புரியாத கவிதைகள்





















ஆரம்பிப்பதும்
முடிப்பதுமாய்
அல்லோலப்பட
வேண்டியிருக்கிறது
புரிதல் கிட்டாமல்


முற்றுப்புள்ளியில்
புரிதல்
சாத்தியமற்றுத்
திரும்புகிறது.

புரியாத கவிதைகள்
அதிகப்படுத்துகின்றன
வாசிப்பின் இருப்பை...

எப்படியாயினும்
ஒருகவிதையாவது
எழுதிவிடவேண்டும்
யாருக்கும்
புரியாமல்...

முடியாமல் போனதில்
ஒத்துக் கொள்ளத்தான்

















வேண்டியிருக்கிறது
கவிஞன் இல்லையென்பதை...

இருந்தாலும்
எவருக்கும் புரியாமல்
எழுதுவதில்
என்ன பெரிசாக
இருந்துவிடப் போகிறது

-மதுரகாசி

Comments

அற்புதமான கவிதை. பகிர்வுக்கு நன்றி.
balasubramani said…
good
effort to make me understand your kavithai
அருமை உண்மையும் கூட புரியாததை தான் இந்த உலகம் தேடுகிறது புரிந்ததை புறக்கணித்து விடுகிறது