வாட்ஸ் ஆப் செயலிக்கு போ ட் டியாக வளர் ந்துவரு வது டெலிகிராம் செயலி. வாட்ஸ்ஆப் செயலி வெளியிட ப்பட்டது 2009ஆம் ஆண்டில். ஃபே ஸ் புக்கிற்கு போ ட்டியாக வளர்ந்து வந்த சூழலில் 2014ல் ஃபேஸ்புக் நிறுவனம் அந்த வாட்ஸ்ஆப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலர்களுக்கு விலைக்கு வாங்கி தன்னுடன் இணைத்துக் கொண்டது.இந்த பரிவர்த்தனை நடந்த 2013 காலகட்டத்தில்தான் டெலிகிராம் செயலியும் வெளியானது. ஜெர்மனியைத் தாயகமாகக் கொண்டு வெளியான இச்செயலியை உருவாக்கியவர்கள் ரஷ்யாவின் நிகோலாய் மற்றும் பவல் டுரவ் சகோதரர்கள்.ஐரோப்பிய நாடுகளில் ஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிகம் பயன்பாட்டில் இருக்கும் விகே எனும் சமூக வலைத்தளத்தை உருவாக்கி நிர்வகித்து வருவது இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளத்தில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் இவர்களின் டெலிகிராம் செயலிதான் வாட்ஸ்ஆப்பை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் உள்ளது.
வெளியிடப்பட்ட காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 1 லட்சம் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தினர். இதன் வசதிகளால் கவரப்பட்டு தற்போது 5 கோடி பேருக்கும் மேலானவர்களால் உபயோகிக்கும் செயலியாக வேகமாக வளர்ந்து வருகிறது.இந்த செயலி ஒப்பன் சோர்ஸ் முறையில் உருவாக்கப்பட்டது. இதன் பாதுகாப்புத் திறன் தற்போது பயன்பாட்டிலிருக்கும் வாட்ஸ்ஆப், ஹேங்அவுட், லைன் மெஸன்ஜர் போன்றவற்றைவிட பல மடங்கு அதிகமானது. டெலிகிராம் செயலியின் பாதுகாப்பில் குறை கண்டுபிடித்தால் ஒரு லட்சம் டாலர்கள் பரிசு வழங்குவதாக பவல் டுரவ் அறிவித்துள்ளார்.வாட்ஸ்ஆப் - டெலிகிராம் ஒப்பீடுவாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் இரண்டிலும் நம்முடைய மொபைல் எண்ணைக் கொண்டே உள் நுழைய முடியும். வாட்ஸ்ஆப் மென்பொருள் முதல் வருடம் மட்டுமே இலவசம். ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டால் இந்த மென்பொருளை உபயோகப்படுத்த 1 டாலர் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் டெலிகிராம் மென்பொருளை முற்றிலும் இலவசமாகும். டெலிகிராம் சர்வர் கட்டமைப்பிற்கான செலவை தற்போது பவுல் டுரவ் சகோதரர்களே அளித்துவருகின்றனர்.
வாட்ஸ்ஆப் மென்பொருளில் அனுப்பப்பட்ட தகவல்களை அனுப்பியவர் அழித்தால், அனுப்பப்பட்டவரின் மொபைல் போனில் அப்படியே இருக்கும். ஆனால் டெலிகிராமில் ஒருவர் அழித்த செய்தி, மற்றொருவர் மொபைலிலும் அதே நேரத்தில் அழிந்துவிடும். இதனால் தவறாக அனுப்பப்பட்ட செய்தியை அவர்கள் பார்பதற்கு முன்னரே அழிக்க முடியும்.வாட்ஸ்ஆப்பில் பிரபலமாக இருக்கும் குரூப் சேவை இதிலும் உள்ளது. வாட்ஸ்ஆப் குரூப்பில் 50 நபர்களை மட்டுமே இணைக்க முடியும். ஆனால் டெலிகிராமில் 200 நபர்கள் வரை குரூப் சேர்த்து செய்திகளை பகிர்ந்து கொள்ள முடியும்.வாட்ஸ் ஆப்பில் வீடியோ, ஆடியோ, போட்டோ ஆகியவற்றை மட்டும் தான் அனுப்பமுடியும். ஆனால் டெலிகிராமில் வீடியோ, ஆடியோ, போட்டோவுடன் பிடிஎப், டாகுமெண்ட், ஃபிளாஸ் போன்ற பல விதமான ஃபைல்களையும் அனுப்பலாம். அத்துடன் ஜியோ டேக் எனப்படும் மேப் வசதி மூலமாக இருப்பிடத்தை அறிய உதவும் புவிசார் குறியீட்டு எண்ணையும் இச்செயலியில் பகிர்ந்து கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருளை மொபைல் போன் மற்றும் இணைய பிரௌசர் மூலமாக பயன்படுத்தலாம். ஆனால், வாட்ஸ்ஆப்பை இணையதளம் வழியாக பார்க்கும்போது உங்கள் ஸ்மார்ட்போனிலும் இணைய இணைப்பு தொடர்பிலிருக்க வேண்டும் என்பது கட்டாயம்.டெலிகிராம் மென்பொருளை விண்டோஸ், மேக், லினக்ஸ் ஆகிய கணினி இயங்கு தளங்களிலும், ஃபயர்பாக்ஸ், குரோம் இணைய உலாவிகளில் ஆட்ஆன் மென்பொருளாகவும் கிடைக்கிறது. இதன் மொபைல் செயலியை ஆண்ட்ராய்ட், ஐபோன், ஃபயர்பாக்ஸ், விண்டோஸ் இயங்குதள போன்களிலும், டேப்லட்களிலும் பயன்படுத்தலாம். இந்த பன்முகத்தன்மை கொண்ட வசதியின் மூலமாக எங்கிருந்தாலும் டெலிகிராம் செயலி வழியாக தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. வாட்ஸ்ஆப் மென்பொருளில் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. ஆனால் டெலிகிராம் மென்பொருளில் உங்கள் புகைப்படங்களை உங்கள் விருப்பம் இல்லாமல் வேறு யாரும் பார்க்கமுடியாது. அதேபோல இதிலுள்ள சீக்ரெட் மெசேஜ் வசதியின் மூலம் அனுப்பப்படும் செய்தியை குறிப்பிட்ட நேரத்திலோ, பார்த்தவுடனோ அழிந்துவிடும் வகை யில் வசதி தரப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் மென்பொருள் ஆங்கில மொழியில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் டெலிகிராம் மென்பொருள் ஆங்கிலம், ஸ்பானிஸ், ஜெர்மன், ரஷ்யன், டச்சு, கொரியன், இத்தாலியன், அரபிக் ஆகிய பல மொழிகளில் தேவையானதைத் தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.வாட்ஸ்ஆப்பில் வீடியோ, ஆடியோ, போட்டோக்களைப் பகிரும் அளவு ஒரு கோப்பிற்கு அதிகபட்சம் 20 எம்பி ஆகும். அதற்கு மேலான அளவுள்ள ஃபைல்களைப் பகிர முடியாது. இதுவே டெலிகிராம் செயலியில் ஒரு கோப்பின் அதிகபட்ச அளவு 1.5 ஜிபி வரை பகிர முடியும். பகிரப்படும் கோப்புகளுக்கு வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.ஆனால், வாட்ஸ்ஆப்பில் பழைய கோப்புகளை சேமிக்க வசதியில்லை. தற்போதுதான் கூகுள் டிரைவில் சேமிக்கும் வசதியை வழங்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

நன்றி:தீக்கதீர்
தொகுப்பு செல்வன்
Comments