பிரபஞ்ச ரகசியமும் - நோபல்பரிசும்


பிரபஞ்சம் விரிவடைவது தொடர்புடைய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான 2011ம்ஆண்டுக்கான
 நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு  அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் சால் பெர்ல்மட்டர், அமெரிக்காவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மேற்கொண்டுவரும் பிரையன் ஷுமிட், அமெரிக்காவின் ஆடம் ரீஸ் ஆகியோர் 2011-ம் ஆண்டுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து நோபல் கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சூப்பர்நோவா என்றழைக்கப்படும் வெடிக்கும் நட்சத்திரங்களை 1990-கள் முதல் அவர்கள் மூவரும் ஆய்வு செய்துள்ளனர். மிகத் தொலைவிலுள்ள 50 சூப்பர்நோவாக்கள் எதிர்பார்த்ததைவிட வலுவற்ற அளவிலேயே ஒளியை உமிழ்வதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் பிரபஞ்சம் அதிக வேகத்தில் விரிவடைவதாக முடிவுக்கு வந்துள்ளனர். இதன் வேகம் அதிகரித்தால் பிரபஞ்சம் பனிப்பாறையாக மாறிவிடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுத் தொகை: பரிசுத் தொகையான ரூ.7.25 கோடியில் ஒரு பாதி சார்ல் பெர்ல்மட்டருக்கும், மீதிப் பாதி பிரையன் ஷுமிட், ஆடம் ரீஸ் ஆகியோருக்கு பகிர்ந்தும் அளிக்கப்படும்.

பிரபஞ்ச தோற்றமும் - ஜெனிவா ஆய்வும்

இந்த பிரபஞ்சம் எப்படித் தோன்றியது, நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சம் இப்பொழுது பூமி உட்பட பல கிரகங்கள், நட்சத்திரங்கள்,வால் நட்சத்திரங்கள்,கேலக்கிஸிகள் போன்ற இன்னும் நாம் கண்டிறியமுடியாத பல பொருட்களைக் கொண்டதாக இருக்கிறது. ஆனால் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் சில மூலக்கூறுகள், சிலவாயுக்கள், மட்டுமே இருந்தன. இவை ஒரு மையத்தில் குவிய ஆரம்பித்து பின்பு அதன் உள் அழுத்தத்தால் வெடித்தது. இதிலிருந்துதான் இந்தப் பிரபஞ்சம் அதிலுள்ள பொருட்கள், நாம் உட்பட அனைத்தும் உருவாக ஆரம்பித்தன. பிரபஞ்சம் வெடித்த அந்த நொடியிலிருந்துதான் காலம் உருவாக ஆரம்பித்தது.  இன்றைக்கு மனிதன் காலத்தை தன் வசமாக்கி கடிகாரமாக மாற்றியிருக்கலாம். ஆனால் முதல் செகன்ட் இங்கிருந்து தான் தொடங்கியது.
                         இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம், வெடிப்பு இதனை சோதனை ரீதியாக ஆய்வு செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் பூமிக்கடியில் 100மீட்டர் ஆழத்தில்,27கி.மீ சுற்றளவில்  ஆய்வுக்கூடத்தை அமைத்திருக்கிறார்கள். இதற்கான செலவு 5 பில்லியன் டாலர். இந்த ஆராய்ச்சியில் உலகம் முழவதும் உள்ள 45 நாடுகளைச் சேர்ந்த 2000 விஞ்ஞானிகள் பங்கேற்கிறார்கள்,இதில் 200 பேர் இந்திய விஞ்ஞானிகள். அணுதுகள்களை மணிக்கு 1300 கிமீ வேகத்தில் மோதச்செய்து பிரபஞ்ச ரகசியத்தை கண்டறியும் ஆய்வு நடைபெறுகிறது.இந்த ஆய்வின் முடிவில் பிரபஞ்சம் குறித்த பல ரகசியங்கள் தெரியவரலாம்.

பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல- இயற்பியலே


பிரபஞ்சம் உருவாகியது கடவுளால் அல்ல அது இயற்பியலால். அது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்ததே என பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த இவர் விண்வெளி குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு முத்திரை பதித்தவர். பிளாக் ஹோல்ஸ் குறித்த இவரது ஆய்வு அறிவியல் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அண்டம் தோன்றியது குறித்தான பெருவெடிப்பு கொள்கையை ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்து பல்வேறு நூல்களை எழுதியவர். பிரபஞ்சம் குறித்து ஹாக்கிங் கூறுகையில், இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு பிரமாண்டமான வெற்றிடம் இருந்தது. எனவே யாரும் வந்து பூமியை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவாகவே தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது. இது முற்றிலும் இயற்பியல் சார்ந்ததே. இதை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை. நமது பிரபஞ்சத்தின் அன்றைய நிலை, இன்றைய நிலை, நாம் இந்த பிரபஞ்சத்தில் வாழ முடிவது என அனைத்துக்குமே ஏதாவது ஒரு காரணம் உள்ளது. எதுவுமே மர்மம் இல்லை. எல்லாமே அறிவியல் சார்ந்தது. நம்மால் புரிந்து கொள்ள முடியாத காரணங்களுக்காக கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினார் என்று கூறுவது பொருத்தமற்றதாகும். மிக்பெரிய வெடிப்பு பிரளயத்தால்தான் இந்த பிரபஞ்சம் உருவானது.

13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பேரண்ட வெடிப்பு நடந்திருக்க கூடும் என்பது சில அறிவியல் ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது. இது குறித்து பல்வேறு அறிவியல் ஆதாரங்களை கொண்டு அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி லியோனார்ட் லோடினோவுடன் இணைந்து ஸ்டீபன் ஹாக்கிங் பிரபஞ்சம் உருவானது குறித்து ஒரு நூலை எழுதியுள்ளார்.

விமர்சனம் எழுத ...
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
-அ.தமிழ்ச்செல்வன்

Comments

இன்று வலைச்சரத்தில் இந்த பதிவு அறிமுகம். நேரம் கிடைத்தால் சென்று பாருங்கள்.தமிழ்மணத்தில் வாக்கும் கருத்துகளும் பகிர அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_18.html