7ம் அறிவு - தமிழர்கள் பார்க்கவேண்டிய படம்



''7ம் அறிவு'' நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் என்கின்ற எல்லையைத்தாண்டி தமிழர்கள் பார்க்கவேண்டிய படம். எந்திரன் திரைப்படதிற்கு பிறகு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம்.எதிபார்ப்புக்களை மிஞ்சி விட்ட படமும் கூட.எல்லைத்தரப்பு ரசிகர்களுக்கும் திருப்தி அளிக்கிறது.

            படத்தின் துவக்கக் காட்சிகள் போதி தர்மனின் வரலாற்றுடன் துவங்குகிறது. காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டுவந்த பல்லவ மன்னன் மருத்துவம்,தற்காப்புக்கலைகளில் நிபுணனாக இருப்பவன். தனது ராஜமாதாவின் கட்டளைப்படி சீனாவிலுள்ள கிராமம் செல்கிறான்.அவன் சென்ற நேரத்தில் கொள்ளை நோய் ஒன்று அந்த கிராம மக்களை தாக்குகிறது.அதில் பலர் இறந்து போகிறார்கள்.அந்த நோயிலிருந்து அந்த கிராமத்து மக்களை பல்லவ மன்னனாக இருந்து துறவியாக மாறிய போதிதர்மர் காப்பாற்றுகிறார். மேலும் அந்த கிராமத்து மக்களை கொள்ளையர்களிடமிருந்தும் தனது தற்காப்புக்கலையால் காப்பாற்றுகிறார்.இதனால் அந்த கிராமத்து மக்கள் போதிதர்மரை கடவுளாகவே மதிக்க தொடங்குகிறார்கள்.ஒரு கட்டத்தில் தனது சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு திரும்ப நினைக்கும் போதிதர்மருக்கு விஷம் கலந்த உணவை கொடுக்கிறார்கள். அதை போதிதர்மர் கண்டுபிடித்து விடுகிறார். அந்த கிராமத்து மக்கள் போதிதர்மர் தங்கள் ஊரை விட்டு போனால் மீண்டும் கொள்ளை நோய் தாக்கும் என்கிறார்கள், அவர்களின் கோரிக்கையை ஏற்று விஷ உணவை சாப்பிட்டு இறந்து விடுகிறார்.அவர் புதைக்கப்பட்ட  இன்றைக்கும் சீனாவில் போதிதர்மரான தமிழருக்கு கோயில் கட்டி வணங்குகிறாகள், இதை சிலகாட்சிகள், ஒருபாடல்காட்சியிலேயே முடித்து விடுகிறாகள்.
            இதன் பிறகு படம் இன்றைய காலகட்டத்திற்கு வருகிறது. சீனா - இந்தியாவுக்கு எதிராக பயோவார் எனப்படுகிற கிரிமியுத்தத்தை துவங்குகிறது. அதற்கு பீட்டர் ஹயின் இந்தியா அனுப்பப்படுகிறார். ஒரு நாயின் மூலமாக நோய்க்கிரிமிகளை பரவச்செய்து, அதற்கான மருந்தை வைத்துள்ள சீனா இந்தியாவை பணியவைப்பது தான் சீனாவின் ''அப்ரேசன் ரெட்'' திட்டம்.இந்த அப்ரேசன் ரெட் திட்டத்தில்  போதிதர்மரை பற்றி ஆய்வு செய்கிற சுபாவாக வருகிற ஸ்ருதிஹாசனைக் கொல்வதும் அடங்கும்.
         போதிதர்மனின் வழிதோன்றலாக வருகிற (அரவிந்த்)சூர்யாவை கொண்டு, அவருக்கு தெரியாமலேயே போதிதர்மருக்கும் இன்றை சூர்யாவுக்குமான டி.என்.ஏ தொடர்பை கண்டிபிடிகிறார் சுபா . சூர்யாவின் டி.என்.ஏ வை தூண்டுவதன் மூலமாக போதிதர்மனின் மருத்துவத் திறமைகளை வெளிக்கொண்டுவந்து, அதன் மூலமாக சிறுவயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றுவது சுபாவின் (ஸ்ருதிஹாசன்) திட்டம்.
                  இத் திட்டம் நிறைவேறுகிறதா, இன்றைய சூர்யா போதிதர்மராக மாறுகிறரா, சீனாவின் பயோவார் திட்டம் என்னாகிறது  என்பதே மீதிக்கதை.
 
ஏ.ஆர்.முருகதாஸ் - படத்திற்காக வரலாறு, அறிவியல் குறித்த நிறைய தகவல்களை திரட்டி கடுமையாக உழைத்திருக்கிறார். அந்த உழைப்பிற்கு வாழ்த்து சொல்லியாக வேண்டும்.

சூர்யா-  போதிதர்மராக நடிக்கும் காட்சிகளில் சூர்யாவின் நடிப்பு அடுத்த கட்டத்தை தாண்டியிருக்கிறது. இயக்குனருக்கு சமமாக உழைத்திருக்கிறார்.

ஸ்ருதிஹாசன் - தனது அப்பாவின் பெயரை காப்பாற்றுவார்.

பீட்டர்ஹயின் - புதுமையான வில்லன்

படத்தை பற்றிய எதிர்கருத்துக்களாக முன் வைக்கப்படுகிற வரலாறு மற்றும் அறிவியல் குறித்தான காட்சிகள் புரியவில்லை என்பது அது தவறான கருத்து. அந்த காட்சிகள் மிக எளிமையாக புரியும்படி எடுக்கப்பட்டிருக்கின்றன.இதை விட மிக அதிகமான அறிவியல் பூர்வமாக எடுக்கப்பட்ட ''அவதார்'' படம் தமிழக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 4பைட், 4பாட்டு, வில்லனை பறந்து பறந்து அடிப்பது,பன்ஞ் டயலாக் மட்டும் தமிழ் சினிமா இல்லையே.படத்தின் ஒன்லைன் ஸ்டோரி '' தமிழர்கள் தங்கள் திறமைகளையும் வரலாற்றையும் மறந்து போனதே தமிழனின் விழ்ச்சிக்குக் காரணம்'' என்கிறார் ஏ.ஆர் முருகதாஸ். தமிழ்சினிமாவின் புதிய எல்லை 7ம் அறிவு.

-சத்யஜித்ரே

Comments

தசாவதராத்திற்கு பிறகு சரித்திரத்தை தமிழ்த்திரைப்படங்கள் மீண்டும் கையில் எடுத்திருப்பது மகிழ்வான விசயம். ஏழாம்அறிவு, அரவான், கரிகாலன் போன்ற படங்களின் வெற்றி அதற்கடுத்து இன்னும் இதுபோன்ற நிறைய படங்கள் வர வழிவகுக்கும். இனிமேல் தான் ஏழாம் அறிவு பார்க்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி.