நானும் இன்னும் வேலாயுதம் படத்தினை பார்க்க வில்லை. வேலாயுதம் ஒரு மசாலா படம் என்றால் 7ஆம் அறிவு வேறு விதமான படம். எனக்கும் மசாலா படங்களில் நடிப்பது மிகவும் பிடிக்கும். நானும் இதுவரை பல படங்களில் நடித்து இருக்கிறேன். இரண்டு விதமான படங்களும் மாறி மாறி செய்ய வேண்டும் என்று நினைப்பேன். 'மாற்றான்' படத்தினை தொடர்ந்து மசாலா படத்தில் தான் நடிக்க இருக்கிறேன்.

'மாற்றான்' படத்தில் ஒரு உருவம் இரண்டு தலை உள்ள ஒருவனாக நடிக்கிறேனா என்று கேட்கிறார்கள். அதை பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது. கோடை விடுமுறைக்கு இந்தப்படம் வெளிவர இருக்கிறது. ஹரி படத்தினை பற்றி முழுத்தகவலும் இன்னும் ஒரிரு வாரங்களில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியாகும்" என்று பேசினார்.

புகைப்படங்கள் - tamilwire.com
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments