பல தம்பதிகளின் இல் வாழ்க்கையில் மனக்கசப் பையும் உளைச்சலையும் ஏற்படுத்துகிற ஒரு முக்கிய மான பாலியல் பிரச்ச னைக்கு மருந்துகளோ, அறு வையோ இல்லாத ஒரு நவீன சிகிச்சை இந்தி யாவிலேயே முதல் முறை யாக சென்னையில் அறிமுக மாகியுள்ளது. ஆண்மைக் குறைவுக்கு ஒலி அலை அடிப்படையில் சிகிச்சை அளிக்கும் ‘இ.டீ.-1000’ என்ற இந்தக் கருவியை ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத் துடன் இணைந்த இந்திய பாலியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நிறுவி யுள்ளது.
“ஏற்கெனவே ஒலி அலை அடிப்படையில் இரத்தநா ளங்களில் அடைப்பை நீக்கு கிற முறை என்பது சிறுநீர கக் கல் உடைப்பு, இதய சிகிச்சை, கால்கள் செய லிழப்பு நீக்கம் போன்ற பல சிகிச்சைகளில் 20 ஆண்டு களுக்கும் மேலாகப் பயன் பட்டு வருகிற தொழில்நுட் பம்தான். மூன்று ஆண்டு களுக்கு முன் இதே நுட்பத் தைப் பயன்படுத்தி ஆணுறுப் பின் இரத்தநாளங்களில் அடைப்பை நீக்கி, அதன் மூலம் இயற்கையாகவே செயல்படச் செய்கிற முறை உருவாக்கப்பட்டது. இந்தியாவில் முதல்முறை யாக இங்கே அறிமுகப்படுத் தப்படுகிறது,” என்று நிறு வனத்தின் மேலாண் இயக்கு நர் மருத்துவர் டி. காமராஜ் கூறினார்.
இந்த சிகிச்சையில் எவ் விதமான தழும்போ ஏற்ப டாது. மாத்திரைகள் இல்லை, ஊசி மருந்து இல்லை. அறு வையும் இல்லை. வேறு பக்கவிளைவுகளும் இல்லை. பாதுகாப்பான இந்த சிகிச் சையை இதயநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளவர் களும் மேற்கொள்ளலாம் என்றார் அவர்.
மொத்தம் 9 வாரங்கள் சிகிச்சை அளிக்கப்படும். அத்துடன், ஆண் தன் பாலி யல் தகுதியை வளர்த்துக் கொள்வதற்கான உடற் பயிற்சிகள், உணவு முறை கள் போன்றவற்றிற்கான 6 வார பயிற்சிக்கையேடு ஒன் றும் வழங்கப்படும். உடலு ழைப்பு குறைந்த தொழில் களில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் மன உளைச்சல் போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது அவசி யம். எண்ணெய் வகைகளில் சமைத்த எரிசக்தி மிகுந்த உணவுகள் உடலில் கொழுப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளை ஏற் படுத்துகின்றன. இது பாலி யல் குறைபாடுகளுக்கும் இட்டுச் செல்கிறது. இதை சமாளிப்பதற்கு பயிற்சிக் கையேடு உதவும் என்றார் அவர்.
50 வயதுக்கு மேற்பட்ட வர்களில் ஆண்மைக் குறைவு பாதிப்பு இருக்கிறது. இவர்களில் 99 விழுக்காட் டினருக்கு ஆணுறுப்பு ரத்த நாள அடைப்பால் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது. ஆணுறுப்பைச் சுற்றி இ.டீ. 1000 கருவியின் ஒலி அலை களைப் பாய்ச்சுகிறபோது, ரத்தநாளங்களின் சுருக்க மும் அடைப்பும் நீங்கி, வழக்கமான வேகத்தில் ரத்தம் பாயத் தொடங்கு கிறது. புதிய ரத்தநாளங் களும் உருவாகின்றன என் றும் காமராஜ் தெரிவித்தார்.
தற்போது இந்த சிகிச் சைக்கு ரூ.40,000 செலவா கும். எதிர்காலத்தில் பரவ லாக இக்கருவிகள் புழக்கத் திற்கு வரும்போது கட்ட ணம் குறைய வாய்ப்பு உண்டு. இந்திய மருத்துவ மன்றத் தால்இக்கருவிஅங்கீகரிக்கப் பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
வயாகரா போன்ற மருந்து கள் அவ்வப்போது மட் டுமே பலனளிக்கும். இந்த சிகிச்சையால் ஆயுட்காலம் முழுக்க ஆண்மைக்குறை பாடு பிரச்சனை நீங்க வழி ஏற்பட்டிருக்கிறது என்றார் அவர். கருவி அறிமுக நிகழ்ச்சியில் மையத்தின் இயக்குநர் மருத்துவர் ஜெயராணி காம ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments
science is good but we are yet to grow to use science in harmless manners.
let us not go fast.