நாம் ஏன் இரவில் தூங்குகிறோம்?இந்தகேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்கு முன்னால் ...
நம் எல்லோருடைய உடலுக்குள் உள்ள கடிகாரம் பற்றி பார்க்கலாம்..
டிஜிட்டல் கடிகாரம், முட்களை கொண்ட கடிகாரம், இவற்றை போல தற்போது கூகுள் கடிகாரம் வந்திருக்கிறது.இந்த கடிகாரங்கள் நம் அன்றாட வாழ்க்கையை திட்டமிட உதவுகிறது. இதே போல மனிதர்கள் உட்பட மரங்கள்,விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரனங்களுக்குள்ளும் ஒரு கடிகாரம் இருக்கிறது.அந்த கடிகாரம் தான் நம்மை,விலங்குகளை, மரம்,செடி ,கொடிகளையும் கட்டுப்படுத்துகிறது. நம் அன்றாட செயல்பாடுகளை வழிநடத்துகிறது.
நாம் ஏன் இரவில் தூங்குகிறோம்?
இது கொஞ்சம் நகைசுவை கேள்வியாக தோன்றும்.... பகலில் வேலை செய்கிறோம், இரவில் தூங்குகிறோம்.இது என்ன கேள்வி?என கேட்க தோன்றும்... உங்களுக்கு மேலும் சில கேள்விகள்.
விடிகாலையில் ஏன் சேவல் கூவுகிறது?சிட்டுக்குருவிகள் அதிகாலையில் எழுந்து ஏன் இறைதேடப் புறப்படுகின்றன?கொசுக்கள் ஏன் இரவில் கடிக்கின்றன? பகலில் கடிப்பதில்லை.வௌவால்கள் இரவில் மட்டும் ஏன் வெளியே வருகின்றன?.
ஆந்தை என் இரவில் இரைதேட புறப்படுகிறது?. எலிகள் , பெருச்சாளிகள் இரவில் அங்கும் மிங்கும்மாக ஏன் ஒடித்திருகின்றன? மல்லிகை பூ காலையிலும்,அந்திமந்தாரை பூ மாலையில் ஏன் மலர்கிறது?
நாம் உட்பட சேவல் ,பசு போன்ற சில விலங்குகள் ஏன் காலையில் வேலையை துவங்கின்றன?
நாம் அன்றாட் வாழ்க்கையில் பழகிப்போன சில செயல்களுக்கு பின்னால் உயிர்கடிகாரம் ... என்ற உயிர் செயல்பாடு நாம் உட்பட உலகில் உள்ள அனைத்து உயிரனங்களையும் கட்டுப்படுத்துகிறது.
எங்கேயிருக்கிறது உயிர் கடிகாரம்?
உயிர்கடிகாரம் குறித்த ஆய்வு பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. கிபி.4 நூற்றாண்டில் மாவீரன் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்துவந்த போது அவருடன் வந்த ஆண்டூஸ்தீனஸ் என்ற தத்துவமேதை ... புளிய மரத்தின் இலைகள் காலையில் விரிவதையும், மலையில் சுருங்குவதையும் கண்டு வியந்தார்.
1729ல் டீமெய்ரான் என்ற விஞ்ஞானி உடலின் உள்ளே உள்ள அமைப்பு இதை இயக்குவதை கண்டுபிடித்தார்.
1959ல் ஹால்பெரிக் என்ற விஞ்ஞானி உடலின் செயல்பாடும்,ஒய்வும் மாறுபடாமல் நாளுக்கு நாள் சீராக இயங்குவதை கண்டுபிடித்து அதை தினசரி சீரியக்கம் என பெயரிட்டார். இதே போல் பல்வேறு விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு பிறகு உடலின் செயல்பாடுகளை தினசரி மணியடித்து போல கட்டுப்படுத்த உடலின் உள்ளே இருக்கும் இந்த அமைப்புக்கு உயிர் கடிகாரம் என பெயரிட்டார்கள்.
டீ மெய்ரான் உயிர் கடிகாரம் குறித்தான ஆய்வுகளை மிக விரிவாக செய்த விஞ்ஞானிகளில் மிக முக்கிய மானவர். அவர் செய்த சில ஆய்வுகள்...
காலங்கோ என்ற தாவரத்தை தொடந்து இருட்டில் வைத்திருந்த போதும் பூத்தல், இலை மூடிவிரிதல், ஒளிச்சேர்க்கைக்கான துண்டுதல் என ஒரு தாவரத்தின் அன்றாட செயல்பாடுகளை அந்த செடி செய்து வந்தது.
அதே போல வெளியுலக பகல், இரவு மாற்றைத்தை 5 தலைமுறைகளாக பாத்திராதஇருட்டில் வைக்கப்பட்ட எலிகள் துல்லியமாக தூக்கம் ,விழிப்பு,இரைதேடுதல் போன்ற வேலைகளை கச்சிதமாக செய்தன.இதன் மூலம் வெளிச்சத்தையும்,இருட்டையும் தவிர்தத் போதும் எதே ஒன்று உயிர்களை இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதிலிருந்து "சுற்றுபுறம் எப்படி இருப்பினும் திட்டமிட்டபடி துல்லியமாக இயங்கும் இயக்கமே உயிர்கடிகாரம்" என விஞ்ஞானிகள் அறிவித்தார்கள்.
மனிதர்களை பெருத்தவரை...இதயத்துடிப்பு,சுவாசம்,பெண்களுக்கான மாதவிடாய்,அடரினல் சுரப்பி சுரப்பது,உடலின் வெப்பநிலை மாற்றம், ரத்த வெள்ளை அணுக்கள் கிரிமிகளை அழிப்பதற்கான நேரம் இது போன்ற பல செயல்பாடுகள் உயிர்கடிகாரத்தின் படி துல்லியமாக செயல்படுகின்றன. இந்த செயல்பாடுகளில் மாற்றம் எற்பட்டால் உடல் பாதிப்புகள் ஏற்பட்டு மரணம் நிகழ்கிறது.
சரி இந்த உயிர்கடிகாரம் எங்கேயிருகக்கிறது? உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் தனிதனி கடிகாரங்கள் இயக்கு கின்றன. அத்தனை கடிகாரங்களுக்கு ஒரு தலைமை கடிகாரம் உள்ளது.
மூளையில் பார்வை நரம்புகள் சந்திக்கும் இடத்திற்கு மேலே உள்ள நரம்பணுக்களே உயிர்கடிகாரம். அதில் கண், பீனியல் உறுப்பு போன்றவையும் இணைந்தே தலைமை உயிர்கடிகாரத்தை செயல்படுத்துகின்றன.
உயிர்கடிகாரமும் தனிமை அறையும்...
மனித உடலில் உயிர்கடிகாரம் எப்படி செயல்படுகிறது என்பதை கண்டறிய இந்தியாவிலேயே மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் ஒரு" தனிமை அறை" அமைத்திருக்கிறார்கள்.
தனிமை அறை என்பது ஒரு மனிதனுக்குதேவையான சமைப்பதற்கு, குளிப்பதற்கு, படிப்பதற்கு, வீடியோ பார்பதற்கு உடற்பயிற்சி செய்வதற்கு,தூங்குவதற்கு என அனைத்து வசதிகளையும் கொண்ட அறை.அனால் இன்று என்ன கிழமை என்றோ? மணி என்ன என்றோ ?தெரிந்து கொள்ள முடியாது.மேலும் வெயில்,ஒளி,ஒலி ,மழை போன்றவற்றை பார்க்கவோ ,உணரவோ முடியாது. சுருக்கமாக சொன்னால் வெளியே அணுகுண்டே போட்டாலும் தனிமை அறையில் இருப்பவருக்கு எதுவும் தெரியாது. குளிக்கப்போகிறேன், தூங்கப்போகிறேன், படிக்கிறேன்,எழுந்து விட்டேன்,சாப்பிடுகிறேன் என ஒவ்வொரு செயல்பாட்டையும் தனிமை அறையில் இருப்பவர்கள் குறித்துகொள்ள வேண்டும்.
இந்த தனிமைஅறை சோதனையில் அய்வாளர்கள்,மாணவர்கள், பெண் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் தங்கியிருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகள் மூலமாக மனிதனின் செயல்பாடுகள்,நடத்தைகளை உயிர்கடிகாரம் எப்படி கட்டுப்படுத்துகிறது என்பது கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஆய்வில் கிடைத்த தகவல்களை கொண்டு மருத்துவதுறையில் பல முன்னேற்றங்கள் ,பயன்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
உயிர்கடிகார ஆய்வில்
கண்டுபிடிக்கப்பட்ட சில தகவல்கள்
1.ஒவ்வெரு உயிரனத்திலும் ஏறத்தாழ 24 மணி நேரம் கொண்ட உயிர்கடிகாரம் உள்ளது.
2.மனித உடலில் வெப்பம் தினசரிஏறி இறங்குவதும் உயிர்கடிகாரத்தின் திட்டமிட்ட தினசரி செயலாகும்.
3.நமக்கு 16 மணி நேர விழிப்புரம் 8 மணி நேரத்தூக்கம் கணகிடப்பட்டுள்ளது. இரவு ஷிப்ட் பார்வர்களுக்கு உடல் வெப்பம் உயர்ந்து அஜிரண கோளாருகள் உருவாகும்.
4. சாதாரண மனிதர்களுக்கு உயிர்கடிகாரம் 24 மணிநேர அளவில் ஒடுகிறது. ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு 23 மணி நேரமாக இயங்குகிறது. நாம் காலை 6 மணிக்கு எழுந்தால் அவர்கள் 5 மணிக்கு எழுந்துவிடுவார்கள். அடுத்தநாள் நாம் அதே 6மணிக்கு எழுந்தால் அவர்கள் 4 மணிக்கு எழுந்துவிடுவார்கள்.இப்படியே 14 வதுநாள் நாம் வழக்கம் போல காலை 6மணிக்கு எழுந்தால் அவர்கள் மாலை 6மணிக்கே எழுந்து விடுவார்கள். அதனால் தான் மன நோயாளிகள் பரபரப்பாகவும்,அமைதி இழந்து காணப்படுகிறார்கள்.
5.அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நாம் சென்றால் அந்த நாட்டின் நேர மாற்றத்திற்கு மாறுவதற்கு 8 நாட்களாவது ஆகும்.
6. வைரஸ் காய்ச்சலா,அல்லது பாக்டீரியா காய்ச்சலா என்பதை காய்ச்சல் துவங்கும் நேரத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள்.
7.நோய்க்கான மருந்தை குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்ளப்படும் போது நோய் வேகமாக குணமாகும்.பக்க விளைவுகள் குறையும்.
8.பகலில் குடிப்பவர்களுக்கு நீண்ட நேரம் கழித்தும், இரவில் குடிப்பவர்களுக்கு உடனடியாகவும் போதை இறங்கிவிடுமாம். ஏன் தெரியுமா கல்லீரலின் செயல்பாடு அப்படி.
9.அலர்ஜி நோய்க்கு மாலை நேரத்தில் மருந்து சாப்பிட்டால் நோய் வேகமாக குணமாகுமாம்.
10 ஆஸ்துமா நோயாளிகள். வறட்டு இருமல் இருப்பவர்கள் அதிகாலையில் தான் அதிகாமாக இருமுவார்கள், காரணம் குரவளை திசுக்கள் அப்போது சுருங்குவது தான் காரணம்.
11. புற்றுநோய் ஆய்விலும் உயிர்கடிகார ஆய்வு பல பலன்களை கொடுக்கிறது. மார்பாக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் வந்த பின்னர் 2- 3 வது வாரத்தில் அறுவை சிகிச்சை செய்தால் குணமாவது நிச்சயம் என்கிறார்கள்.
12.சிலர் காலை எழுந்ததும் சிடுசிடுஎன கோபப்படுவார்கள்.மாலையில் அப்படியே தலைகீழாக மாறுவதற்கும் உயிர்கடிகாரம் தான் காரணம்.அதே போல் பருகாலமாற்றமும் சிலரின் குண அம்சங்களை மாற்றும்.
13. உயிர்கடிகார கண்டுபிடிப்பில் முக்கியமானது பரீட்சைக்கு எப்போது படிக்கலாம் என்பது. காலை 10 மணி பரிச்சைக்கு அதிகாலையில் முக்கியபகுதிகளை ஒருமுறை நோட்டம் விடலாம். அடுத்தமாத பரிச்சைக்கு படிக்க மதியநேரம் நல்லது என கண்டுபிடித்திருக்கிறார்கள்.அதே போல மேடை பேச்சாளர்கள் மதிய நேரத்தில் குறிப்புகளை தயார் செய்வது நல்லது.
ஆனால் கடை மற்றும் வீட்டு பொருளாதார கணக்குகளை பார்க்க ஆதிகாலையே சிறந்த நேரமாம்.
14. விளையாட்டு வீரர்கள் மாலை நேரத்தில் பயிற்சி செய்வது தான் வெற்றிக்கான பாதையாக இருக்கும்.மாலை நேரம் தான் உடல் விளையாட்டுக்கு தயார்நிலை அடைகிறதாம்.
இப்படி இன்னும் பல கண்டுபிடிப்புகள் உயிர்கடிகார ஆய்வில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.நாம் ஒவ்வெருவரும் நமது உடலின் கால ஒழுங்கை அனுசரித்து போக தொடங்கிவிட்டால் காலம் நம் பக்கம் இருக்கும்.....
- அ.தமிழ்ச்செல்வன்
தமிழ்வாசல் மாத இதழிலில் வந்துள்ள எனது கட்டுரை
Comments
கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடிகளால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் படித்து சிந்திக்க வேண்டியவை
..
ஆர்.எஸ்.எஸ், இந்துமுண்ணணி, பீ.ஜே.பீகாரர்கள் யாருக்கேனும் இந்து மதத்தை அனைவரும் அறிய ரிக், அதர்வன, யஜீர் வேதங்களை வால்மீகி ராமாயணம், பகவத் கீதை ஆகியவற்றை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து google play store ல் பதிவேற்ற திராணி உள்ளதா?
**************
.
பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் தூக்கிச் செல்வதற்குப் பறையர்களையும், சக்கிலியர்களையும் அழைப்பது ஏன்?
.
பூதேவர்களான பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா பஜனை பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் H.ராஜாவும் – செத்த கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை நிரூபிக்கட்டும்.
.
மேலும் அறிய......கிளிக் செய்க... >>> இங்கே <<<< படித்து சிந்தியுங்கள்
.