பாரதிராஜா: தமிழ்க் கிராமத்தின் கடைசி காட்சிப்பதிவாளர்

 


எங்க ஊர்க்காரங்கே…” என்று மதுரை வட்டார வழக்குமொழியில் அவர் ஒரு மேடையில் பேசத் தொடங்கியபோது, பேசிக் கொண்டிருந்தது ஒரு திரைப்பட இயக்குநர் அல்ல; தன் மண்ணின் மனிதன் தனது மக்களோடு உரையாடிக் கொண்டிருந்தார். ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்திருந்தாலும், அவருக்குள் வாழ்ந்த கிராமத்து மனிதனை நகர வாழ்க்கையால் மாற்ற முடியவில்லை.

பாரதிராஜாவின் வருகைக்கு முன்பு, தமிழ் சினிமாவின் பெரும்பாலான கதைகள் நகரங்களின் வீடுகளிலும், ஸ்டுடியோக்களின் செயற்கை அரங்குகளிலும் சுற்றிக் கொண்டிருந்தன. அந்தப் போக்கை உடைத்து, புழுதி பறக்கும் கிராமச் சாலைகளையும், வயல்வெளிகளையும், வெயிலில் கருகிய முகங்களையும், வெள்ளந்தியான மனிதர்களையும் பெரிய திரைக்குக் கொண்டு வந்தவர் பாரதிராஜா. அது ஒரு புதிய இயக்குநரின் வருகை மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் பார்வையையே மாற்றிய ஒரு பண்பாட்டு நிகழ்வாகும்.

கிராம வாழ்க்கையை அவர் அழகுபடுத்தி மட்டும் காட்டவில்லை. அன்பும் பாசமும் நிரம்பிய உறவுகளோடு, சாதி, மதம், அறியாமை, ஆணாதிக்கம் போன்ற சமூகச் சிக்கல்களையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள வைத்தார். கிராமத்தின் அழகையும் அதன் முரண்பாடுகளையும் ஒருசேரப் பதிவு செய்ததால்தான் அவரது திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், ஒரு காலத்தின் சமூக ஆவணங்களாகவும் மாறின.

அதனால்தான் பாரதிராஜாவை நினைக்கும் போது அவரது திரைப்படங்கள் மட்டும் நினைவுக்கு வருவதில்லை; அவரது மொழி, மண்ணின் மணம், அவர் உயிர் கொடுத்த மனிதர்கள், அவர்கள் வாழ்ந்த கிராமங்களும் நம் நினைவில் உயிரோடு நிற்கின்றன.

                                  "பாரதிராஜாவின் படைப்புலகம் பரந்தது. அதில் அவரது கலைப் பார்வையையும் மனிதநேயச் சிந்தனையையும் தெளிவாக வெளிப்படுத்தும் மூன்று திரைப்படங்களின் வழியே அவரது படைப்புலகை அணுகிப் பார்ப்போம்."

மேலும் கட்டுரையை படிக்க  

கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்க

https://tinyurl.com/wxnt6kuh

கட்டுரையை படித்து தங்களுது கருத்துகளை பதிவு செய்க


No comments: