எட்டையபுரத்து ஏகலைவன்


சமீபத்தில் நகரின் மூலை முடுக்குகளிலும்..ஓர் சுவரொட்டி..u and me என்ற adult only திரைப்பட போஸ்டருக்கு..இணையாக..வ.உ.சி.யின் படம் தாங்கிய சுவரொட்டிகள்..வில்லங்க சொத்தாக வலை வீசி.. நில அபகரிப்பு செய்யும் இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில்..தனது சொத்தை அடமானமாக்கி..தேசத்தின் அவமானத்தை துடைக்க துடித்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரநாதரின் தியாகமும்..சிறைக்கம்பிகளுக்குள் செக்கிழுத்த கொடுமைகளையும் நினைவு கூறி கொண்டாடி மகிழ முடியாவிட்டாலும்.., மதித்து ஒரு மரியாதையாவது செலுத்தலாம். இதனைத்தவிர்த்து..ஆங்கிலேயன் கூட நினைத்துப்பார்க்காத ஒரு அருவருப்பான பார்வையில்..சாதியத்தின் பிரதிநிதியாக பிரதிஷ்டை செய்யப்பட்டு..கொச்சைப்படுத்திவிட்டோம்.
         
                வாழ்ந்த போது..அக்ரஹாரத்தைவிட்டு ஒதுக்கிவைத்த சமூகம்..இறந்த்தும்..இறுதிச்சடங்கில் பங்கெடுத்துக்கொள்வதற்குக்கூட விரும்பாத அதே சமூகம்.
.இன்று தனது அடையாளமாக அவரை தூக்கிப்பிடிக்க முயல்கிறது..ஆம்..எட்டையபுரத்து ஏகலைவன்..எங்கள் ஆசான் பாரதியை எட்டி உதறிய அந்த பார்ப்பன சமூகம்..இன்று தங்களது தாம்பிராஸின் பிராண்ட் அம்பாசிடராகவே அவரை பார்க்கிறது,.
         “சாதிக்கொடுமைகள் வேண்டாம்;-அன்பு
           தன்னில் செழித்திடும் வையம்;”
சாதியக்கொடுமைக்கெதிராக..சாட்டையை சுழற்றியவனை..சாதிய பிரதிநிதியாக்கத்துடிப்பவர்களே..உங்களுக்குத்தெரியுமா? இன்று மகாகவி பாரதியின் நினைவுநாள்..அவரது கருமாதியில்கூட கலந்து கொள்ளாத நீங்கள்...அவாளது கவிதைகளையாவது வாசியுங்கள்..பின்னர் ஒட்டுங்கள் உங்கள் சாதிய போஸ்டர்களை..அது adults onlyயாகவே இருக்கட்டும்..! புதிய ஆத்திச்சூடி படிப்பதற்கு adult தேவையில்லை..பாப்பாக்கள் போதும்....

செப்டம்பர்:11 பாரதியார் நினைவு தின சிறப்புக் கட்டுரை.
                         -முகி

Comments

p.balasubramani said…
very good mugi.
now the idiotic trends is to make freedom fighters as jaathi sanga thalaivar. no freedom fighter fought for their cast. they even opposed caste in any form.we should not backfit their motives in a cruel way. soon voc fans will insult bharathi and bharathi fans will insult voc.
things are becoming dangerous

congrats for your article