காற்றில் கரைந்து போகும் மனிதர்கள் அதிர்ச்சி தகவல்


கென்யா நாட்டின் அருகேயுள்ள என்வைட்டினெட் தீவுக்கு செல்லும் மனிதர்கள் காற்றில் கரைந்து மாயமாகி விடுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
பார்வைக்கு எட்டிய தூரம் வரை கடல்போல் காணப்படும் ஏரி,அங்காங்கே உயந்து நிற்கும் மலைகள், பசுமையாக காட்சியளிக்கும் குட்டித் தீவுகள் என சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் சுவராஸ்யங்கள் ஏராளம் இருந்தாலும் என்வெட்டினெட் வெறிச்சோடி கிடக்கிறது. ஏன்? அந்த தீவுக்கு செல்லும் மனிதர்கள் திடீரென்று காற்றில் கரைந்து மாயமாகிவிடுகிறார்கள் என்கிற விஷயம் திகிலூட்டுவதாக உள்ளது.
         உலகில் மிகப்பெரிய பாலைவனக்கடல் என்று பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யா நாட்டில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒருகாலத்தில்
அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு பல்வேறு நதிகளிலிருந்து தண்ணீர் வருகிறது. இங்கு நிலவும் கடுமையான வெப்பத்தால் ஒரு பகுதி தண்ணீர் ஆவியாகிவிடுகிறது. இதில் மிச்சிடும் நீர் அதிக உப்புத்தன்மையுடன் கடினமாக காணப்படுகிறது. கென்ய நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்திடும் இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக்கடல் திகழ்கிறது.

இங்கே குட்டி,குட்டி தீவுகளும் பழமை மாறாத பழங்குடியின் மக்களின் வாழ்க்கை முறையும் சுற்றுலாபயணிகளை மேலும் கவர்ந்திழுக்கின்ற நிலையில் ரத்தத்தை உறையவைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளது. இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்றுதான் என்வெட்டினெட் தீவாகும். இங்கே வாழும் பழங்குடி இன மக்களின் பேச்சு வழக்கப்படி ''என்வெட்டினெட்'' என்பதற்கு ''திரும்பிவராது'' என்று அர்த்தமாம்.அதன்படி இந்த தீவுக்கு செல்பவர்கள் யாரும் திரும்பி வந்ததே கிடையாதாம், அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு சவால்விடும் வகையில் இந்த தீவில் நடக்கும் சம்பவங்கள் உள்ளன.
  முன்னொரு காலத்தில் இந்த தீவில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர்.என்றும் மீன் பிடிப்பது , வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது. என பக்கத்து தீவுவாசிகள் சொல்கின்றனர். ஆரம்பத்தில் வியாபாரத்திற்காக பக்கத்து தீவுகளுக்கு மக்கள் வெளியேறி வந்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தீவிலிருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்துள்ளனர்.

ஒரு கட்டத்திற்கு பிறகு யாரும் வெளியே  வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து என்வெட்டினெட் தீவுக்கு சென்றுள்ளனர், ஆனால் அப்படி தேடி சென்றவர்களும் திரும்பாமல் பேகவே உச்சக்கட்ட  மர்மத்தீவாக என்வென்டினெட் தீவு மாறிபோய்விட்டது.

இதே போன்று திடீரென வானத்திலிருந்து சூறாவளி போல் வால்வைத்து சுழல் காற்று அடிக்கடி என்வென்டினெட் தீவில் தரையிரங்கும் என்றும் அப்போது தீவில் உள்ள சுற்றுலாபயணிகள் அங்குள்ள பொருட்களை விண்வெளிக்கு உறிஞ்சி இழுத்து செல்லப்படுகிறார்கள் என்று மற்றொரு அதிர்ச்சி தகவலும் சொல்லப்படுகிறது. இது குறித்து பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் விவியன் பஸ்சுகக்கு, என்வெட்டினெட் தீவில் பிரமாண்டமான ஒளிவெள்ளம் எவ்வாறு வருகிறது, வானத்திலிருந்து வால்வைத்த சூறாவளி காற்று எப்படி வருகிறது அது எப்படி மனிதர்களை மாயமாக்குகிறது என்ற கேள்விகளுக்கு கடைசிவரை அவரால் விடைகான முடியவில்லை.
     எந்தவித தடயமும் இன்றி எலும்புகள் கூட மிஞ்சிவிடாது மனிதர்களை காற்றில் கரையவைத்து மாயமாக்கிடும் என்வென்டினெட் தீவுக்கும் வேற்று கிரகவாசிகளுக்கு தொடர்பு உள்வதா என்ற கோணத்தில் தற்போது ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.இங்குள்ள மக்களை வேற்றுகிரகவாசிகள் பறக்கும் தட்டுகளில் ஒளிவெள்ளத்தோடு வந்திரங்கி கடத்தி செல்கிறார்கள் என்றும் கண்ணுக்கு தெரியாத சக்கரம் புயல்வேகத்தில் காற்றில் சுழன்று மக்களை காற்றில் கரைய வைக்கிறது என்றும் தற்போது தகவல்கள் வெவியாகிபடி உள்ளது.

கடந்த 1935 ம் ஆண்டு ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் விவியன்பஸ் என்பவர் தனது குழுவின்ரரோடு இந்த மர்மத்தீவு குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். முதல் கட்டமாக தனது இளம் விஞ்ஞானிகள் மார்ட்டின்சாப்லிஸ், பில்டாசன் ஆகியோரை விவியன்பஸ் அனுப்பியுள்ளார். நாட்கள் தான் போனதே தவிர இளம் விஞ்ஞானிகள் தீவை விட்டு வெளியே வரவில்லை.இதனால் அதிர்ந்து போன ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தபடியும் ஹெலிகாப்டர்களில் பறந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போதும் எந்த தடயமும் கிடைக்கவில்லை,பழங்குடியின மக்களின் குடிசைகளும் அழுகிய மீன்களும்,சிதறிக்கிடந்த நிலையில் மனிதர்களின் நடமாட்டமின்றி தீவு முழுவதும் சூன்யமாக காட்சியளித்துள்ளது.

     இதை தொடர்ந்து பக்கத்து தீவுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களிடம் ஆராய்ச்சியாளர் விவியன்பஸ் மர்த்தீவின் தன்மைகள் குறித்து தகவல்கலை சேகரித்தார். அப்போது என்வென்டினெட் தீவில் திடீரென பிரமாண்ட ஒளிவெள்ளம் வரும் .அப்போது அந்த இடத்தில் யார் இருந்தாலும் காற்றில் கரைந்து காணாமல் போய்விடுவார்கள். இந்த ஒளிவெள்ளத்தின் காரணமாகத்தான் தீவில் இருந்த பழங்குடி இன மக்கள் ,சுற்றுலா பயணிகளும் காணாமல் போயிருக்கலாம் என்று பக்கத்துதீவு வாசிகள் அதிச்சியுடன் குறியுள்ளனர்.

        ஆனால் அறிவியல் வளர்ச்சி மிகுந்த 21ம் நூற்றாண்டில் விடைகாணமுடியாத பல்வேறு மர்மங்களுக்கு விடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளநிலையில் என்வென்டினெட் தீவின் மர்மமுடிச்சுகள் மட்டும் இதுவரை அவிழாமல் உள்ளது. அதுவரை என்வென்டினெட் தீவில் காற்றில் மனிதர்கள் கரையும் மனிதர்கள் கரையும் நிகழ்வுக்கு தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி கொணடே இருக்கும்

 - செல்வராஜ்

உங்கள் கருத்துக்களை எழுத

ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அதிர்ச்சி அளிக்கும் தகவல் தான்...

தொடருங்கள்... நன்றி…
வரலாற்று சுவடுகள் இவ்வாறு கூறியுள்ளார்…
ஏதாவது விஷயம் இருக்கும்! தேடல் தொடர்ந்து நடைபெற்றால் விஷயம் ஏதாவது கிடைக்கும்!
SUMAZLA/சுமஜ்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கள் வலைப்பூ மிக அழகாக உள்ளது. என் புத்தகத்தைப் படித்து வலைப்பூ தொடங்கி உள்ளது என் எழுத்துக்கு பெருமை சேர்க்கக் கூடிய விஷயம். திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகள் வைத்தால் பலரைச் சென்றடையுமே! இன்றைய வானம் என்ற பெயருக்கு ஏற்றபடி பேக்கிரவுண்டில் வானத்தின் படத்தை போட்டால் பொருத்தமாக இருக்குமே! என் வலைப்பூவில் சைடில் இருக்கும் போட்டிக்கான லோகோவை தங்கள் வலைப்பூவில் இணைத்து ஆதரவு தாருங்கள். நன்றி! இரண்டாம் ஆண்டு துவக்கத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.