பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...

இராண்டாம் ஆண்டில் இன்றையவானம்

மிழ்மணம்,சகபதிவர்கள்,வாசகர்கள்,அனைவருக்கும் நன்றியும்,
வணக்கமும்,இன்றுடன்(ஆகஸ்ட் 31)இன்றையவானம் வலைப்பூ முதலாமாண்டை நிறைவு செய்து இராண்டாம் ஆண்டில் நுழைகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர் வலைபூ குறித்து அறிமுகம் செய்து வைத்தார். அப்போது கணிணி குறித்தே அதிகமாக தெரியாது. இணையத்தில் வலைபூ தொடங்குவது பற்றி நிணைத்துக்கூட பார்க்கவில்லை.மதுரை சர்வோதயா புத்தகநிலையத்தில் வேறு ஒரு புத்தகம் வாங்கசென்ற போது தற்செயலாக  சுமஜ்லா எழுதிய http://sumazla.blogspot.com/ '' நீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம்'' என்ற புத்தகம் கிடைத்தது.அதை வைத்து முயற்சியில் இறங்கினேன். வலைபூ தொடங்கிய அன்று காலையில் தொடங்கி மாலை 4மணிவரை மதிய உணவு சாப்பிடாமலேயே கணிணி முன் அமர்ந்திருந்தேன். கடந்த ஒராண்டில் சகபதிவர்களின் வலைபூக்களை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக எதோ எனக்கு தெரிந்த அளவில் இன்றையவானத்தை வடிவமைத்திருக்கிறேன்.
           

கூடங்குளம் பற்றி A TO Z புத்தகம் இலவச டவுன்லோட் செய்ய....

கூடங்குளம் அணுஉலை தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரச்சனைகளில் ஒன்றாக நீடித்து வருகிறது. தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் மின்வெட்டு,அதனால் ஏற்பட்டுள்ள மின்தேவை, அணுஉலை எதிர்பாளர்களின் போராட்டம் என சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கிடையே கூடங்குளம் அணுஉலையில் தற்போது எரிபொருள் நிரப்பி இன்னும் சிறிது நாட்களில் முழுமையாக இயங்க துவங்கும் என்கிறார்கள். அணுஉலை வேண்டாம் என்ற நோக்கத்தோடு தொடர்ந்து களப்போரட்டத்தில் இருந்து வரும் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய ''கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்'' நூல் இன்றையவானம் வாசகர்களுக்காக முழுமையாக பி.டி.எப் பைல்களாக இலவசமாக டவுன்லோட் செய்யும் சுட்டி இந்த பதிவின் கீழ்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. படித்து பாருங்கள் உங்கள் கருத்துகளை உடனடியாக பதிவு செய்யுங்கள். தொடர்ந்து இது போன்று முக்கிய நூல்கள் பி.டி.எப் பைல்களாக இன்றையவானம் பதிவில் கிடைக்கும் ......

''கும்கி'' புதிய ஸ்டில்கள்

''கும்கி'' ரிலிசுக்காக காத்திருக்கிறது, அதன் இசை வெளியீட்டு விழாவே கமல்,ரஜினி கலந்து கொண்ட மிக பிரமாண்ட விழாவாய் நடந்து முடிந்திருக்கிறது. இதனிடையே கும்கி பட அனுவத்திலிருந்து இயக்குனர் பிரபுசாலமன் யானைகளை பற்றி நிறைய தகவல்களை சொல்கிறார். ஒரு புத்தகம் வெளியிடும் அளவுக்கு தகவல்கள்....

யானையின் வழித்தடப் பாதைகளை மறிச்சு ரிசார்ட்ஸ் கட்டியாச்சு.ஆழ்துளைக்கிணறுகள் போட்டு நிலத்தடி நீரை உறுஞ்சி யானைகளின் நீர்நிலைகளை எல்லாம் காலி பண்ணியாச்சு. ஒரு யானை மட்டுமே ஒருநாளைக்கு 300 லிட்டர் தண்ணீர் குடிக்கும்,ஆனா மூணு லிட்டர் தண்ணீர் குடிக்கிறதுக்காக நாம யானைகளை படுத்தியெடுக்கிறோம்.

கோடிக்கு மேல் செய்யப்படும் ஊழல்களை தமிழில் தெரிந்து கொள்ள வேண்டுமா?


ஊழல்முறைகேடுகள் கோடிகளை தாண்டி கொண்டிருக்கும் நிலையில், தமிழில் அவற்றை எப்படி எண்ணுவது என தெரிந்து வைத்து கொள்வது நல்லது இல்லையா?  இதை வரை இல்லாத அளவுக்கு ஊழலில் சாதனை படைத்து வருகிறது மன்மோகன்சிங் அரசு. அலைக்கற்றை முறைகேடு ரூ.1763790000000, நிலக்கரி ஊழல் ரூ.1800000000000, என்று இந்தியர்களின் கணித திறமையைச் சோதிக்கும் புதுப்புது ஊழல் சாதனைகள் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது இன்றைய அரசு. கோடிக்கு மேல் வார்த்தைகள் இல்லாததால், இந்த தொகைகளை எல்லாம் எப்படி உச்சரிப்பது என்று புரியாமல் குழம்பித் தவிக்கின்றனர் பொதுமக்கள். கோடியின் போதாமையை உணர்ந்து அரசுக்கும் மக்களுக்கும் உதவும் வகையில் கோடிக்கு மேற்பட்ட எண்ணிக்கையைக் குறிப்பிடும்,உச்சரிக்கும் வார்த்தைகளைப் பழந்தழில் இருந்து பரிந்துரைக்கிறோம்

செல்பேசி குசும்புகள்


வருத்தபடாத வாலிபர் சங்கம் உட்பட 5 சங்கங்களின் நகைச்சுவை குசும்புகள்
எனது நண்பர் ஒருவர் தொடர்ந்து தத்துவம், நகைச்சுவை என்ற பெயரில் எதாவது குறுஞ்செய்தி அனுப்பி கொண்டிருந்தார்,என்ன செய்வது நண்பர்ஆயிற்றே பொறுத்து கொண்டேன், அவரது செல்பேசி தொலைந்தபோது, விட்டது தொல்லை என நினைத்தேன். ஆனால் மீண்டு ஒரு புது செல்பேசி வாங்கி ஆரம்பித்து விட்டார். ஆதிலிருந்து சில குசும்புகள்........

நான் - படம் விமர்சனம் + பாடல் வீடியோ

புது நடிகர், தெரியாத முகங்கள் படம் எப்படியிருக்குமோ, என்ற பயத்தோடு படம் பார்க்க சென்றேன், பார்க்க வேண்டிய படம் தான் என்பதை நிருப்பித்திருக்கிறார்கள் இந்த படத்தில் மற்றெரு ஸ்பெஷல் இசையமைபாளர் நடிகராகியிருக்கும் படம்

அன்பு கிடைக்காமல் போவதே தவறுக்கான மூல காரணம். இதை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் படம்தான் ‘நான்’. கதாநாயகன் கார்த்திக் தனது அம்மா இன்னொருவனிடம் உறவு வைத்துக் கொள்வதை நேரில் பார்த்து விடுகிறான். இதை அறியும் அவனது அப்பா அவமானத்தால் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் விரக்தியடைந்த கார்த்திக் அவனது அம்மாவையும், கள்ளக்காதலனையும் வீட்டோடு வைத்து எரித்துக் கொல்கிறான்.

காற்றில் கரைந்து போகும் மனிதர்கள் அதிர்ச்சி தகவல்


கென்யா நாட்டின் அருகேயுள்ள என்வைட்டினெட் தீவுக்கு செல்லும் மனிதர்கள் காற்றில் கரைந்து மாயமாகி விடுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
பார்வைக்கு எட்டிய தூரம் வரை கடல்போல் காணப்படும் ஏரி,அங்காங்கே உயந்து நிற்கும் மலைகள், பசுமையாக காட்சியளிக்கும் குட்டித் தீவுகள் என சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் சுவராஸ்யங்கள் ஏராளம் இருந்தாலும் என்வெட்டினெட் வெறிச்சோடி கிடக்கிறது. ஏன்? அந்த தீவுக்கு செல்லும் மனிதர்கள் திடீரென்று காற்றில் கரைந்து மாயமாகிவிடுகிறார்கள் என்கிற விஷயம் திகிலூட்டுவதாக உள்ளது.
         உலகில் மிகப்பெரிய பாலைவனக்கடல் என்று பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யா நாட்டில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒருகாலத்தில்

பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது கற்பழிப்புக்கு சமம்: எம்.எஸ்.வி. பேட்டி


புதுப் படங்களில் பழைய பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வருகின்றன
தொட்டால் பூ மலரும், பொன்மகள் வந்தாள், வெத்தலையை போட்டேண்டி, என்னம்மா கண்ணு சவுக்கியமா, ஆசை நூறு வகை போன்ற பல பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டு உள்ளன.
இதற்கு இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்தார்.
சென்னையில்  அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

தினமும் தண்ணியடிப்பது நல்லது....


ஆரோக்கியமாக இருக்க தினமும் குறைந்தது 4 முறை தண்ணியடிக்க வேண்டும் என்கிறார்கள் ஜப்பான் மருத்துவர்கள். பல்வேறு நோய்களுக்கு மருந்து தினமும் தண்ணியடிப்பது தான்.

நீரின்றி அமையாது உலகம் என்பது வள்ளுவப்பெருந்தகையின் வாக்காகும். இதனை அடிப்படையாக கொண்டு தினமும் அதிகாலை உறக்கத்திலிருந்து எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உலகமுழுவதும் பிரபலமாகி வருகிறது. குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட அளவு தூய்மையான தண்ணீர் குடிப்பதன் மூலம் பல்வேறு வியாதிகளை குணப்படுத்த முடியும் என்பதை ஜப்பானிய மருத்துவர்கள் நிரூபித்து காட்டியுள்ளனர்.

நடிகராகும் இசையமைப்பாளர் + நான் பட ஸ்டில்கள்


தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் அழகானவர், முன்னணியில் இருப்பவர் விஜய் ஆன்டணி. இவரது திரை இசைப் பயணத்தில் `நான்’ 25ம் படம்,அதுமட்டுமல்ல; இது அவர் கதாநாயகனாக நடித்து, தயாரித்து, இசையமைக்கும் படம் என்பது கூடுதல் தகவல்.இசையமைப்பாளர்களில் இவர் தைரியமாய் மேற்
கொண்ட முயற்சி வீண் போகவில்லை. படம் உருவான வேகத்தோடு நல்ல விற்பனையும் ஆகிவிட்டது. விஜய் ஆன்டணியின் தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி இது.
இவர் பெரிய குடும்பப் பின்னணி கொண்டவர். தமிழின் முதல் நாவலான `பிரதாப முதலியார் சரித்திரம்’ நாவலை எழுதிய வேதநாயகம்பிள்ளைதான் இவரது தாத்தா.

அமீரின் ஆதிபகவன் ஸ்டில்கள் + ஜெயம் ரவி பேட்டி


இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துக்கொண்டிருக்கும் படம் ஆதி பகவன்.இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துக்கொண்டுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் மிக பரபரப்பாக நடைபெறுகிறது.
தற்போது போஜ்பூர் மாவட்டத்தில் 15 நாள் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் ஆதி பகவன் படக்குழு,அங்கு இரட்டை வேடமேற்றிருக்கும் நடிகர் ஜெயம் ரவியின் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையே நடைபெறும் சண்டை காட்சிகளை படமாக்கி வருகின்றனர்,
இப்படத்தில் நீது சந்திரா நாயகியாக நடித்துக்கொண்டுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ஏழு ஒளிப்பதிவு கருவிகளை கொண்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.குருதேவ் மற்றும் தேவராஜ் ஆகியோர் ஒளிப்பதிவு கருவிகளை கையாள்கிறார்கள்.
செப்டெம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆதி பகவன்