ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு நகல் இலவச டவுன்லோட் செய்ய...

செப்.28ல் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது கர்னாடகாவில் உள்ள பார்ப்பன அக்ரஹா சிறையில் அடைக்கப்பட்டுள் ளார்.அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது கட்சிக்காரர்கள் பஸ்எரிப்பு,மறியல், பந்த், உண்ணாவிரதம், மொட்டை அடித்தல்,எல்லாம் முடித்துவிட்டு தற்போது சர்வமதப்பிரர்த்தனை செய்கிறார்கள்.

          சென்னையில் திரையுலகினர் இருந்த உண்ணாவிரத போராட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் "கடவுளுக்கு மனிதன் தண்டனை வழங்கலாமா?" என்று எழுத்தப்பட்டிருந்தது.மேலும் மதுரையில் "நீதிதேவதையே தர்மத்தாய்க்கு அநீதியா",என்றும்.ஓரு குழந்தை அழுவதாக உள்ள போஸ்டரில் அம்மா... வா... என்ற வாசகத்துக்கு பின்னால் காவிரி வேண்டாம்....அம்மா கொடு என்றும், இப்படி பல அழகான வார்த்தைகளால் அழகரிக்கப்பட்ட போஸ்டர்கள் பார்க்க முடிந்தது.

        ஜெ.தீர்ப்பு நகல் 
        டவுன்லோட் செய்ய  இங்கே...

    இதையும் படித்து பாருங்கள்....

  சொத்துக்குவிப்பு வழக்கும் முதல்வர்களும்...


       வரும் செவ்வாய்கிழமை (அக்டோபர்.7) ஜாமீன் மனுமீதான தீர்ப்பு வருகிறது.ஜாமீன் கிடைத்தால் பிர்ச்சனையில்லை,கிடைக்கவிட்டால் ....? ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு அன்று  திடீரென பஸ்கள் அனைத்தையும் நிறுத்தி விட மதுரைக்கு பக்கத்து ஊர்காரனான நான் ஊர் வந்து சேர பட்டபாடு எனக்கு தான் தெரியும்.

7 தேதி என்னவெல்லாம் நடக்குமோ?????

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

தீர்ப்பின் நகல் கொடுத்ததற்கு நன்றி. ஜாமீன் கிடைப்பது சற்று கடினம்தான் போல் தெரிகிறது.