அனுபவப் பூக்கள்


கவிதை என்பது இளமைக்கால செயல்பாடகவே பார்க்கப்படுகிறது. மாணவப்பருவத்திலிருந்து இளைஞனாக பரிணமிக்கிற போது தான் எதிர்கொள்கிற சமுகத்தை, தன்னை சுற்றியுள்ள வாழ்க்கையை பார்க்கின்ற  இளைஞன்(இளைஞி) சமுகத்தின் நிகழ்வுகளை கவிதையாக பதிவு செய்கிறான். கருத்துப்பூக்கள் என்ற தனது முதல் கவிதை தொகுப்பை வெளியிட்டிருக்கிற கவிஞர் கமலம் அவர்களுக்கு வயது 71 என்கிற போது சற்று ஆச்சரியமும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.முதலில் அவருக்கு எனது வாழ்த¢துக்கள்.

                      கவிதைத் தொகுப்பை படிக்க தொடங்கிய போது அப்படி என்ன இருந்து விடப்போகிறது என்ற எண்ணமே தோன்றியது.ஆனால் படிக்கப்படிக்க பழமையும் புதுமையும் கலந்த கலவையான கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.தாயின் சிறப்பு, காவிய அழகு, சமுக சிந்தனை, ஆன்மீகம், சான்றோரின் சிறப்பு, நாட்டுப்பற்று,மனிதநேயம், விழிப்புணர்வு என கவிதைகள் பல தளங்களை தொட்டுச்செல்கிறது.

       கௌதமபுத்தர் பகவானும் நானும் 
        உனக்கு நீயே ஒளி

             விண்ணில் மோட்சம் இல்லை- ஆயின்
             மண்ணில் மோட்சம் உண்டு
             நான்கண்ட சொர்க்கம்
            அன்பில் மலர்ந்த மனித நேயத்தில்
            எனக்கு மீண்ட சொர்க்கம்
            துன்பமிலா பற்றற்ற வாழ்விலாம்
            உனக்கு நீயே ஒளி என்றாய்.....
விண்ணில் மேட்சத்தை தேடுவதை விட மனிதநேயத்தில்,அடுத்தவர்களிடம் காட்டுகின்ற அன்பில் பூமியிலேயே சொர்க்கத்தைப் படைக்கலாம் என்ற வரிகள் மறுக்கமுடியாத உண்மையை பேசுகின்றன.

                            உழைப்பின் மேன்மையை வலியுறுத்துகிற கவிதைகள், மிக ஆர்த்தமுள்ள வார்த்தைகளால் செதுக்கப்பட்டுள்ளன,

                 பட்டமரம் கையால் கலைவண்ணங்களாகும் - வைரம்
                பட்டை தீட்டினால் ஒளி பிரகாசிக்கும் -செதுக்கப்
                பட்ட கற்சிலை நல்ஒவியமாகும்  உழைத்துப்பாடு
                பட்டால் மனிதன் வாழ்வு மேன்மை பெறும்

கம்யூட்டர்,செல்போன் என் அனைத்து கண்டுபிடிப்புகளும் மனித உழைப்பினால் உருவாக்கப்ட்டவையே இந்த உலகத்தில் உழைப்பைத் தவிர நற்செயல் ஒன்றுமில்லை என்பதை சொல்கின்றன.

               இருக்கும் வாழ்க்கை போராட்டம் நீ
              இருக்கும் வரை எதிர்நீச்சல் தான்
              இருபதினாறு பற்களிடையே நாவு போல்,
             இருந்து வளைந்து உழைத்து வாழ்

மேற்கண்ட கவிதைகளில் வாழ்க்கை ஒரு போராட்டம்,போராட்டத்தில் சோர்ந்து விடமல் எதிர்நீச்சல் போடவேண்டும்  என்ற அவரது வரிகளில் அவரது அனுபவம் வெளிப்படுகிறது.

                 பறவைகள் போல் இருப்போம்
               
                  குரங்குகள் அருகில் வந்திட
                  மரத்தில் ஓர் பறவை உணர்த்தியது
                  பல இனப்பறவைகள் பறந்திட- மரப்
                  பல்லி அணிலும் ஒளிந்தன
                  ஒர் இனப்பறவையின் மொழியறிந்து
                  வேறு இனப்பறவைகள் தப்பின,
                  அன்புக்கு இனம்,மொழி, இல்லை
                  ஒன்றுபட்டால் நலமே

 கவிஞனுக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்பு தன்னை சுற்றிநடக்கிற நிகழ்வுகளை  கூர்ந்து கவனிப்பது,விலங்குகளின் நடவடிக்கையும் அதை தொடர்ந்து பறவைகள் எழுப்புகிற ஓலி என ஒரு நிகழ்வை கூர்ந்து கவனித்து அதை கவிதையாக்கிற இந்த பண்பு கவிஞர் கமலாவின் கவிதைகளில் அதிகமாகவே காணப்படுகிறது.
               இப்படி கவிதை தொகுப்பில் இரண்டு ஆங்கிலக் கவிதையுடன் சேர்த்து மொத்தம் 123 கவிதைகள் உள்ளன.கவிதைகளில், கவிதை தன்மை சற்று குறைவாக காணப்பட்டாலும் அவற்றை கவிதைகளில் சொல்லப்ட்டுள்ள கருத்துகள் குறைபாட்டை நிவர்த்தி செய்துவிடுகின்றன.கவிதைத் தொகுப்பின் என்னுரையில் ''எனது சிறுவயதிலிருந்தே புத்தருடைய எளிமையும், முற்போக்குச் சிந்தனைகளும், காந்திஜியின் சத்யமும்,அகிம்சையும் என்னை கவர்ந்தன, இந்த எண்ணங்களோடு வளர்ந்த நான், இவர்களின் நற்சிந்தனைகளை கதைகளாக குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி வந்தேன்,சொன்னதை மறந்து விடக்கூடாது என்று எழுத்துகளால் விடிவம் தந்தேன்''
என்ற வரிகள் மிக உன்னதமானது. மொத்தத்தில் கவிஞர் கமலத்தின் கருத்துப்பூக்கள் தொகுப்பு எல்லோரும் படிக்கவேண்டிய அனுபவப்பூக்கள்.
                                                 கவிதைப்பிரியன்

Comments

Anonymous said…
BOOK RATE WR U SALE
கருத்துபூக்கள் நூல் தேவைபடுமாயின் உங்கள் முகவரி இணையமுகவரி அனுப்புங்கள்