கமல்ஹாசன் சாதனைகளில் 57 குறிப்புகள்
1 முதல் படம் களத்தூர் கண்ணம்மா
2 முதல்படம் வெளியான ஆண்டு 12-08-1960
3 சிவாஜியுடன் நடித்த முதல் படம் பார்த்தால் பசி தீரும்
4 எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் ஆனந்த ஜோதி
5 ஜெயலலிதாவுடன் முதல் படம் உன்னை சுற்றி உலகம்
6 முதல் மலையாளப் படம்(குழந்தை நட்சத்திரமாக) கண்ணும் கரளும்
7 முதல் ஹிந்திப்படம் ஏக் துஜே கேலியே
8 முதல் வங்க மொழிப் படம் கபிதா
9 முதல் கன்னடப் படம் கோகிலா
10 முதல் தெலுங்குப் படம் பொன்னி
11 கதாநாயகனாக நடித்த முதல் படம் பட்டாம்பூச்சி
12 முதல் இரட்டை வேடம்(குழந்தை நட்சத்திரமாக) பார்த்தால் பசி தீரும்
13 முதல் இரட்டை வேடம்(கதாநாயகனாக) சட்டம் என் கையில்
14 மூன்று வேடங்களில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள்
15 நான்கு வேடங்களில் நடித்த படம் மைக்கேல் மதன காமராஜன்,10 வேடங்கங்களில் நடித்த படம் தசவதாரம்
16 பாலச்சந்தர் இயக்கத்தில் முதல் படம் அரங்கேற்றறம்
17 பாரதிராஜா இயக்கத்தில் முதல் படம் பதினாறு வயதினிலே,அதிகப் படங்களில் கமலுடன் ஜோடியாக நடித்த
நடிகை ஸ்ரீதேவி 24 படங்கள்.
18 வில்லனாக நடித்த முதல் படம் சொல்லத் தான் நினைக்கிறேன்.கதாநாயகனாக இருந்து மீண்டும் வில்லனாக நடித்த முதல் படம் சிவப்பு ரோஜாக்கள்.
19 மங்கம்மா சபதம் படத்திற்காகத் தான் முதல் முறையாக தமிழில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டது.
20 மொரீஷீயஸ் திரைப்பட விழாவில் நுழைந்த படம் வறுமையின் நிறம் சிவப்பு.
21 இந்தியாவிலேயே கண்தானம்,ரத்ததானம் செய்த முதல் நடிகர் கமல்ஹாசன்.
22 மத்திய அரசின் பிராந்திய மொழிகளுக்கான விருதுகள் அபூர்வ ராகங்கள், தேவர் மகன், மகா நதி, நம்மவர்.
ஆந்திர அரசின் விருது மூன்று முறைப் பெற்ற முதல் தமிழ் நடிகர். சாகர சங்கமம், சுவாதி முத்தியம், இந்திருடு சந்திருடு.
23 பிற நடிகர்களுக்காக பின்னணி பாடியப்படங்கள் சரணம் ஐயப்பா, ஓ மானே மானே, உல்லாசம்.
24 கமலின் 100வது படம் ராஜ பார்வை, குள்ளமாக நடித்த முதல் படம் புன்னகை மன்னன்.
25 கமல் திரைக்கதை, வசனம் எழுதி தாயாரித்த முதல் படம் ராஜ பார்வை.
திரைக்கதை மட்டும் எழுதியப்படங்கள் சத்யா,இந்திரன் சந்திரன், சதி லீலாவதி, விக்ரம்,அபூர்வ சகோதரர்கள்.
26 ராஜ பார்வை திரைப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்களித்தது.
27 ரஜினியுடன் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள்
28 அபூர்வ ராகங்கள் படத்திற்காக முறைப்படி மிருதங்கம் கற்றுக் கொண்டார்.
29 பாலமுரளி கிருஷ்ணா உதவியுடன் முறைப்படி சங்கீதம் பயின்றவர்.
30 சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிற்கே செலவு செய்யும் ஒரே நடிகர்.
31 கமல் தன்னைவிட வயது மிகுதியுள்ள ஹேமமாலினி,ஷீலா, சுமித்ரா, லெட்சுமி விதுபாலா, வாணி கணபதி,
ஸ்ரீவித்யா,ஜெயபாரதி,ஆலம் மஞ்சுளா, சுஜாதா, டிம்பிள் காம்போடியா ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார்.
32 முத்தக்காட்சிகளில் அதிகம் நடித்தவர் கமல் ஒருவரே.
33 முதன் முதலில் முத்தக்காட்சி நடித்தப் படம் சட்டம் என் கையில்
34 ஆசியாவிலேயே மோஷன் கிராபிக்ஸ் என்ற நவீன கேமராவில் சண்டைக் காட்சி எடுத்தப்படம் ஆளவந்தான்.
35 மாஸ்டர் கமல்ஹாசனாக கண்ணும் கரளும் படத்திலிருந்து சாணக்யன் வரை கமல் 35 மலையாளப் படம் நடித்துள்ளார்.
36 கமல் எந்த மொழியில் நடித்தாலும் சொந்த குரலில் பேசி நடித்துள்ளார்.
37 பார்த்தால் பசி தீரும் முதல் ஆளவந்தான் வரை இரட்டை வேடம் 21 படங்கள்.
38 இந்திய திரையுலக சரித்திரத்திலே 610 பிரிண்ட் போடப்பட்ட முதல் படம் ஆளவந்தான்.
39 கமல் 99 வயது கிழவனாக முற்றிலும் மாறுப்பட்ட ஒப்பனையில் வந்து பிரமிக்க வைத்தப் படம் ஹேராம்.
40 இந்தியாவிலேயே மூன்று பேர் தேசிய விருது பெற்ற குடும்பம் கமல் குடும்பம், கமல்ஹாசன், சாருஹாசன், சுஹாசினி
41 ஆளவந்தான் படத்தில் கார் சேஸிங் ஒன்றில், கார் ரவுண்ட் அடிப்பதையும் ஜம்பிங் பாய்ந்து போவதையும் டூப் இல்லாமல் செய்தவர் கமல்.
42 ஹேராம் படத்தில் 1927ல் மாடல் பியட்கார் இடம் பெற்றுள்ளது. இந்த கார் கட்ச் மகாராஜா பயன்படுத்தியது.
43 ஹேராம் படத்தில் ராம் ராம்....என்ற பாடலை கமல்ஹாசனின் மகள் சுருதியும், கமல்ஹாசனும் இணைந்து பாடியுள்ளனர்.
44 பேசாத படம் பேசும் படத்தில் நடித்த முதல் நடிகர்.பிடித்த நடிகர் சார்லி சாப்ளின்
45 கலைமாமணி விருதை டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.
46 கலைஞரிடம் கலைஞானி பட்டத்தையும் பெற்றவர்.
47 ராஜ பார்வை படத்தின் போது இளைய வள்ளல் என்ற பட்டத்தை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.
48 நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்களின் எண்ணிக்கை126
49 ஒரே ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 18 (1977)
50 ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்ட படம் பேசும் படம்.
51 ராஜ் கமல் தயாரிப்பில் 14 படங்கள், டிடீஎஸ் செய்யப்பட்ட முதல் படம் குருதிப் புனல்.
52 இயக்கியப் படங்கள் இரண்டு,ஸ்டெடி கேமராவை தமிழ் திரைக்கு அறிமுகப்படுத்தியப் படம் குணா
53 சினிமா எக்ஸ்பிரஸ் விருது 13 முறைப்பெற்றவர்.பிலிம்ஃபேர் விருது 18 முறைப் பெற்ற ஒரே நடிகர்.ஒரு வருடத்துக்கு மேல் ஓடியப் படங்கள் 7.
ஆஸ்கார் சாதனை ஏழுப் படங்கள், ஆஸ்கார் நுழைவு வாயில் வரை சென்றன.
54 சிறந்த படங்கள் (தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டவை) வறுமை நிறம் சிவப்பு, 16 வயதினிலே,இந்தியன்,
55 தமிழக அரசின்க சிறந்த நடிகருக்கான விருது 6 முறை பெற்றவர்.சிறந்த நடிகருக்கான தேசிய விருது மூன்றாம் பிறை, நாயகன்,
இந்தியன் போன்ற படத்திற்காக கிடைத்தது.பிலிம்ஃபேன்ஸ் அஸோஸியேஷன் விருது 30 முறை.
56 தமிழக முதல்வர்கள் இராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்.ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் பாராட்டைப் பெற்றவர்.
57 தன்னுடைய பிறந்த நாளில் தமிழ் இலக்கிய விருது வழங்கும் ஒரே நடிகர், விருது தொகை பத்தாயிரம்.
தொகுப்பு
சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments
கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.
**** ஆதாமின்டே மகன் அபு *****
மாயா ஜாலங்களோ சென்டிமென்டுகளை நியாயப்படுத்தும் ஃப்ளாஷ்பேக்குகளோ எதுவும் தேவைப்படாத, கதையை அதன் போக்கில் மெதுவாக நகர்த்தும் திரைக்கதை. அதற்கு யானை பலம் சேர்க்கும் மது அம்பாட்டின் ஒளிப்பதிவு. .
அதை விட முக்கியமாக , காஸ்டிங். நெடுமுடி வேணு, கலாபவன் மணி என ஓரிரு காட்சிகள் வந்தாலும் எங்குமே நடிப்பது தெரியவில்லை
மற்றும் உறுத்தாத பிண்ணனி இசை. அவார்டு வாங்கும் படம் என்றாலே காத தூரம் ஓடிவிடும் நம் ரசிக கண்மனிகள் தமிழிலும் இது போன்ற சின்ன பட்ஜெட் ஆச்சர்யங்களை ஆதரித்தால் நமக்கு இன்னும் வெரைட்டியான படங்கள் கிடைக்கும்.
இந்த படத்தில் மிகவும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும். சமீப காலங்களில் ஒரு மெலோடிராமவுக்கு தமிழிலும் மலையாளத்திலும் இப்படி ஒரு சினிமாட்டொக்ராஃபியை பார்க்க முடிந்ததே இல்லை.
மிகையில்லாத , ரொம்பவே யதார்த்தமான நடிப்பு. பாஸ்போர்ட் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் செல்லும் காட்சியில் நடுங்கும் சலீம், தேசிய விருதுக்கு நிச்சயம் வொர்த் தான். மொத்தத்தில் குறை சொல்ல முடியாத ஒரு ஆர்ப்பாட்டமில்லாத அழகிய சினிமா "ஆதாமின்டே மகன் அபு"
உலக சினிமாவை ஈரானிலோ கொரியாவிலோ தேட வேண்டிய அவசியமே இல்லை. அது இங்குதான் நம் லைப்ரரிகளில் தூங்கிகொண்டிருக்கிறது. அதை யார் எழுப்பி வெளியே கொண்டு வருகிறார்கள் என்பது தான் கேள்வி!