புரியாத கவிதைகள்





















ஆரம்பிப்பதும்
முடிப்பதுமாய்
அல்லோலப்பட
வேண்டியிருக்கிறது
புரிதல் கிட்டாமல்


முற்றுப்புள்ளியில்
புரிதல்
சாத்தியமற்றுத்
திரும்புகிறது.

புரியாத கவிதைகள்
அதிகப்படுத்துகின்றன
வாசிப்பின் இருப்பை...

எப்படியாயினும்
ஒருகவிதையாவது
எழுதிவிடவேண்டும்
யாருக்கும்
புரியாமல்...

முடியாமல் போனதில்
ஒத்துக் கொள்ளத்தான்

















வேண்டியிருக்கிறது
கவிஞன் இல்லையென்பதை...

இருந்தாலும்
எவருக்கும் புரியாமல்
எழுதுவதில்
என்ன பெரிசாக
இருந்துவிடப் போகிறது

-மதுரகாசி

Comments

அற்புதமான கவிதை. பகிர்வுக்கு நன்றி.
balasubramani said…
good
effort to make me understand your kavithai
அருமை உண்மையும் கூட புரியாததை தான் இந்த உலகம் தேடுகிறது புரிந்ததை புறக்கணித்து விடுகிறது
  • உலக அளவில் பார்க்க வேண்டிய சிறந்த 52 இடங்களில்  இந்தியாவில் தமிழகம் மட்டுமே!!!!!
    11.01.2016 - 3 Comments
    உலக அளவில் பார்க்க வேண்டிய சிறந்த 52 இடங்களில் தமிழகத்திற்கு 24வது இடத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை…
  • ''அரவான்''- 18ம் நூற்றாண்டுத்தமிழன்
    10.10.2011 - 1 Comments
    தீபாவளிக்கு வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களில் ரசிகர்களால் எதிர்பார்க்கபடும் படம் ''அரவான்''. 18ம்…
  • சைவம்... புதிய சுவை
    29.06.2014 - 1 Comments
    சூப்பர்ஸ்டார் இல்லை,தளபதிகள் இல்லை, தலயும் இல்லை,சூப்பர் ஆக்டரும் இல்லை,பஞ்ச் வசனம் இல்லை,அடிதடிகள்…
  • உலகத்தின் கடைசி நாள்.....
    03.10.2011 - 2 Comments
    15 -20 ஆண்டுகளுக்கு முன்னாள் ஸ்கைலேப் என்ற அமெரிக்க விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி…
  • செவ்வாயில் ஓடிய நதி வீடியோ +மங்கல்யாண்
    23.09.2014 - 0 Comments
    நொடிக்கு 22.1 கிமீ வேகத்தில்  செவ்வாயை நோக்கி பயணத்து கொண்டிருந்த மங்கள்யானை தற்போது வேகத்தை…