ஸ்டில் கேமராவில் எடு்க்கப்படும் மெரினா- வழக்கு எண் 18/9’


கடற்கரைவாழ் மக்களின் வாழ்வு - மெரினா

பசங்க, வம்சம் படத்திற்கு ‌டைரக்டர் பாண்டிராஜ் இயக்கி வரும் புதிய படம் மெரினா.
சென்னையில் உள்ள பட்டினபாக்கத்தில் தொடங்கி, காசிமேடு, ஹார்பர் என்று மெரினா கடற்கரையை மையப்படுத்தி, கடற்கரைவாழ் மக்களின் வாழ்வு மற்றும் அவர்களது உணர்வுகளை வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் நாயகனாக விஜய் டி.வி. புகழ் சிவகார்த்திகேயன் இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கும் ஜோடியாக ஓவியா நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் 50 புதுமுகங்களையும் அறிமுகப்படுத்துகிறார் பாண்டிராஜ். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.மெரினா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் பாண்டிராஜ். மெரினா கடற்கரையில் நடக்கும் சின்னச் சின்ன சம்பவங்களை கதைக்களமாக வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ்.
மெரினாவில் சுண்டல், டீ, காபி விற்கும் சிறுவர்களின் உலகம், பிச்சை எடுப்பவர்கள், பாட்டுப்பாடி பிழைப்பு நடத்துபவர்கள், பிஸினஸ்மேன் மெரினாவுக்கு வந்து போகும் காதலர்கள் என மெரினாவில் நடக்கும் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களை எதார்த்தம் மீறாமல் முழு காமெடியுடன் படமாக்கியிருக்கிறார் பாண்டிராஜ். இந்த படம் 2 மணிநேர படம் என்பது குறிப்பிடத்தக்கது.


 பாய்பிரெண்ட் கலாச்சாரம் - ‘வழக்கு எண் 18/9’.

காதல், கல்லூரி ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் பாலாஜி சக்திவேல். இவரது படங்களில் புதுமுகங்களை அறிமுகப் படுத்தி, வெற்றி கண்டிருக்கிறார். இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘வழக்கு எண் 18/9’.
இப்படம் குறித்து இயக்குனர் பாலாஜி சக்திவேல் கூறியதாவது;முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க 'வழக்கு எண் 18/9' என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி சக்திவேல். முழுக்க முழுக்க ஸ்டில் கேமரா மூலம் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து இருக்கிறார்கள்.
இந்தப் படம் ஒரு ‘டீன்ஏஜ் திரில்லர்’ படமாகும். நான் இயக்கிய இரண்டு படங்களுமே சங்கர் சார்தான் தயாரித்தார். இந்தப் படத்தினை லிங்குசாமி தயாரிக்கிறார். பள்ளி செல்லும் பெண்களிடையே பரவும் பாய்பிரெண்ட் கலாச்சாரம் பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் இப்படத்தில் அலசியிருக்கிறேன். எனது முந்தைய படங்களைப் போல், இப்படத்திலும் புதிய முகங்களை நடிக்க வைத்திருக்கிறேன்.
கதாநாயாகியாக நடிக்கும் அஸ்ஸாமைச் சேர்ந்த ஊர்மிளா, பூனே திரைப்படக் கல்லூரி மாணவி, மற்றொரு நாயகியான மனீஷா பெங்களூரைச் சேர்ந்தவர். கதாநாயகர்களாக நடிக்கும் மிதுன் மற்றும் ஸ்ரீ ஆகியோர் முறையே கேரளா மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
இப்படத்தின் கிளைமாக்ஸ் ஒரு பரபரப்புச் செய்தியின் மையமாக வைத்து எடுத்துள்ளேன். அது எந்த செய்தி என்பதை படம் பார்த்து கண்டுபிடியுங்கள்’’ என்றார்.


மெரினா கடற்கரை சிலதகவல்கள்......

     சென்னையில் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது மெரினா கடற்கரை. இதன் நீளம் 12 கிலோ மீட்டர் ஆகும். இது உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்று மக்களால் பரவலாகக் கூறப்பட்டாலும், இதே போன்று நீளமான கடற்கரைகள் பல உள்ளன. உதாரணமாக, பிரேசிலில் உள்ள பிரேயா டோ கேசினோ (Praia do Cassino), வங்க தேசத்திலுள்ள காக்ஸ் பஜார் (Cox's Bazar), அமெரிக்க குடா கடலில் உள்ள பட்ரே ஐலண்ட் (Padre Island), ஆஸ்திரேலியாவிலுள்ள நைன்டி மைல் பீச் (Ninety Mile Beach) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டில் துபாயில் உள்ள கடற்கரைகளும் நீளமானவையே. இருந்தாலும் மெரினா கடற்கரை ஒரு மாநகரை ஒட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இக்கடற்கரையின் அகலம் 437 மீட்டர் ஆகும்.

மெரினா கடற்கரையை ஒட்டிய சாலை ஓரத்தில் சென்னை பல்கலைகழகம், செனட் ஹவுஸ், சேப்பாக்கம் அரண்மனை, மாநிலக் கல்லூரி, பொதுப்பணித்துறை அலுவலகம், விவேகானந்தர் இல்லம் (ஐஸ் ஹவுஸ்), தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் பல உள்ளன. கடற்கரையில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு எதிரே திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் நினைவிடம் அமைந்துள்ளது. அதற்கு அடுத்து திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவரும் தமிழக முன்னாள் முதல்வரும் பிரபல தமிழ் நடிகருமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ளது.
     இக்கடற்கரையைக் காண தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். துறைமுகத்திலிருந்து சாந்தோம் வரை விரிந்து பரந்துள்ள இக்கடற்கரையை 1880 ஆம் ஆண்டு ஆங்கிலேயேர் அழகுற வடிவமைத்தனர். இப்பெருமை ஆங்கிலேய கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின் ஸ்டோன் கிராண்ட் டப் என்பவரையே சேரும்.

 மெரினா கடற்கரையில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், கண்ணகி, திருவள்ளுவர், ஜி.யூ. போப், ஔவையார், காமராஜ், பாரதியார், நடிகர் சிவாஜி கணேசன், ஆகியோரின் சிலைகளும், உழைப்பாளர் சிலையும் உள்ளது
.-சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Anonymous said…
malaiyaliyai nadikka vai appurum appputhan
Anonymous said…
Great blog you've got here.. It's hard to find high quality writing like yours these days.
I honestly appreciate individuals like you! Take care!!


my web page - extreme dui in az