7ம் அறிவு திரைப்பட புதிய புகைப்படங்கள்
படங்கள் - tamilwire.com

எந்திரனை தொட்டுவிட்ட 7ம் அறிவு

1600க்கும் மேற்பட்ட பிரிண்டுகள்,தமிழகத்தில் முன்பதிவில் சாதனைபடைத்து வருவதாக சினிமா தகவல்,மேலும் கனடா போன்ற வெளிநாடுகளில் எந்திரனுக்கு இணையா வெளியிடப்படும் படமாக 7ம் அறிவு திரைப்படம் உள்ளது.வியாபார விஷயத்தில் எந்திரனை தொட்டு விடும் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த 7 ஆம் அறிவு, அதிகாரபூர்வமாக தொட்டே விட்டது. கிட்டதட்ட 90 கோடி ரூபாய் வியாபாரம் ஆகியிருக்கிறதாம். சிட்டி, என்எஸ்சி, திருச்சி உள்ளிட்ட ஐந்து ஏரியாக்களை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஜெமினி லேப் நிறுவனம். எந்திரன் படத்தை வெளியிட்டதும் இவர்கள்தான். வெறும் சூர்யா நடித்த படத்திற்கு இத்தனை மாஸ் இல்லை.கூடவே முருகதாசும் இருப்பதால்தான் இந்த மாஸ் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இதே முருகதாஸ் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். சம்பளம் எவ்வளவு தெரியுமா? 12 கோடி. இது ஷங்கரின் சம்பளத்தை விட ரெண்டு கோடி அதிகம்.
 - சத்யஜித்ரே

கருத்துகள்

சித்திரவீதிக்காரன் இவ்வாறு கூறியுள்ளார்…
போதி தர்மனாக சூர்யாவின் படங்கள் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.