செவ்வாயில் ஓடிய நதி வீடியோ +மங்கல்யாண்

நொடிக்கு 22.1 கிமீ வேகத்தில்  செவ்வாயை நோக்கி பயணத்து கொண்டிருந்த மங்கள்யானை தற்போது வேகத்தை குறைக்கும் வேலைகள் நடந்து கொண்டருக்கின் றன.மங்கள் யாண் விண்கலம், தனது நீண்ட பயணத்தின் நிறைவாக, செவ்வாய் கிரகத்தின் வான்வெளிக்குள் நுழைந்துள்ளது. இந்த விண் கலம், புதனன்று (24)செவ்வாயின் நீள் வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதற் காக திங்களன்று நடந்த‘டெஸ்ட் பயர்’ வெற்றிகர மாக முடிந்துள்ளது.

 டெஸ்ட் பயர்’  குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘ராக்கெட் மோட் டார்களை இயக்க 4 நொடி ‘டெஸ்ட் பயர்’ செய்யப்படும். இதன் மூலம், மங்கள்யாண் தனது பாதையில் இருந்து கீழ்நோக்கி வரும். சரியான பாதையில் மங்கள்யாணை நிலை நிறுத்ததேவையான ஏற்பாடு களை செய்துள்ளோம்,’ என்றார். இந்த முயற்சி வெற்றி பெற்றால், செவ்வாய் கிரகத்திற்கு முதன் முதலாக வெற்றிகரமாக விண்கலத்தை செலுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் .

ராக்கெட் மோட் டார்கள்  நாளை (புதன்கிழமை) காலை 7.17 மணிக்கு மீண்டும் முழு வீச்சில் செயல்படுத்தப்படும். நாளை காலை 6.48 மணி முதல் 7.12 மணிக்குள் 24 நிமிடங்கள் மங்கள்யானின் திரவ எரிபொருள் இன்ஜின் இயக்கப்படும். அதனைத் தொடர்ந்து காலை 7.30 மணி முதல் படிப்படியாக மங்கள்யானின் வேகம் விநாடிக்கு 22.1 கி.மீ-ல் இருந்து 4.4 கி.மீ. ஆக குறைக்கப்பட்டு செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மங்கல்யானை தொடர பேஸ்புக்பக்கம்.


செவ்வாயில் ஓடிய நதி வீடியோ

    

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை மங்கள்யான் விண்கலத்தின் மீத்தேன் சென்சார் கருவியும், கனிம வளங்களை தெர்மல் இன்பிரா-ரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டரும், வளி மண்டலத்தை லைமன் ஆல்பா போட்டோ மீட்டரும், நுண்ணிய துகள்களை எக்சோபெரிபிக் நியூட்ரல் கம்போசிசன் அனலைசரும் ஆராயும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பகுதிகளை மார்ஸ் கலர் கேமரா பல கோணங்களில் படம் பிடிக்கும்.

செவ்வாயை அடைந்தது அமெரிக்க விண்கலம்:

 இந்தியா மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி இரு வாரங்களில், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, 'மாவென்' என்ற ஆய்வுக்கலத்தை அனுப்பியது. ஓராண்டுப் பயணத்திற்குப் பிறகு ஞாயிற்றுக் கிழமை இரவு 'மாவென்' விண்கலம், செவ்வாய் கிரகத்தைச் சென்றடைந்தது.

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்