'ஏழாம் அறிவு’ திரைக்கதையின் உண்மை வரலாறு என்ன?


மணிரத்னம், ஷங்கர் படங்களை போல தற்போத ஏ.ஆர்.முருகதாஸ் படங்களுக்கும் கதை தெரிந்து கொள்வ
தில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சூர்யா, முருதாஸ், கமலின் மகள் ஸ்ருதிஹாசன் என எதிர்பார்ப்பு அதிகமாக காரணங்கள் பல.
'' 'ஏழாம் அறிவு’படத்தில் புத்த பிக்குவாகவும், சர்க்கஸ் கலைஞராகவும் சூர்யா நடிக்கிறார் என்பது பழைய செய்தி.
தற்போது கிடைத்துள்ள தகவலின் படியும், 7ஆம் அறிவு படத்தின் டிரெய்லரின் படியும், இப்படத்தில் பல்லவ அரசனாக சூர்யா நடித்திருக்கிறார்.
கிபி 5-ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் போதி தர்மன். காஞ்சிபுரத்தில் பிறந்து, பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர்.இவரைத்தான் இப்படத்தில் கதாநாயகனாக உருவகப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
புத்த மத குருவாக மாறியபிறகு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா, அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.

ஷோலின் குங்பூ என்ற உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலையை நிறுவியரே இவர்தான் என்கிறது வரலாறு. இதற்கான கல்வெட்டு சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.
புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதை மையப்படுத்தி அமைந்திருக்கும் இப்படத்தின் திரைக்கதையில், ஸ்டீவன் ஸ்பீல் பெர்க்கின் ஜுராஸிக் பார்க் படத்தில் இடம்பெற்ற, டிஎன்ஏ படிமம் மீண்டும் உயிர்த்தெழுவது போல், இதிலும் போதி தர்மனின் டிஎன்ஏ படிமம் உயிர்ப்பிக்கப்படுவது போல கதை அமைக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடிகிறது.


 'ஏழாம் அறிவு’ குறித்து இயக்குனர் முருகதாஸ்......

'' 'ஏழாம் அறிவு’ன்னா... அது DNA-க்களின் ரகசியம். அந்த ரகசியத்தை நான் கொண்டுவந்திருக்கேன். தமிழர்களின் நாகரிகம் மிகச் சிறந்தது. ஆனால், நாம் அதைப் புத்தகங்களிலும், வரலாற்றுச் சுவடிகளிலும் மட்டும் படிச்சுத் தெரிஞ்சுக்கிறோம். வெள்ளைக்காரங்க அந்தப் பெருமைகளை மறக்கடிச்சு, வறுமையை மட்டும் அறிமுகப்படுத்திட்டுப் போயிட்டாங்க. இந்த உலகத்துக்கு நாம் என்னவெல்லாம் கொடுத்தோம் என்பதை மறந்து, தாழ்வு மனப்பான்மையில் விழுந்துகிடக்குறோம். 2,000 வருடத்துக்கு முந்திய காலத்தையும், இந்த நாளையும் இதில் இணைச்சு இருக்கேன். அதனால்தான், இதை ஒரு ரெகுலர் சினிமா இல்லைன்னு சொன்னேன். 500 வருஷங்களுக்கு முன் காட்டுவாசிகளா இருந்த அமெரிக்கர்களும் ஆஸ்திரேலியர்களும் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்கும்போது, தொன்மையான பாரம்பரியம் உள்ள நம்மால் ஏன் முன்னேற முடியலை? இது எல்லாத்தையும் படத்தில் சொல்லப்போறேன்!'

 'ஏழாம் அறிவு’ குறித்து ஸ்ருதிஹாசன்...


.நான் எத்தனை விவரித்துச் சொன்னாலும் அந்தப் படத்தை பார்க்கும் அனுபவத்தை என்னால் உங்களுக்கு தரமுடியாது. உலகத்தரத்துக்கு நமது படங்கள் எப்போது உருவாகும் என்று இனி விவாதிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த உலகத்துக்கு நாம் எவ்வளவு பங்களிப்பை செய்திருகிறோம், ஆனால் நமது பலம் நமக்கே தெரிவதில்லை. தமிழர்கள் எப்போது தங்கள் பெருமைகளை உணர்ந்து கொண்டு நடக்கப் போகிறார்கள் என்பதுதான் எழாம் அறிவின் கதை, கனவு எல்லாமே!
இந்த படத்தில் இரண்டு அசுரர்கள்! ஒருவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இன்னோருவர் சூரியா. குறிப்பாக சலிப்போ அலுப்போ இல்லாத எதற்கும் தயாராக இருக்கும் குணத்தை நான் சூரியாவிடம் பார்க்கிறேன். சூரியாவை இந்தப் படம் இன்னும் மேலே உயர்த்தும். அவருடன் ஹீரோயினாக அறிமுகமானதில் பெருமைப் படுகிறேன்.

சீனவுக்கும் -தமிழ்நாட்டுக்குமான தொடர்பு 

 போதிதர்மரின் வரலாறு முழுமையாக நமக்கு தெரியாவிட்டாலும் கூட , சீனவுக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு தொன்மையானது. சீன நாட்டின் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே குவன்சென் என்னும் துறைமுக நகரம் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்த காலத்தில் தமிழ் வணிகர்கள் இங்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
 தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிக கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறை முகங்களிலும் தங்கிப் பிறகு வியட்நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளன.
       சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று வேறுசில இடங்களிலும் வணிக குடியிருப்பை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில் புகழ்பெற்ற வணிகக் குழாமான ''திசைஆயிரத்து ஐந்நூற்றுவர்'' எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல சான்றுகள் கிடைத்துள்ளன.
      குவன்லிசௌ துறைமுக நகரில் சிவன்கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலில் நிறுவப்பெற்றுள்ள படிமங்கள் குப்லாய்கள்கான் என்னும் புகழ்பெற்ற சீனமாமன்னனின் ஆணையால் அமைக்கப்பட்டதாகும்.இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த கோயில் எழுப்பப்பட்டது.
        இந்த கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த கோயிலில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார்.சகயுகம் சித்தராபவுர்ணமி அன்று இந்தக் கோயில் நிறுவப்பட்டது. கி.பி. 1260ஆம் ஆண்டு குப்லாய்கான் முடி சூடினான் இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலிய மாமன்னனான செங்கிஸ்கானின் பேரனாவான்.
      இவன் தான் பெய்ஜிங் நகரைக் கட்டி அதை தனது பேரரசின் தலைநகராக்கினான்.அவனுடைய போரரசு விரந்து பரந்தது.புகழ்பெற்ற யுவான் அரச மரபை இவனே துவக்கிவைத்தான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டிப்பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப் பேரரசின் மாமன்னனாகத் திகழ்ந்தான். பாண்டின் அரச குலமும், குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டனர்.
         
        சீனாவில் எழுப்பட்ட சிவன் கோயில் சீனமாமன்னனான குப்லாய்கானின் ஆணையின் கீழ்க்கட்டப்பட்டது என்பதை குறிக்கும் கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அரிய தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

சத்யஜீத்ரே

விமர்சனம் எழுத 
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

R.Puratchimani said…
அருமை....தமிழன்டா
rajamelaiyur said…
தமிழன் தமிழன்தான்
rajamelaiyur said…
நமது அருமை நமக்கே தெரிவதில்லை
salahudeen.akkur said…
murugadass padaipu yendrume tholvi adaithathu illai
Anonymous said…
padam theaterla successful a odinalum ethana perukku real history theria poguthu
antha kalathula nam perumaikal vaimozhi ya vanthathu eppo t.v neraiya visayankala marakka adichu vittathu
balasubramani said…
excellent
maclan said…
proud to be a tamilan