டேம்- 999 படத்தின் பொய்பிரச்சாரத்திற்கு பதிலடியாக குறும்படம் வெளியீடு.


இந்தியா முழுவதும் இன்று விவாதிக்கப்படும் செய்தியாக மாறியுள்ளது மூல்லைபெரியாறு பிரச்சனை. கேரளாவில் அணையை உடைக்க கோரி பந்த் நடைபெற்று வருகிறது. அந்த மாநில முதல்வர் புதியஅணை கட்டுவது உறுதி என கூறிவருகிறார். தமிழக முதல்வர் மத்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழகம்,கேரளத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள இப்பிரச்சனையில் அணையை உடைக்கம் செயலுக்கு கேரளமக்களை துண்டிவிடும் படமாக டேம்- 999 வெளிவந்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்ள ஆவணப் படம் ஒன்றைத் தயாரித்துள்ளது தமிழக அரசின் பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்.

முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் காணக் கிடைக்கிறது. படித்தவர்-பாமரர், தமிழர் - மலையாளி என்ற பேதமின்றி, யோசிக்கத் தெரிந்த அத்தனைப் பேரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்தப் படம் அமைந்துள்ளது.

படத்தை பார்க்க கீழே கிளிக் செய்யவும்

The Mullai Periyar DAM Problem


இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை.  42 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக வெளிவந்திருக்கிறது.
இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்
அனைத்து இணையதளங்களும் தங்களின் தலையாய கடமையாக இந்தப் படத்தை வெளியிட வேண்டும்.  என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
.-சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

அந்த குறும்படம் பார்த்தேன்... அதில் சொல்வது போல ஆபத்து இல்லையென்றே நினைக்கிறேன்.


எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு
Anonymous said…
avasaram avasaram mudhalil indha ponnana video vai
youtube il upload seiyyavum english & malayalam titlegaludan
surendran
Anonymous said…
nandri solla marandhdhuvitaen migavum arumayagavum aakkapoorvamagavum ulladhu nandri vaazhththukkal

pinkurippu : indhdha mullaiperiyar aavanapadaththai tholaikaachchigalilum thiraiaranguglilum velieda vendum avasaramaga idhdhi mudhalil seiyyavum
surendran