தமிழகத்திற்கு இன்றைய நேற்றைய முதல்வர்களை கொடுத்தது சினிமாதான். ஏன், நாளைய முதல்வர்களை தமிழ்சினிமா உருவாக்கி கொண்டிருக்கிறது. எதிர்கால முதல்வர் நாற்காலி கனவுகளோடு பல நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த அக்டோபர் 31 தேதியோடு தமிழில் பேசும் படத்திற்கு வயது 80 ஆகிறது.தமிழின் முதல் பேசும் சினிமா ‘காளிதாஸ்’ 1931ம் ஆண்டு தயாராகி வெளியானது. வட சென்னையில் முருகன் தியேட்டர் என்று அறியப்பட்ட கினிமா சென்ட்ரலில் இந்தப் படம் வெளியானது.
டிபி ராஜலட்சுமி, பிஜி வெங்கடேசன், ராஜாம்பாள், சுசிலா தேவி, எல் வி பிரசாத், எம்எஸ் சந்தானலட்சுமி உள்ளிட்டோர் நடிக்க, மதுரகவி பாஸ்கர தாஸ் கதை, பாடல்கள், இசை ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றிருந்தார். ஹெச் எம் ரெட்டி இயக்கினார். அர்தேஷ்ரி எம் இராணி தயாரித்த இந்தப் படம்அக்டோபர் 31ம் தேதி வெளியானது.
மும்பையில் தயாரான இந்தப் படத்தின் ரீல் பெட்டிகளை ரயிலில் சென்னை கொண்டுவந்த போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி மலர் தூவி, மேள தாளம், தாரை தப்பட்டை முழங்க, குதிரை வண்டியில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு போய் கொண்டாடினார்களாம்.இப்போது தமிழகத்தில் மட்டுமல்லாது உலகமுழுவதும் உள்ள தமிழர்களுக்கு சினிமா மீதான ஆர்வம் அதிகமாகவே உள்ளது.
தமிழ்சினிமாவை முழுமையாக புரிந்து கொள்ள வரலாற்று நூல் ஒரு பார்வை...
ஒரு வகையில், இந்நூல் தமிழ் திரைப்பட உலகின் வரலாறு எனலாம்; ஆயினும் சரியாகச் சொல்வதானால் வரலாற்றுப் பார்வையில் தமிழ்த் திரைப்பட உலகம் பற்றிய ஒரு பருந்துப்பார்வை என்பதே பொருத்தமானது.
1909ஆம் ஆண்டு ரகுபதி வெங் கையா நாயுடு, சென்னையில் கட்டிய ‘கெயிட்டி’ தியேட்டர் தொடங்கி நூற்றாண்டை தொட்டுவிட்ட தமிழ் திரைப்
பட வரலாறு நம்மை வியக்க வைக்கிறது. 1917ஆம் ஆண்டு நடராஜ முதலியார் தயாரித்த முதல் மவுனப்படமான திரௌபதியின் வஸ்திராபஹரணம் 1924 வரை ஓடியதையும், திரௌப தியை துகிலுரியும் மேலும் இரண்டு படங்கள் தயாரிக்கப்பட்டதையும் நூலா சிரியர் தகவலாகக் கூறுவதுடன் ஒரு கேள்வியையும் எழுப்புகிறார், “மகா பாரதத்திலும் எத்தனையோ அம்சங் கள் இருக்க திரௌபதி துகிலுரியப் படும் பகுதியை மட்டும் ஏன் இவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்?”. நியாய மான கேள்வி. துகிலுரிவது தமிழ் திரைப்படத்தில் இன்னும் முடிந்த பாடில்லையே!
திரைப்படத்தை பற்றி சரியாக உள் வாங்க வெறுமே அதன் கதை அறிந் தால் போதாது; கேமரா பற்றிய அடிப் படை ஞானம் வேண்டும், திரைக்கதை குறித்த புரிதல் வேண்டும், எடிட்டிங் என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நூலாசிரியர் பாலு மணிவண்ணன் நூலின் தொடக்கத்தில் இவற்றை எளிமையாக ஆனால், அழுத் தமாக பதிவு செய்துள்ளார். அது தமிழ் திரைப்பட வளர்ச்சிப் போக்கை உள் வாங்க பெரிதும் உதவி செய்யும்.
தமிழ் திரைப்பட உலகம் தமிழ் சமூகம் மீது ஏற்படுத்தி உள்ள பாதிப் புகளை, வடுக்களை, மயக்கங்களை, மிகவும் கவலையோடும் ஆழ்ந்த சமூக அக்கறையோடும் நூல் நெடுக நூலா சிரியர் பதிவு செய்துள்ளார். தமிழ்த் திரைப் பட ஊடகத்தின் ராட்சச வலிமையைக் கண்டு வியந்தும், பயந்தும் தமிழ் சமூக த்தை அவர் எச்சரித்து எழுதி இருப் பதை வாசகர்கள் கட்டாயம் படித்தாக வேண்டும்.
1932களிலேயே மேனகா படத்தில் 12 முத்தக் காட்சிகள் இடம் பெற்றிருந்த தையும் அன்றே ஆபாசம் தமிழ் திரை உலகில் புகுந்துவிட்டதையும் எடுத்துக் காட்டுகிறார். அதே சமயம் கே. சுப்பிர மணியம் என்பவர் முயற்சியால் ‘தியாக பூமி’ போன்ற முற்போக்கான திரைப்பட முயற்சிகளும் அப்போதே தொடங்கி விட்டதை பெருமையோடு பதிவு செய்துள்ளார்.
சத்தியமூர்த்தி திரைப்படத்தை காங்கிரஸ் பிரச்சாரத்துக்கு தேசபக்த பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியதை கூறுகிற நூலாசிரியர், அதன் பின்னர் காங் கிரஸ் கட்சி திரைப்படத்தின் ஆற்றலை உணராது புறந்தள்ளிவிட்டதை வேத னையோடு சுட்டிக்காட்டுகிறார். இந்த இடத்தில் சத்தியமூர்த்தி மிகவும் முற் போக்காளர் என்ற தோற்றம் ஏற்பட்டு விடும் அபாயம் இந்நூலில் உள்ளது. உண்மையில் சத்தியமூர்த்தி வர்ணாஸ் ரம ஆதரவாளர், சமஸ்கிருத வெறியர், மநுவின் சீடர், தேவதாசி முறையை ஆதரித்தவர். குழந்தைத் திருமண தடைச்சட்டம் வருவதை அறிந்து தம் வீட்டு பெண் குழந்தைகளுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்தவர். இதை போகிற போக்கிலாவது கூறியிருக்க வேண்டும் நூலாசிரியர்.
திராவிட இயக்கம் திரைப்பட பூதத் தின் மந்திர சக்தியை சரியாக இனங் கண்டு தன் கையில் எடுத்துக் கொண் டதை; அண்ணா, கருணாநிதி உட்பட பலர் அதில் ஈடுபட்டதை; திரைப்பட கலைஞர்கள் திமுக அரசியலில் ஈடு பட்டதை வரலாற்றுச் செய்திகளோடும் தமிழ் சினிமா தகவல்களோடும் வலு வாகவே நூலாசிரியர் தந்துள்ளார். கட்டா யம் தமிழ் கூறும் அறிவுலகம் அறிய வேண்டிய செய்திகள் இவை. அதே சமயம் தமிழ்த் திரைப்பட உலகம் முதல் வர்களை உருவாக்கியது என்று வாதிடு வதும்; திரைப்பட உலகம் தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கிறது என்கிற தொனியும் மத்திய தர வர்க்கத்தின் லிஸ் டைன் (அவநம்பிக்கை) பார்வையாகும். நூலாசிரியருக்கும் அது நேர்ந்துள்ளது.
திராவிட இயக்கத்தின் வளர்ச்சி திரைப்பட உலகில் ஆழமான தாக் கத்தை உருவாக்கியது என்பது உண் மையே! சிந்தனைத்தளம், பண்பாட்டுத் தளம் என பல தளங்களில் திராவிட இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தை ஒத் ததே இது. ஆற்றல் மிக்க வெகுஜன ஊட கம் திரைப்படத்துறை என்பதால் இந்தத் தாக்கம் வலுவாகவும் ஆழமாகவும் விரி வாகவும் ஏற்பட்டது. திராவிட இயக்கம் திரைப்படத்துறையில் ஆழக் கால் பதித் ததும்; அது அதன் வளர்ச்சிக்கும் பிரச் சாரத்துக்கும் துணையானதும் உண் மையே. அரசியல் வளர்ச்சிப் போக்கில் திரைப்படத்துறையின் ஆற்றலும் ஒரு காரணியாக பயன்பட்டதே அல்லாமல் திரைப்படங்களே தமிழக அரசியலை தீர்மானித்துவிடவில்லை; தீர்மானித்து விடவும் முடியாது, இந்நூலாசிரியரோடு நாம் இவ்விஷயத்தில் மாறுபட வேண்டி உள்ளது.
நாடகத்தனமான திரைப்படங்கள் திரைமொழியை புரிந்து கொள்ள ஸ்ரீதர் வரவேண்டி இருந்தது. அதன்பின் அடுத் தடுத்து மாறுதல்கள், பாலச்சந்தர், பாலு மகேந்திரா, பாரதிராஜா, அடடா... இன்று தமிழக இளைஞர்கள் திரைப்பட உல கில் நாள்தோறும் புதுமைகளை புகுத் திய வண்ணம் உள்ளனர். இவற்றை பாலு மணிவண்ணன் சாதாரண வாசக ரும் புரிந்து கொள்ளும் எளிய நடையில் கைதேர்ந்த வார இதழ்களின் பாணியில், ஆனால், சமூக அக்கறை சற்றும் குறை யாமல் எழுதியிருப்பது மிகச் சிறப்பு.
இந்த சுவடுகளையும், திருப்பு முனைகளையும் சும்மா டைரிகுறிப்பு கள் போலவோ, தகவல் குறிப்புகளா கவோ எழுதிச் செல்லாமல், தமிழ் திரைப் பட உலகம் நடந்து வந்த பாதை நெடுகி லும் எதிர்கொண்ட பிரச்சனைகள், பதித்த முத்திரைகள், அதன் சமூக எதி ரொலிகள் என அக்கறையோடு குழைத்து இந்நூல் நெடுக பேசுகிறார் நூலாசிரியர்.
பாலச்சந்தர் பற்றிய மதிப்பீட்டில் இன்னும் கூர்மை வேண்டும். அவர் சாதித்ததும் அதிகம். அதே சமயம் ‘சைல ண்ட் கில்லர்’ என்று கூறுவதுபோல விதைத்த ‘பிராமணிய கருத்தோட்டங்க ளும்’ அதிகம் ஆபத்து விளைத்தவை. நூலின் வரைவெல்லைக்குள் இவை இல்லை என்பதால் மணிவண்ணன் இதை சொல்லாமல் விட்டிருக்கக் கூடுமோ?
பொதுவுடைமைவாதிகள், முற்போக் காளர்கள் செய்த முயற்சிகளும் அதற்கு நேர்ந்த விபத்துகளும் அல்லது அதற்கு எதிராக சூழ்ச்சிவலை பின்னப்பட்டதும் இந்நூலில் உள்ளது. தமிழக அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் திரைப் படத்துறை வலிமையுடன் செய்து வரும் நாசங்களை அழிவுகளை இனங்காட் டியும்; செல்ல வேண்டிய ஆக்கபூர்வ திசையை சுட்டிக்காட்டியும் இந்நூல் விரிகிறது. வெற்றிகளையும் சாதனைக ளையும் எடுத்துக்காட்டுவதுடன் வேத னைகளையும் சோதனைகளையும் சுட்டிக்காட்டுவதும் இந்நூலின் சிறப்பு. இளையதலைமுறை அவசியம் படிக்க வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று எனில் மிகை அல்ல.
சினிமா... சினிமா,
பாலு மணிவண்ணன்.
பாவை பப்ளிகேஷன்ஸ், 142. ஜானிஜான் கான் சாலை,
இராயப்பேட்டை, சென்னை 14, பக். 164 விலை ரூ. 75
விமர்சனம் எழுத
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
நன்றி தீக்கதிர்
தொகுப்பு சத்யஜித்ரே
Comments