''7ம் அறிவு'' திரைக்கதையில் போதிதர்மர் - சூர்யா ஜீன் ரகசியம் என்ன? புதிய தகவல்


''7ம் அறிவு'' திரைக்கதையில் இரண்டு விஷயங்களை இணைத்திருக்கிறார்கள். ஒன்று 1500 லிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த போதிதர்மரின் வரலாறையும், இரண்டாவதாக போதிதர்மராக நடிக்கும் சூர்யாவுக்கும் இன்றைய காலகட்ட சர்க்கஸ் கலைஞனாக நடிக்கும் சூர்யாவுக்கும் இடையேயான ஜீன் தொடர்பு என அறிவியலையும் இணைத்திருக்கிறார்கள்.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ''7ம் அறிவுன்ன அது டி.என்.ஏ ரகசியம்'',அந்த ரகசியத்தை நான் கொண்டுவந்திருக்கேன் என பேசியிருக்கிறார். மேலும் படத்தில் ஸ்ருதிஹாசன் ஜீன் பற்றிய ஆராய்ச்சியாளராக வருகிறார்.

              2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த போதிதர்மராக நடிக்கும் சூர்யாவின் வாரிசுதான் இன்றைய காலகட்ட சூர்யா எனவும், அதனால் போதிதர்மரின் ஜீன்களின் மூலமாக இன்றைய சூர்யாவுக்கு அவரின் திறமைகள், அவரை பற்றி நினைவுகள் தெரிவதாகவும் கதை பின்னப்பட்டிருக்கிறது. இந்த ஜீன் தொடர்ச்சி என்பது உண்மையா? 2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஜீன் நமது உடலில் இருக்குமா?. உண்மைதான். 2000 ஆண்டுகள் என்ன 60,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஜீன்களின் தொடர்ச்சியையே கண்டுபிடித்திருக்கிறார்கள்.

                  மிகச்சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரைமாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஜோதிமாணிக்கம் என்ற கிராமத்திற்கு கட்டை வண்டிகள் செல்லும் மண்பாதைகளில் வெளிநாடுக்காரர்கள் கார்களில்  வேகமாக சென்று கொண்டிருந்தார்கள்.அந்த காரிலிருந்து அக்ஸ்போர்டு பல்கலைகழக மரபணு பேராசிரியர் ஸ்பென்ஸர் வெல்ஸ் என்ற உலகப்புகழ்பெற்ற டி.என்.ஏ.ஆய்வாளர் தனது ஆராய்ச்சி குழுவினரோடு இறங்கினார்.அந்த கிராமத்தைச் சேர்ந்த விருமாண்டி என்பவரின் ரத்தத்தை சோதித்து பார்க்கிறார், ''சக்சஸ்'' என சொல்லிவிட்டு சில நாட்கள் விருமாண்டியுடன் தங்கி அவருடைய நடை,உடை,பாவனைகள்,பழக்கவழக்கங்களை ஆராய்கிறார்,நாம்(தமிழர்கள்) அடிக்கடி சொல்வோமே ''கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி'' என்று அது உண்மை தான் என சொல்லிவிட்டு திரும்புகிறார்.
                       இரண்டுகோடி ஆண்டுகளுக்கு முன் குரங்கிலிருந்து மனிதஇனம் உருவானது என்பதும், ஆதிமனிதர்களின் பிறப்பிடம் ஆப்பிரிக்கா என்பதும் நிறுபிக்கப்பட்ட உண்மை. இப்படி தோன்றி அதிமனிதர்களின் வாரிசுகள் காலமாற்றம், சுற்றுச்சூழுல் மாறுபாடுகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 60,000 ஆண்டுகளுக்கு முன் கடற்கரையோரமாக ஒரே திசையில் நகர ஆரம்பிக்கிறார்கள்.கடலிலும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் இடையிடையே சேர்ந்து இருந்த நிலப்பகுதி வழியாக மனித இனம் ஆஸ்திரேலியா வரை சென்று இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
       இது குறித்தான ஆய்வை 20 ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியை சேர்ந்த லூகாகவாலி சஃபோர்ஸா என்ற ஆய்வாளர் ஆப்பிரிக்காவிலுள்ள ஆதிவாசிகளிடம் ரத்த சாம்பிள்களை எடுத்து மரபணு சோதனைகளை துவங்கினார்.இந்த ஆய்வுகளின் மூலம் ஒரு ஆணிடமிருந்து,அவனது ஆண் வாரிசுக்கு ஆண்மைத்தன்மையை கொண்டு செல்லக்கூடிய ''ஒய் குரோமோசோம்களில்'' ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஏதோ ஒரு தனித்தன்மை தலைமுறை, தலைமுறையாக அழியாமல் பயணம்  செய்து வந்திருப்பதை  அவர் கண்டறிந்தார்.பிறகு அஸ்திரேலியாவுக்கு போனவர் அங்குள்ள ஆதிவாசிகளிடமும் சோதனையை நடத்த ஆப்பிரிக்காவில் கிடைத்த அதே மரபணு ஒற்றுமையை கண்டறிந்த சஃபோர்ஸா, அந்த மரபணு புள்ளிக்கு ''எம்130ஒய்'' என்று பெயரிட்டார்.
                  சஃபோர்ஸாவின் ஆய்வை மரபணு பேராசிரியர் ஸ்பென்ஸர் வெல்ஸ் தொடர்ந்தார்.ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் உள்ள மனிதர்களிடம் இந்த மரபணு ஒற்றுமை தென்படும் போது நிச்சயமாக இந்த இரண்டு நிலப்பகுதிகளுக்கும் இடைப்பட்ட இந்தியாவிலும் அது இருக்க வேண்டும் என வெல்ஸ் நம்பினார். தனது இந்த ஆய்விற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நோய்த்தடுப்பாற்றல் துறை தலைவரான பேராசிரியர் பிச்சையப்பனை இணைத்துக்கொண்டார். பிச்சையப்பன் தனது அனுபவ அறிவால் மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதிகளில் தனது ஆய்வை தொடங்கினார். இந்த பகுதிகளில் பெருவாரியாக உள்ள கள்ளர்இனமக்கள்,யாதவசமுக மக்கள்,சௌராஷ்டிரா சமுகத்தை சேர்ந்தவர்கள் என 259 பேரிடம் ரத்தசோதனை நடத்தியதில் ஒரளவு வெற்றிகண்டார். பிச்சையப்பன் இந்த ஆய்வை தீவிரமாக தொடங்கினார்,

அதில் எம்130ஒய் குரோமோசோம் ஜோதிமாணிக்கம் கிராமத்தில் விருமாண்டிக்கு சரியாக பொருந்தியது.அதன் பிறகு ஸ்பென்ஸர் வெல்ஸ் மீண்டும் விருமாண்டியை சோதனை செய்து பிச்சையப்பனின் ஆய்வை உண்மையானது தான் என எற்றுக்கொண்டார் .இந்த ஆய்வின் முடிவாக ஸ்பென்ஸரும், பிச்சையப்பனும் உலகத்திற்கு ஒரு உண்மையை அணித்தரமாக உறுதிப்படுத்துகிறோம்,


''ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரோலியா மற்றும் உலகமுழுவதும் இடம்பெயர்ந்த ஆதிமனிதன் இந்தியாவின் தென்பகுதி வழியாகத்தான் கடந்திருக்கிறான்'' என்பதை பெருமையுடன் சொன்னார்கள்.
       மேற்குறிப்பிட்ட இந்த ஆய்வின் மூலம் 7ம்அறிவின் திரைகதையில் போதிதர்மருக்கும் இன்றைய சூர்யாவுக்குமான டி.என்.ஏ. தொடர்பு என்பது உண்மையின் அடிப்படையில் உருவாக்கப்ட்ட கதையே. இதை திரையில் பார்க்கும் போது இன்னும் பிரமிப்பாக இருக்கும்.இன்னும் 10 நாட்கள் தானே காத்திருப்போம்
சத்யஜித்ரே

விமர்சனம் எழுத....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments