உலகின் சிறந்த 25 விளையாட்டு திரைப்படங்களில் லகான் தேர்வு


விளையாட்டை மையமாகவைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் முதல் 25 படங்களை லண்டனிலிருந்து வெளியாகும் டைம்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது
. விடுதலைக்கு முந்தைய பிரிட்டன்காரர்களுக¢கும், இந்தியாவில் உள்ள சாதாரண கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடப்பதாகவும் அதில் கிராமத்து இளைஞர்கள் வெற்றி பெற்றால் வரிச்சலுகை அளிக்கப்படும் என்று பிரிட்டன்காரர்கள் அறிவிப்பதாகவும் கதை செல்லும். தேடித்தேடி ஆட்டக்காரர்களைப் பிடித்து அணியை இளைஞர்கள் உருவாக்குவார்கள். புவன் என்ற பெயரிலுள்ள கதாப்பாத்திரத்தில் முன்னணி இந்திநடிகர் அமீர்கான் அசத்தியிருப்பார். வர்த்தகரீதியிலும் இந்தப்படம் பெரும் வெற்றி பெற்றது.உலக அளவிலும் இந்தப்படம் பிரபலமானது ஏராளமான விருதுகள் இப்படத்திற்குக் கிடைத்தன. விளையாடடை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவற்றில் சிறந்த படங்களைப் பட்டியலிட டைம்ஸ் இதழ் தீர்மானித்தது. 25 படங்கள் இடம்பெற்ற அந்த பட்டியலில் லகான் 14வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

 படத்தின் கதையைப் பாராட்டியுள்ள டைம்ஸ் இதழ்,படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறப்பு பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளது. 1998ம் ஆண்டில் வெளியான ''தி பிக் லெபோவ்ஸ்கி'' என்ற படத்திற்கு இந்த பட்டியலில் முதலிடம் கிடைத்திருக்கிறது.

Comments