10 அக்., 2011

''அரவான்''- 18ம் நூற்றாண்டுத்தமிழன்


தீபாவளிக்கு வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களில் ரசிகர்களால் எதிர்பார்க்கபடும் படம் ''அரவான்''. 18ம் நூற்றாண்டில் அதாவது 300 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த நம் முன்னோர்களின் வாழ்க்கையைப் பற்றிய வரலாற்றுக்
கதை.''வெயில்'', ''அங்காடித்தெரு'' போன்ற வெற்றி படங்களுக்கு பிறகு வசந்தபாலன் இயக்கும் மிகபிரமாணடமான திரைப்படம். ''மிருகம்'' படத்தில் புதுமுகமாக அறிமுகமாகி , ''ஈரம்'' திரைபடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் ஆதி, தனது ஒவ்வொரு படத்திலும் தனித்துவமாக நடிக்கும் பசுபதியும் நடிக்கிறார்கள்.தன்ஷிகா, அர்ச்சனாகவி என இரண்டு கதாநாயகிகள். ''காவல் கோட்டம்'' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்ட்டுள்ளது.சினிமா ரசிகர்களுக்கு திருப்தியாகவும், விருதுகளையும் பெறும் வாய்ப்புள்ள படம்.


''அரவான்'' - திரைப்படம் குறித்து இயக்குனர் வசந்தபாலன்...

''மலைகளிலும், வனங்களிலும் கல்லாய் கதையாய் வாழ்ந்து கொண்டு இருப்பவன், எல்லா நூற்றாண்டுகளிலும் அதிகாரத்தின் கோரப்பிடியில் சிக்கி நசுங்கும் நியாயவான்கள் அத்தனை பேரும் அரவான்களே''. மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றை சொல்லும் சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் என்ற நாவல் படித்த போது  பலகிளைக் கதைகளை கொண்ட அந்த நாவலில் ஒரு சிறு பகுதியை படமாக்கினால் என்ன என தோன்றியது. அப்போதிருந்தே அரவான் வளரத்தொடங்கிவிட்டான். பட்ஜெட் அளவில் மட்டுமல்ல கதையிலும் பிரமாண்டமானது அரவான்.18ம் நூற்றாண்டு மனிதர்கள் காடு,மலை,இரவு,பகல் சுற்றிய ,அவர்களின் உடற்கட்டும் , திடகாத்திரமான உடலும் பிரமிக்க வைக்கிறது. இந்த படத்தில் 6.2அடி உயரமும், 8 பேக்ஸ் உடற்கட்டும் உள்ள ஆதி, ''வரிப்புலி'' என்ற கேரக்டரிலும், என் மனதுக்கு பிடித்த நடிகர் பசுபதி ''கொம்பூதி'' யாகவும் நடிக்கிறார்கள்.இந்தியா முழுக்க படிபிடிப்பு தளம் தேடி அலைந்தோம், கடைசியில் மதுரைக்கு அருகேயுள்ள ஓவாமலையில் நாங்கள் எதிர்பார்த்த லொகேசன் கிடைத்தது. இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பரபரப்பாக இருக்கும் பாடகர் கார்த்தி 18ம் நூற்றாண்டு இசைகருவிகளை தேடிப்பிடித்து இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி படத்தை 18ம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்வதில் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார். காட்டன் வேட்டி , சேலைகளை ஒருவாரம் மண்ணுக்குள் புதைத்து வைத்து பழுப்பு நிறமானது. அதையே உடைகளாக பயன்படுத்தியிருக்கிறோம். தனிஷிகா, அர்ச்சனாகவி என ஹ¦ரோயின்கள் இருவரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருகிறார்கள்.வரலாற்று படத்தை மக்களின் ரசனையோடு இணைத்திருப்பதால் போரடிக்காமல் ரசிகர்களின் ரசனைக்கேற்ப இருக்கும்.


''காவல்கோட்டம்'' நாவலாசிரியர் பற்றி...

சு.வெங்கடேசன் மதுரையைச் சேர்ந்தவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்.இவரின் மற்ற படைப்புகள்... பாசி வெளிச்சத்தில்(1997),ஓட்டையில்லாத புல்லாங்குழல்(1989),திசையெல்லாம் சூரியன்(1990),ஆதிப்பூதிர்(2000) போன்ற கவிதை தொகுதிகளும்,கலாச்சாரத்தின் ஆரசியல்(2001),ஆட்சிதமிழ் ஒரு வரலாற்று பார்வை(2001) போன்ற கட்டுரைத் தொகுதிகளும் வெளியிட்டுள்ளார்.மதமாற்ற தடைச்சட்டம் மறைந்திருக்கும் உண்மைகள்(2003), மனிதர்கள்,நாடுகள்,உலகங்கள்(2003),கருப்பு கேட்கிறான் கிடா எங்கே?(2003),உ.வே.சா.சமயம் கடந்த தமிழ்(2005) போன்ற சிறு வெளியீடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்றை மையமாக கொண்டு எழுதப்பட்ட காவல்கோட்டம் என்ற நாவல் இவரின் மிகபெரும் முயற்சியாகும்.இந்த நாவலுக்காக கனடாநாட்டின் போத்தம் இலக்கிய அமைப்பு வழங்கி இயல்விருதினை  பெற்றுள்ளார்.
சத்யஜித்ரே

 விமர்சனம் எழுத..... 
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...