பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

வேற்றுகிரகவாசிகளைத் தேடும் அமெரிக்கா!

 

“America Is Finally Taking Extraterrestrials Seriously”அமெரிக்காவின் புகழ்பெற்ற TIME (2026 ஆகஸ்ட் 6 )  இதழில் வெளியான இந்தத் தலைப்பு, வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆர்வம் கொண்டவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியது.

இந்தத் தகவல், என்னைப் போன்ற வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம்” என்று நம்புகிறவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரையின் நோக்கம், “அமெரிக்கா வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடித்துவிட்டது” என்று கூறுவது அல்ல.

சீனாவின் பறக்கும் கார் ....காரை வாங்க நீங்க ரெடியா?

 


சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத்  என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் காரை துபாயில் பொதுமக்கள் முன்னிலையில் முதல் முறையாக சோதனை நடத்தியுள்ளது.

  சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.  எக்ஸ்2 என்ற பெயரிடப்பட்ட 2 பேர் அமர்ந்து செல்ல கூடிய பறக்கும் கார் . 

   இந்தபொருளை அமைசானில் வாங்க படத்தை கிளிக்செய்க

  முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பறந்து சென்றது. ஒரு மூலைக்கு இரண்டு என மொத்தம் நான்கு மூலைகளிலும் எட்டு மின்சார இறக்கைகள் இந்த காரில் இணைக்கப்பட்டு உள்ளன. 


 துபாயில் இந்த பறக்கும் காரின் சோதனை ஓட்டம் ஒன்றரை மணிநேரம் நடத்தப்பட்டது. அதில் ஆளில்லாமல் கார் இயக்கப்பட்டது அடுத்த தலைமுறைக்கான பறக்கும் காருக்கான முக்கிய அடித்தளம் ஆக இந்த சோதனை அமையும் என அந்நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.இந்த கார் விரைவில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்கும் காரை வாங்க நீங்க ரெடியா?


பொன்னியின் செல்வனில் தோன்றும் வால்நட்சத்திரத்தின் பெயர் என்ன?


பொன்னியின் செல்வன் படத்தில் துவக்கத்திலிருந்தே ஒரு வால் நட்சத்திரம் தோன்றும். அப்படி தோன்றினால் அது அரசு குலத்திற்கு ஆகாது என்பது  நம்பிக்கை. அந்த நம்பிக்கை தற்போதும் உள்ளது தான். படம் முழுவதும் தோன்றும் அந்த வால் நட்சத்திரம் பகலிலும் தெரியும் அளவுக்கு பெரிதாக காட்டப்படும். பொன்னியின் செல்வனில் நிகழும் சோழர்களின் வரலாறு கிட்டதட்ட 1000 ஆண்டுகள் பழமையானது . அப்போது தோன்றிய வால்நட்சத்திரத்தை பற்றி பெயர் எதுமில்லை.வால்நட்சத்திரத்தை "தூமகேது" என நம் தமிழ் இலங்கியங்கள் அழைக்கின்றன.


 வால்நட்சத்திரங்கள் சூரியமண்டலத்தின்  உள்ள "ஊர்ட்மேகம்" என்ற பகுதியிலிருந்து  வருகிறது. அதாவது சூரியனை சுற்றுகிற தனது பாதையில் நம் பூமியை கடந்து செல்லும்போது நம்கண்களுக்கு தெரிகிறது. பல வால்நட்சத்திரங்கள் அவ்வப்போது  வந்து செல்வது வழக்கம் தான். ஆனால் சில பெரிய புகழ்பெற்ற வால்நட்சத்திரங்கள் உண்டு.அதில் ஹோலி வால்நட்சத்திரம் மிக முக்கியமானது.


=========


         படத்தில் வந்தியத்தேவனும் பூங்குழலியும் பேசிக்கொள்வது...

"வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றுகிறதே! அதைப் பற்றி உன் கருத்து என்ன?" என்று பூங்குழலி கேட்டாள்.

"என் கருத்து ஒன்றுமில்லை. வால் நட்சத்திரம் தோன்றுகிறது; அவ்வளவுதான்!" என்றான் வந்தியத்தேவன்.   

"வால் நட்சத்திரம் வானில் தோன்றினால் பூமியில் பெரிய கேடுகள் விளையும் என்று சொல்கிறார்களே!"    

"அப்படித்தான் சிலர் சொல்கிறார்கள்."    

"நீ என்ன சொல்லுகிறாய்?"    

"நான் ஜோதிட சாஸ்திரம் படித்ததில்லை. ஜனங்கள் அப்படிச் சொல்லிக் கொள்வதுதான் எனக்குத் தெரியும்." சற்று நேரம் மௌனமாக நடந்தார்கள்.

============



 மற்றொரு இடத்தில் வந்தியத்தேவனும் சோதிடரும் பேசிக்கொள்வது.


வந்தியத்தேவன்  , "சோதிடரே! வால் நட்சத்திரம் எப்படி இருக்கிறது?" என்று வினவினான். 

"மிகமிக நீளமாகப் பின்னிரவு நேரங்களில் தெரிகிறது. இனிமேல் நீளம் குறைய வேண்டியதுதான். தூமகேதுவினால் விபத்து ஏதேனும் ஏற்படுவதாயிருந்தால், அதிசீக்கிரத்தில் அது ஏற்பட்டாக வேண்டும். கடவுளே! இராஜகுலத்தில் யாருக்கு என்ன நேரிடுமோ என்னமோ!" என்றார் சோதிடர்.   

 வந்தியத்தேவனுடைய உள்ளம் அதிவேகமாக அங்குமிங்கும் பாய்ந்தது. தஞ்சையில் பாரிச வாயு பீடித்துப் படுத்த படுக்கையாயிருக்கும் சுந்தர சோழரும், நாகைப்பட்டினத்தில் நடுக்குசுரம் வந்து கிடக்கும் பொன்னியின் செல்வரும், கடம்பூர் மாளிகையில் நந்தினியைச் சந்திக்கப் போகும் ஆதித்த கரிகாலரும், இராஜ்யத்துக்கு ஆசைப்பட்டு மக்களின் கோபத்துக்குப் பாத்திரமாகியிருக்கும் மதுராந்தகரும், கையில் கொலை வாளை வைத்துக்கொண்டு கொஞ்சும் நந்தினியும் அவனுடைய உள்ளத்தில் வரிசையாகப் பவனி வந்தார்கள்.

இதுபோல பொன்னியின் செல்வன் நாவலிலுள்ள ஐந்து பாகத்திலும் வால் நட்சத்திரம் குறித்து பேசிக்கொண்டே இருப்பார்கள்.

  அமேசானில் வாங்க படத்தைகிளிக் செய்க

=========


ஹாலி வால் நட்சத்திரம்

ஹாலி வால் நட்சத்திரம் ஒவ்வொரு 75 அல்லது 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை, பூமிக்கு அருகில் வந்துசெல்கிறது. பூமியிலிருந்து வெறும் கண்களால் பார்க்கக் கூடியனவற்றில் குறைந்த கால இடைவெளியில் பூமிக்கு அருகில் வந்துசெல்லும் ஒரே வால் நட்சத்திரம் ஹாலி வால் நட்சத்திரம்தான்.

வால் நட்சத்திரம் பற்றிய குறிப்புகள், கி.மு. காலத்திலிருந்தே கிடைக்கின்றன. சீனர்கள், பாபிலோனியர்கள் என்று பலரும் இதைப் பற்றி பதிவுசெய்திருக்கிறார்கள். அந்த வால் நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வருகிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் எட்மண்ட் ஹாலி.


 அதனால்தான், அதன் பெயர், ‘ஹாலியின் வால் நட்சத்திரம்’!1910க்கு பிறகு 1986 பிப்ரவரி 9: வந்து சென்றது ஹாலி வால் நட்சத்திரம் பூமியில் தெரிந்தது.மீண்டும் 2061 ல் பார்க்கலாம்.

       இந்த ஹாலி வால் நட்சத்திரம் தான் 1000 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் காலத்தில் தோன்றியதாக இருக்கலாம்.

பூமியை நோக்கி வந்த சிறுகோளை திசை திரும்பிய நாசா வின் விண்கலம்

 


பூமிக்கு அருகே விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான விண்கற்களும், சிறு கோள்களும் உள்ளன. இந்த கோள்களும், விண்கற்களும் பூமியின் சுற்று வட்ட பாதைக்குள் நுழையும் அபாயம் உள்ளதா என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள்

அமேசானில் இந்த டிவியை
 வாங்க படத்தை கிளக் செய்க
 ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.     

பூமியை சிறுகோள்கள் தாக்கும் அபாயத்தை முறியடிக்கும் வகையில் நாசா புதிய திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்திற்கு டார்ட் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இரட்டை சிறுகோள் திசை திருப்பல் சோதனை என்பதாகும்.  இந்த நிலையில் இந்த திட்டம் மூலம் பூமியை நோக்கி வரும் டிமார்போஸ் என்னும் சிறியகோள் மீது விண்கலனை மோதவிடுவதற்கான சோதனை முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். டிமார் போஸ் விண்கலம் 525 அடி சுற்றளவு கொண்டது.



  இந்த சோதனை திட்டம் இன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.44மணிக்கு சிறுகோள் மீது வினாடிக்கு 22,500 கிலோமீட்டர் வேகத்தில் சென்று நாசா விண்கலம் மோதியது. இந்த மோதலின் போது சிறுகோள் அதன் சுற்றுப் பாதையில் இருந்து திசை திரும்பியது. வெற்றிகரமாக நிகழ்த்தபட்ட இந்த சோதனையால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.  இந்த அரிய நிகழ்வை செயற்கைகோளில் உள்ள கேமிரா மூலம் நாசா நேரடியாக ஒளிபரப்பியது.


என் 2- வது இலவச மின் நூல் - வேற்றுகிரகவாசியை சந்தித்தேன்...




சிறுவயதில் வானத்தில் கடவுள்களை தேடதுவங்கிய பயணம் நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சத்தில் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
20 ஆண்டுகளுக்கு முன் எழுத துவங்கி... அவ்வப்போது கிடைக்கும் குறிப்புகள் புகைப்படங்களை சேகரித்து பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.
வேற்றிகிரகவாசிகள் இல்லை என சொல்பவர்களும் உண்டு. இந்த பிரபஞ்சத்தில் மனித இனம் தனித்து இருக்கிறதா? என்றால் என் அளவில் இல்லை என சொல்வேன்.நம்மை விட வளர்ச்சி யடைந்த மனிதர்களும், நம்மளவுக்கு வளர்ச்சியடையாத மனிதர்களும் பிரபஞ்சம் எங்கும் நிறைந்திருக்கலாம்.
இந்நூலில் வெறும் கற்பனையாக இல்லாமல் புகைப்பட ஆதாரங்களுடன் கட்டுரைகள் உள்ளன. சில படங்கள் நேசனல் ஜியோகிராபி போன்ற இணையத்தில் கிடைத்தவை. முழுமையாக படித்து பாருங்கள் நீங்களும் வேற்றுகிரகவாசியை சந்திக்கலாம்...
இந்நூலினினை பொருத்துவரை வடிவமைப்பு, அட்டைப்படம் என்னுடையவை என்பது பெருமையோடு பதிவு செய்கிறேன்.
------------------------------------------------
இலவச மின் இணைப்பு கீழே
அதை கிளிக் செய்து இலவச பதிவிறக்கம் செய்யலாம்..
கணிணி,செல்பேசி,கிண்டில் கருவிகள் உள்ளி்ட்ட அனைத்து சாதனங்களிலும் படிக்கலாம்

உளவாளி செயலிகள்-எச்சரிக்கையுடன் பயன்படுத்துவோம் கைபேசியை!



சொன்னபடி கேட்கும், வேண்டியதைத் தேடித்தரும், நினைத்ததைப் பகிர முடியும் என்ற வசதிகளைத் தாண்டி ஸ்மார்ட் போன்கள்
யாருக்கு ஸ்மார்ட்டாக இருக்கின்றன என்பதுதான் தற்போதைய விவாதமாக மாறிவருகிறது.
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தைப் பயன்படுத்தி கூகுள் உளவு பார்ப்பதாக ஒரு புகார் உண்டு. அதேபோல ஆப்பிளின் ஐஓஎஸ் மீதும் இப்படி ஒரு புகார் முன்பு வந்திருக்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பலவற்றின் மீதும் இதுபோன்ற புகார்கள் பல உள்ளன. அந்த வரிசையில் செல்போன் செயலிகள் பலவும் இதே புகாருக்கு உள்ளாகி வருகின்றன.
ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் நிறுவனங்களின் வருமானமே நம்முடைய செய்திப் பரிமாற்றத் தரவுகளின் அடிப்படையில்தான். நமக்கு சில பயன்பாட்டு வசதிகளை தந்துவிட்டு, நாம் பகிரும் தகவல்களை மூலதனமாக்கி வருமானம் ஈட்டுவது
அவர்களின் வணிகத் தந்திரம். இந்தத் தகவல்கள் நேரடியாக நம்முடைய வாழ்க்கையில் குறுக்கீட்டை ஏற்படுத்துமா என்பது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (Artificial Intelligence) கைகளில்தான் உள்ளது.
உளவு செயலிகள்
உளவு பார்ப்பது ஒன்றை மட்டுமே தன் வேலையாகக் கொண்டு செயல்படும் செயலிகள் பல தற்போது வந்துவிட்டன. முன்னர் சொன்னநிறுவனச் செயலிகளைப் போல நமக்கு எந்தப் பயனையும்அவை தருவது இல்லை. மாறாக நாம் எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம், யாருடன் வாட்சப் சேட் செய்கிறோம்,ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் என்ன?, யாருடன் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், யாருடன் செல்ஃபி எடுக்கிறோம் என்று எல்லா தகவல்களையும் உடனுக்குடன் தன்னுடைய எஜ மானருக்கு பகிர்ந்து கோண்டே இருப்பதுதான் இச்செயலிகளின் முழு நேர வேலை. தனி நபர் களைக் குறிவைத்து அவர்களைக் கண்காணித்து உளவறியும் இந்த செயலிகள் மிகவும் ஆபத்தான சமூகச் சிக்கல்களை உருவாக்கி வருகின்றன.இது சாத்தியமா என்பவர்களுக்கு அமெரிக்காவின் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு ஆண்ட்ராய்டு செயலி மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர். அவர்கள் உருவாக்கிய ஆண்ட்ராய்டு செயலி யைக் கொண்டு மொபைல் போன் மூலம் ஒருவரின் இருப்பிடம் மற்றும் பயணிக்கும் இடங்கள் ஆகியவற்றை உளவு பார்க்க முடியும் என நிரூபித்துள்ளனர். இந்த ஆய்வு குறித்து அப்பல்கலைக்கழகப் பேராசிரியர்குவேரா நோபிர், “கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களைப் பதிவிறக்கும் பிளே ஸ்டோரில் 25 அமெரிக்க டாலர்கள் பணம் செலுத்தி எந்தவொரு நபரும் ஒரு செயலியை மக்களின் பயன்பாட்டுக்காக பதிவேற்ற முடியும். அந்த செயலிகளின் நம்பகத்தன்மை குறித்து யாரும் சோதிப்பதில்லை. எனவே ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யும் போது அதன் நம்பகத்தன்மை குறித்து சிந்தித்து நாம்தான் முடிவெடுக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார். பள்ளி செல்லும் குழந்தைகளை பெற்றோர் கண்காணிப்பதற்கு, வேலையாட்களை முதலாளிகள் கண்காணிக்க என்பது போன்ற முகமூடிகளுடன் உளவு செயலிகள் சில கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன. இந்த செயலிகளைப் பயன்படுத்தி இருப்பிடம் அறிவது, போன் கால்கள், குறுஞ்செய்திகளை கண்காணிப்பது போன்ற சில வசதிகள் கிடைக்கின்றன. ஆனால், மொத்த போனின் செயல்பாட்டையும் உளவறியக்கூடிய செயலிகள் பல இணையவெளியில் கட்டணத் திட்டத்தில்கிடைக்கின்றன. இந்த செயலிகளை எப்படிப் பயன்படுத்துவது, உளவு பார்க்க வேண்டியவரின் கைபேசியில் எப்படி நிறுவுவது, மாதக் கட்டணம் எனப் பல தகவல்களும் இத்தளங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புகருதி இத்தகைய இணையதளங்கள், செயலிகள் பற்றிய விபரங்கள் இக்கட்டுரையில் இடம்பெறவில்லை.
தற்காப்பு குறிப்புகள்
உளவு செயலிகள் யாருடைய ஸ்மார்ட் போனிலும் நிறுவப்பட்டிருக்கலாம். கண்டறிவது சற்றுக் கடினமே. காரணம் இச்செயலிகள் சுய பெயருடன் பெரும்பாலும் நிறுவப்படுவதில்லை என்பதுதான். செட்டிங்ஸ், டூல்ஸ் என்ற பெயரிலோ அல்லது செயலிப் பட்டியலில் இடம்
பெறாமலோ (Hide) மறைந்திருக்கலாம். இத்தகைய செயலிகள் நிறுவப்பட்டிருக்கிறதா என்பதை தொடர் கண்காணிப்பின் மூலமே கண்டறியமுடியும். சந்தேகப்
படுபவர்கள் மேற்கொள்ளவேண்டிய சோதனைமுறைகள் சில


1. ஃபோனின் இணையத் தொடர்பு தானாகவே செயல்பாட்டிற்கு வருகிறதா என்பதை கண்டறியவும். (Data Activated)
2. ஒய்ஃபீ (Wifi) இணைப்பு தானாகவே செயல்படுதல்.
3. அணைத்து வைக்கப்பட்ட லொக்கேஷன் (Location) வசதி தானாகவே செயல்பாட்டிற்கு வருதல்.
4. குறுஞ்செய்திகளோ, கால்களோ வராத நிலையில் திரை தானாகவே விட்டு விட்டு ஒளிர்தல்.
5. வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் தகவல்களை நாம் பார்க்காமலே படித்ததுபோலக் காட்டுவது ஆகிய செயல்பாடுகளைக் கண்காணித்து அறியலாம். உங்களுக்கு சந்தேகம் வந்தால் உடனடியாக செய்ய வேண்டியது தொலைபேசித் தொடர்புகள், குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், புகைப்படங்கள் ஆகியவற்றை உடனடியாக மெமரி கார்டுக்கு பேக்கப் செய்து விட்டு போனை ரீசெட் செய்துவிடுங்கள்.

நன்றி தீக்கதீர் நாளிதழ்

உலகைக் கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ்


இன்றைய கணினி உலகைக் கலங்கடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயர் ரான்சம்வேர். அதிரடியாகப் புகுந்து கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக உலகின் பெரும்பாலான நாடுகளின் கணினிகளை முடக்கிப் போட்டிருக்கிறது. தற்போது டிஜிட்டல் இந்தியாவிற்கான முன்னுதாரணம் குஜராத் என மோடி மார்தட்டும் குஜராத்தின் பல்வேறு அரசு துறைகளில் உள்ள கணினிகளும் இந்த வைரஸ் தாக்குதலில் தப்பவில்லை.

அடுத்த 24 மணி நேரத்தில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடியி மழையோ,அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
            இந்த அறிவிப்பை சமீபமாக அடிக்கடி கேட்டிருப்பீர்கள். வானிலை வாசிப்பாளர் ஒருவர் மக்களிடயே பிரபலமான நபராக மாறிப்போனது வானிலை  அறிவிப்பும் ,அதை பற்றி விழிப்புணர்வும்முக்கியதுவம் பெறதுவங்கியதால் தான். ஒய்வு பெற்ற சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் வானிலை அறிவிக்கும் விதமே அவரை நாடறிந்த மனிதராக மாற்றியிருக்கிறது.
                    வானிலை ஆய்வுக்காக செயற்கைகோள்களை பூமியை சுற்றிவரச்செய்து அதன் மூலமாக கிடைக்கிற தகவலை,புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தினசரி ஒரு குறிப்பிட்ட பகுதியில் வெப்பம், மழை வருமா?வந்தால் எப்ப வரும்? போன்ற தகவல்கள் அறிவிக்கப்படுகின்றன.இந்த அறிவிப்புகள் 80-90 சதவீதம் சரியாகவே இருக்கின்றன.
          வானிலையை மிக துல்லியமாக கணிப்பது சாத்தியமில்லை. நாம் பார்த்திருப்போம் ... மேகம் திரண்டு இடி மின்னல் துவங்கினாலும் சில சமயங்களில் மழை பெய்வதில்லை.மழை பெய்வதற்கு மேகம் மட்டும் போதாது. மேகத்தை மழையாக மாற்ற   காற்றின் ஈரப்பதம்,காற்றின் வேகம் உள்ளிட்ட பல காரணிகள் சரியாக அமைய வேண்டும்.

மே-9 தவறவிட்டா 2019

மே -9 தவறவிட்டா 2019 மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பு இது. சில விஷயங்கள் இப்படித்தான். அப்படியான் ஒரு வாய்ப்பு மே.9 கிடைக்கப்போகுது.சூரிய குடும்பத்து முதல் பிள்ளை புதன் கிரகம் சூரியனை கிராஸ் பண்ணப்போறார்.அத பூமியிலிருந்து நாம பாக்குற வாய்ப்பு இருக்கு. அதுவும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள்மட்டும் தான்.
                       
                                  புதன் சூரியனை கிராஸ்பண்ணும் போது அது சூரியனோடு முகத்துல மச்சம் இருக்குறமாதரி அழகாக இருக்கும். சில மணி நேரங்களே நீடிக்கும்.ஏற்கனவே சூரியனின் முகத்தில் சிறுசிறு புள்ளிகள் இருக்கின்றன. அவை சூரியனின் மேற்பரப்பில் வெப்பம் குறைவான பகுதிகளாகும். அதாவது சூரியனின் மேற்பரப்பு  வெப்ப நிலை 5800 கெல்வின். இதில் சில இடங்களின் வெப்பம் குறைவான சூரிய புள்ளிகள் இருக்கும் . இந்த பகுதி பொதுவாக  குளிர் பகுதி என்றும் சொல்லப்படுகிறது. இங்கே எவ்வளவு வெப்பம் இருக்கும் . சூரியனின்  மேற்பகுதியை விட 1200 கெல்வின் மட்டுமே குறைவு. சூரியப் புள்ளிகளில் , சுமார் 3800 கெல்வின் வெப்பம் காணப்படும்.ஆனால் சூரியனுக்கு வெளியிலிருந்து பார்ப்பதற்கு இந்தப் பகுதி  மற்ற இடங்களை விட கருப்பாகவும், தெளிவான கருப்புப்புள்ளியாகத் தெரியும். . சில சூரியப் புள்ளிகளின் விட்டம் 50,000 கி.மீ.அளவு கூட இருக்கும்.
 ஆனால் இப்போது சூரிய மண்டலத்தின் முதல் கிரகமான புதன் ஒரு புதிய மச்சத்தை உருவாக்கப்போகிறது.  அழகாக வட்ட வடிவிலான  மச்சத்தை போல ஒரு புள்ளியை உருவாக்கப்போகிறது.

நாம் எங்கிருந்து வந்தோம்?

இது தெரியாதா? ஆப்பிரிக்காவுல குரங்கா இருந்து கொஞ்சம் கொஞ்சமா மாறி மனிதனா மாறியிருக்கோம்...
அதுக்கும் முன்னால? டைனோசார் இருந்தது..அதுக்கு முன்னால தவளை,மீன்கள், ஒரு செல் அமீபா ..
         அதுக்கும் முன்னால? பூமி ,சூரியன் உருவாகியிருகும்.... அதுக்கும் முன்னால..... இப்படி அதுக்கும் முன்னாலன்னு ,அதுக்கும் முன்னாலன்ணு சொல்லிட்டோ போனால், 14 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) வருஷங்களுக்கு முன்னால் எலுமிச்சம் பழம் சைஸ்லயிருக்குற ஒரு பொருள் வெடிச்சதது. அதுல இருந்து எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களை கொண்ட   அணு உருவானது. இந்த அணுக்களின் சேர்க்கைதான் வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன. நட்சத்திரம்,சூரியன், பூமி, நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி, செல்போன், மேஜை, நாற்காலி, பேனா, மோட்டார் வாகனங்கள், கம்ப்யூட்டர் ,நாம்  இப்படி எல்லாமே அணு சேர்க்கையில் உருவானவைதான்.

பூமிக்கு காய்ச்சல்


தற்போது சென்னையை பாடாய் படுத்தும் மழைக்கு என்ன காரணம்? அதே நேரத்தில் என்ன வெயிலு... என்ன வெயிலு கொளுத்துப்பா...இப்படி நாம் அடிக்கடி புழம்புகிறோம்.மே மாத கடைசியோடு முடிய வேண்டிய வெயிலின் தாக்கம் செப்டம்பர் மாதம் வரை இருக்கிறது.அதே போல மார்கழி, தை குளிர்காலமும் வழக்கத்தை விட கடும் குளிராக மாறி கொண்டுவருகிறது. மேலும் மழை துவங்கியதுமே டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவத்தொடங்கி உயிர் பலி வாங்குகிறது.  வரும் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமான அளவில் பரவும் என்று அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆய்வு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.புளோரிடா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த டிரேக் கூமிங்ஸ் என்ற ஆய்வாளர்  வெப்பமான பருவநிலை மாற்றத்தினால் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும். குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவைச்சேர்ந்த 8 நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்கிறார். 1997லிருந்து இந்த எட்டு நாடுகளில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. அடுத்து ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக நோய்கள் பரவிவருகின்றன.
கடற்கரை கிராமங்களை கொஞ்சம் ,கொஞ்சமாக கடல் விழுங்கி வருகிறது.
எதிர்பாராத வறட்சி, வெள்ளம் ,புயல் அதனால் பாதிக்கப்படும் விவசாயம்.... இப்படி நிறைய பாதிப்புகள் நம் கண்முன்னால் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் ?  நாம் வாழும் பூமிக்கு  காய்ச்சல்  வந்து விட்டது தான்..

செவ்வாய் கிரகம் சென்று வந்தேன்...

 

நேற்று மதியம் 2.40 மணியிலிருந்து 5 மணி வரை செவ்வாய் கிரகத்தில் தான் இருந்தேன்.
த மார்ஷியன் படம் செவ்வாய் கிரத்திற்கு சென்று வந்த அனுபவத்தை கொடுத்திருக்கிறது.3டி படம் ... படம் பார்ப்பவர்களை செவ்வாய்கிரகத்திற்கே அழைச்சென்றுவிடுகிறது படக்காட்சிகள்.
           எதோ ஒரு பலைவனத்தில் படம்மாக்கபட்ட த மார்ஷின் படம் பார்வையாளர்களை செவ்வாய் கிரகத்தில் கதை நடப்பதாக சரியாக நம்ப வைக்கிறது. படத்தில் செவ்வாய் கிரக காட்சிகள் அருமை படமாக்கப்பட்டுள்ளன.
            நாசா வெளியிட்டுள்ள செவ்வாய் கிரத்தன் அசல் புகைப்படங்களை பார்த்திருக்கிறேன், அதை அப்படியே படத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள். கதை மிகச்சிறியது தான் , கதை என்ன என்பதற்கு முன்னால் படத்தின் சில காட்சிகள் பற்றி...

பூமிக்கு செப்டம்பர் 28 ல் - ஆபத்து


இந்த  மாதம் 15 மற்றும் 28 தேதிகளுக்குள் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியின் மீது மோதவிருப்பதாகவும், இதனால் ஏற்படும் பெரும் சேதத்தால் பூமி தனது அழிவை சந்திக்கும் என்றும் பரபரப்பான தகவல் வெளிநாட்டு ஊடகங்களால் பரப்பப்பட்டு வருகிறது.
பல இணையதளங்கள் விண்கற்களை தாங்கள் பின்தொடர்வதாகவும் அவை பூமியை நோக்கி விழ இருப்பதாகவும் மக்கள் மத்தியில் பீதி கிளப்பப்படுகிறது.

hello பூளூட்டோ....

நாம் வாழும் சூரியமண்டலத்தின் கடைசி கிரகத்திற்கு hello சொல்லிவிட்டோம். 480 கோடி கிலோமீட்டர் தூரம், 9 ஆண்டுகள் பயணம் செய்து வெற்றிகரமாக பூளூட்டோ கிரகத்தை அடைந்திருக்கிறது அமெரிக்காவின் நியூ ஹொரைசன்ஸ்' விண்கலம் .பூமியிலிருந்து பார்க்கும் போது அமெரிக்காவின் வெற்றியாக தெரியும் ஆனால் இந்த வெற்றி ஒட்டுமொத்தமாக மனிதகுலத்தின் வெற்றி.
‘நாசா’வை சேர்ந்த விஞ்ஞானி ஜான் கிரன்ஸ்பெல்டு, ‘‘புளூட்டோ கிரகத்தை நியூ ஹாரிஸன்ஸ் விண்கலம் சென்றடைந்திருப்பது மனித குல வரலாற்றில் உன்னதமான தருணம்’’ என குறிப்பிட்டார்.

11 வயது சிறுமியின் யோசனை....

சூரியமண்டலத்தில் சனி கிரகம் வரை பலநூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு நாள்காட்டியில்(காலண்டர்) பயன்படுத்திவருகிறோம்.சனிகிரகம் வரை வெறும் கண்காளால் பார்க்கலாம்.நம் முன்னோர்கள் அவற்றை தொடர்ந்து கண்காணித்து ஜோதிடம் ,பஞ்சாங்கம் வரை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

நியூட்ரினோ ஆபத்தா.? அவசியமா?

கண்ணுக்கு தெரியாத ,மிகமிகமிக நுட்பமான துகள் இன்று தமிழகத்தில்  முக்கிய விவாத பொருளாக மாறியிரு க்கிறது. நியூட்ரினோ ஆய்வு என்பது ஆறிவியல்  தொடர்பானது. ஆனால் அதற்காக செய்யப்படுகிற மலையை குடைந்து சுரங்கம் அமைப்பது உள்ளிட்ட  ஆய்வுகள்  அப்பகுதி மக்களிடம் பயத்தை உருவாக்கி இருக்கிறது. சினிமா உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும்  ஊடுறுவும் அரசியல் தற்போது அறிவியல் ஆய்வுக்குள்ளும் புகுந்திருக்கிறது.

முதல் முறையாக வால்நட்சத்திரத்தில் தரையிறங்கும் ஆய்வுக் கலம் -வீடியோ

விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் முதல்முறையாக, வால்நட்சத்திரம் ஒன்றில் ஆய்வுக் கலத்தை தரையிறக்கும் முயற்சியின் இறுதிக் கட்டத்தை ஐரோப்பிய விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ரொசெட்டோ விண்கலத்திலிருந்து, 67பி/சுரியுமொவ்-கெராசிமென்கோ என்ற வால் நட்சத்திரத்தில் தரையிறக்குவதற்காக ஃபைலி ஆய்வுக்கலம் தனியே பிரிக்கப்பட்டுவிட்டது.

ரொசெட்டோ

ரொசெட்டா என்பது ஐரோப்பிய விண்வெளி மையத்தால், வால் நட்சத்திரம் ஒன்றை ஆய்வதற்காக தொடங்கப்பட்ட 12 ஆண்டுகாலத் திட்டமாகும். ரொசெட்டா விண்கலம் 2004- ஆண்டு மார்ச் 2-ம் தேதி ஆரியாயன் ஏவுகணை மூலம் ஏவப்பட்டது. ரொசெட்டா விண்கலத்தில், ஃபைலி என்ற தரையுலவி இணைக்கப்பட்டுள்ளது.

செவ்வாயை சுத்திகாட்டுறேன் வாங்க....

உண்மைதான்... ஏதோ மதுரைய சுத்திகாட்டுற மாதிரி இருக்கே... . பொய்யில்லை உண்மை.இப்போ இந்தியாவோட மங்கள்யானை சேர்த்து மொத்தம் 7 சேட்டிலைடுகள் செவ்வாய் கிரகத்தை சுற்றி வருது.

வேற்றுகிரகவாசிகளை எப்போது நாம் சந்திப்போம்?

கடந்த மாதம்  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா காணொளி(வீடியோ) ஒன்றை தனது இணையதளத்தில் வெளியிட்டது.அதில் நிலவில் மனித உருவம் நடப்பது போன்ற காட்சிகள் உள்ளன.அது வேற்றுகிரகவாசியாக இருக்கலாமோ என்ற பரபரபரப்பை உலக முழுவதும் ஏற்படுத்தியது.அந்த வீடியோ யூடியுப் தளத்தில் பதிவேற்றபட்டது ... சில நாட்களிலேயே உலக முழுவதும் 20 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்து சிலர் பரவசபட்டார்கள்,சிலர் இது ஏமாற்றுவேலை என்று நம்ப மறுத்தார்கள். கடைசியில் அது வெறும் தூசுதான் என்று விளக்கமளித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
      இதே போன்று சில தினங்களுக்கு முன்னாள் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹௌஸ்டன் நகர வானில் மேகங்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான பொருளைப் பல மக்கள் புகைப்படம் எடுத்து தமது டுவிட்டர் மற்றும் ஏனைய சமூகத் தளங்களில்

செவ்வாயில் ஓடிய நதி வீடியோ +மங்கல்யாண்

நொடிக்கு 22.1 கிமீ வேகத்தில்  செவ்வாயை நோக்கி பயணத்து கொண்டிருந்த மங்கள்யானை தற்போது வேகத்தை குறைக்கும் வேலைகள் நடந்து கொண்டருக்கின் றன.மங்கள் யாண் விண்கலம், தனது நீண்ட பயணத்தின் நிறைவாக, செவ்வாய் கிரகத்தின் வான்வெளிக்குள் நுழைந்துள்ளது. இந்த விண் கலம், புதனன்று (24)செவ்வாயின் நீள் வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதற் காக திங்களன்று நடந்த‘டெஸ்ட் பயர்’ வெற்றிகர மாக முடிந்துள்ளது.

செவ்வாயை அடையும் முதல் ஆசிய நாடு இந்தியா


செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையை மங்கள்யான் செயற்கைகோள் இந்தியாவுக்கு பெற்றுத்தரும் வாய்ப்புள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) அறிவியல் செயலாளர் வி.கோட்டீஸ்வர ராவ் தெரிவித்தார்.