“America Is Finally Taking Extraterrestrials Seriously” — அமெரிக்காவின் புகழ்பெற்ற TIME (2026 ஆகஸ்ட் 6 ) இதழில் வெளியான இந்தத் தலைப்பு, வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆர்வம் கொண்டவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியது.
இந்தத் தகவல், என்னைப் போன்ற “வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம்” என்று நம்புகிறவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரையின் நோக்கம், “அமெரிக்கா வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடித்துவிட்டது” என்று கூறுவது அல்ல.
அப்படியானால் உண்மையில் என்ன நடக்கிறது?அடையாளம் காணப்படாத வான்வெளி நிகழ்வுகள் குறித்து முன்பைவிட அதிகமான தரவுகளைச் சேகரித்து, அவற்றை அறிவியல் முறையிலும், தேசியப் பாதுகாப்பு கோணத்திலும் ஆராய வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்று வருகிறது.முன்பு பொதுவாக UFO (Unidentified Flying Object) என்று அழைக்கப்பட்டவற்றை, அமெரிக்க அரசு தற்போது UAP (Unidentified Anomalous Phenomena) — அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகள் — என்ற சொல்லைப் பயன்படுத்திக் குறிப்பிடுகிறது.ஆனால் இங்கே ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது.
இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
வேற்றுகிரகவாசிகள்
இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? என்று நீங்கள் கேட்கலாம்.
இந்தக்
கேள்விக்கான பதில், வேற்றுகிரகவாசிகளைத் தேடுவதைக் கடந்தும் செல்கிறது.
1. நாம் மட்டும் தனியாக இருக்கிறோமா?
நீண்ட
நெடுங்காலமாகவே வானியல் விஞ்ஞானிகளைத் தொடர்ந்து வரும் ஒரு கேள்வி:
இந்தப்
பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தானா? நாம் வாழும் பூமி, அளவிட முடியாத அளவுக்கு விரிந்துள்ள
பிரபஞ்சத்தில் ஒரு சிறிய புள்ளி மட்டுமே. நம்மைச் சுற்றி கோடிக்கணக்கான
நட்சத்திரங்கள்; அவற்றைச் சுற்றி எண்ணற்ற
கோள்கள்.அப்படியிருக்கும்போது, இந்தப் பிரபஞ்சத்தில்
சிந்திக்கக்கூடிய உயிர்கள் பூமியில் மட்டுமே இருக்கின்றனவா?நமக்கு
துணையாக வேறு அறிவார்ந்த உயிர்கள் எங்காவது இருக்கிறார்களா?இந்த
ஆதங்கம்தான் வேற்றுகிரகவாசிகள் தேடலின் அடிப்படை கேள்விகளில் ஒன்று.
2. மனித இனத்தின் எதிர்காலம் என்ன?
பூமிக்கு வயதாகிக்கொண்டே இருக்கிறது. அதைவிட கவலைக்குரியது, நாம் வாழும் இந்தப் பூமியையே கழிவுகளால், மாசுகளால், அளவுக்கு மீறிய வளச் சுரண்டலால் சீரழித்து வருகிறோம்.எதிர்காலத்தில் மனித இனம் வேறு ஒரு உலகில் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகுமா?அதனால்தான் செவ்வாய், சனியின் டைட்டன், வியாழனின் யூரோப்பா போன்ற உலகங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர்.
இங்கே
ஒரு முக்கியமான வேறுபாட்டை நினைவில் கொள்ள வேண்டும்.மனிதர்கள் வாழத் தகுந்த
உலகைத் தேடுவது வேறு; வேற்றுகிரகவாசிகளைத் தேடுவது வேறு.ஆனால் இந்த இரண்டு தேடல்களும் ஒரே பெரிய கேள்விக்குள்
வந்து சேர்கின்றன:
பூமிக்கு
வெளியே உயிர் அல்லது அறிவார்ந்த வாழ்க்கை இருக்கிறதா?
இந்த கட்டுரையை முழுமையாக
படிக்க கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்க..



No comments:
Post a Comment