80வது சதந்திரதினத்தை மிகச்சிறப்பாக கொண்டாடி முடித்திருக்கிறோம். இந்த சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை. கோடிக்கணக்கான தியாகிகளின் ரத்தத்தில், கண்ணீரில் எழுதப்பட்டது. கட்டபொம்மன்,மருதுசகோதர்கள்,வேலுநாச்சியார் துவங்கி மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சர்தார் வல்லபாய் படேல் என பல்லாயிரம் தலைவர்களின் தியாகத்தால் கிடைத்தது.200 ஆண்டுகலா போராட்டம் இது.
இவர்கள் மட்டுமல்ல முகம் தெரியாத பல தலைவர்களின் தியாகுமும் உண்டு. உதாரணாக 1919 ஏப்ரல் 13, ஜாலியன் வாலாபாக். அந்த தோட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு, அதிகாரப்பூர்வ கணக்குப்படி 379 பேரும், காங்கிரஸ் மற்றும் தனியார் மதிப்பீட்டின்படி 1000-த்திற்கும் மேற்பட்டோரும் பலியானார்கள்.
ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித் பின்னாலில் படுகொலை நிகழ்த்திய ஜெனர்ல் டயர்…சுட்டேன்..சுட்டேன்…என் ஆசைதீரச்சுட்டேந் என்றான் அந்த க டூரன். இது தான் நம் வரலாறு.காந்தி
மறைந்து 78 ஆண்டுகள் ஆனாலும், அவர் செயல்பாடுகள் இன்றும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. ஆனால் வேதனை
என்னவென்றால், சிலர் இன்று அவரது தியாகத்தை கேலியும் கிண்டலும்
செய்து, விவாதப்பொருளாக மாற்றியிருக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு உதாரணம். NEET தேர்வு வினாத்தாள் கசிவுக்கு நீதி கேட்டும், காலநிலை பாதுகாப்பிற்காகவும், லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் போராளி சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 28, 2026 முதல் 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். 7.8 கிலோ எடை இழந்தார், ரத்த அழுத்தம் குறைந்தது, டெல்லி உயர்நீதிமன்றமே தலையிட்டு அவர் உடல்நிலையை கண்காணிக்க உத்தரவிட்டது.
அப்போது
சிலர் சொன்னார்கள் - "காந்தியின் உண்ணாவிரதமும் இது போல பிளாக்மெயில் தான், வெள்ளைக்காரன் பயந்ததால் தான் வெற்றி பெற்றது" என்று. இது வரலாறு
தெரியாதவர்களின் அறியாமை பேச்சு!
1915-ல்
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்ததில் இருந்து 1948-ல் மறையும் வரை, காந்தி சுமார் 30 முறை உண்ணாவிரதங்கள் இருந்தார். வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வது போல,
பல உண்ணாவிரதங்கள் பொதுவில் அறிவிக்கப்படவே இல்லை.
- 1913-ல் பீனிக்ஸ்
ஆசிரமத்தில் தன் சகாக்களின் ஒழுக்க மீறலுக்காக முதல் உண்ணாவிரதம்.
- 1924-ல் டெல்லியில்
இந்து-முஸ்லீம் கலவரத்தை நிறுத்த 21 நாள் உண்ணாவிரதம்!
அப்போது அவர் உடல் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, பிரிட்டிஷ்
அரசே அவசரமாக டாக்டர்களை அனுப்பியது.
- 1932-ல் ஒடுக்கப்பட்ட
மக்களுக்காக பூனா ஒப்பந்தத்திற்காக எரவாடா சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம்.
- 1943-ல் ஆகா கான் மாளிகையில் 21 நாள் உண்ணாவிரதம்.
இதில்
ஒரு உண்மை தெரியுமா? காந்தியின் பெரும்பாலான
உண்ணாவிரதங்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரானவை அல்ல! தன் சொந்த சகாக்கள், தன் ஆசிரமத்தில் ஒருவர் தவறு செய்தால், தன்னைத்தானே
தண்டித்துக் கொள்ள, பிராயச்சித்தமாக அவர் இருந்த
உண்ணாவிரதங்கள் தான் அவை! பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக உண்ணாவிரதத்தை அவர் கடைசி
ஆயுதமாகத்தான் பயன்படுத்தினார்.
இன்று நாம்
உண்ணாவிரதத்தை ஒரு அரசியல் நாடகமாக பார்க்கிறோம். ஆனால் காந்திக்கு அது ஆன்ம
பரிசோதனை! தன்னைத்தானே சுட்டுக்கொள்ளும் ஆயுதம்!
என்னவென்று காந்தியே விளக்கிய அந்த அற்புத வரிகள் …
:"தவறுகளை தண்டிக்க ஆயுதம் தேடுவதை விட, தன்னை தண்டித்துக் கொள்வதே பெரிய தண்டனை!"
"தீர்க்க முடியாத துயரம் வரும் போதெல்லாம், உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய் என்று என் மதம் எனக்கு கற்றுக்
கொடுக்கிறது."
"உண்ணாவிரதம் என்பது உடலை சிலுவையில் அறைந்து, ஆன்மாவை விடுதலை செய்யும் புனிதச் செயல்."
இதே சுய சுத்தத்தை தான் சுதந்திர தினத்தன்றும்
காட்டினார் காந்தி. சதந்திரதினத்தன்று நேருவுக்கு காந்தி கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
1947 ஆகஸ்ட் 15,
தேசமெங்கும் உற்சாக பெருவெள்ளம். ஆனால் காந்தியின் மனம் மட்டும்
உழுத நிலம் போல அழுது கொண்டிருந்தது. காரணம், இந்திய ,பாகிஸ்தான் எல்லையில் மத
வன்செயலால் ரத்த ஆறு ஓடியது.
"விடுதலை
பெற்ற தேசத்திற்கு உங்கள் செய்தி என்ன?" என்று கேட்டதற்கு "ஒன்றுமில்லை" என்றார்.
அப்போது
ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர், "பிரதமர்
நேருவுக்கு உங்கள் பரிசு என்ன?" என்று கேட்க, மௌன விரதத்தில் இருந்த காந்தி எழுதிக் காட்டினார் - "இந்த ஏழையிடம்
பரிசளிக்க எதுவும் இல்லை."
வற்புறுத்தவே, மரத்தடியில் கிடந்த உலர்ந்த பூ
ஒன்றை எடுத்துக் கொடுத்து "இப்போதைக்கு கிடைத்தது இதுதான்" என்றார்.
அதைக் கண்டு பத்திரிகையாளர் அழ, அவரது கண்ணீர் துளி அந்த
பூவின் மீது விழுந்தது.
உடனே காந்தி எழுதினார் - "நன்றி
நண்பரே! நான் உயிரில்லாத பூவைத் தந்தேன், உங்கள் தூய்மையான
கண்ணீர் அதற்கு உயிர் கொடுத்துவிட்டது!"
இப்படி ஒரு துறவியாக வாழ்ந்தவர் தான்
காந்தி! அவர் உண்ணாவிரதம் பிளாக்மெயில் அல்ல, அது தான் துறவு!
எனவே, காந்தியை வெறும் போராட்டக்காரராக மட்டும் பார்க்காமல், தன்னைத்தானே திருத்திக்கொண்ட ஒரு மகாத்மாவாக பார்க்க வேண்டும்!
இந்த 80-வது சுதந்திர தினத்தில் நாம் உறுதி ஏற்போம் - காந்தி காட்டிய சுயசுத்தம்
என்ற பாதையில், நாமும் நம் தவறை திருத்திக்கொண்டு, நம் தேசத்தை தூய்மையாக வைப்போம் என்று!
ஜெய்
ஹிந்த்! ஜெய் பாரத்!
No comments:
Post a Comment