உலகத்தின் கடைசி நாள்.....


15 -20 ஆண்டுகளுக்கு முன்னாள் ஸ்கைலேப் என்ற அமெரிக்க விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி விழத்தொடங்கிய போது, உலகம் அழிந்துவிடும் என்ற வதந்தி பரப்பபட்டது.கிராம மக்கள் தங்கள் வளர்த்த ஆடு,கோழிகளை அடித்து சாப்பிட்டு,புத்தாடை அணிந்து உலக அழிவுக்காக காத்திருந்தார்கள். ஆனால் உலகம் அழியவில்லை, இதோ மீண்டும் அதே போல மற்றொரு செய்தி.......


2012 ல் உலகம் அழிந்துவிடும் என மாயன்காலண்டரில் வெளியான தகவல்களால் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
     மாயா என்ற இனம் தென்அமெரிக்காவில் முன்பு இருந்துள்ளது. கிருஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரீகம் தோன்றி சமீபத்தில் 15ம் நூற்றாண்டுவரை இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏறக்குறைய 3500 ஆண்டுகள் உலகில் கோலோச்சிய இந்த மாயா இனத்தவர்கள் குறித்து தகவல்கள் விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல் மர்மமாகவே உள்ளது.
        மாயர்கள் கட்டிடக்கலை,வானவியல் சாஸ்திரங்கள்,மற்றும் கணித சூத்திரங்களில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.இதற்கு அவர்கள் உதாரணமாக காட்டுவது மாயர்களின் காலண்டர். மிகநுட்பமான கணிதவியல் பரிணாமங்களைக் கொண்டு மாயர்களின் காலண்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் துவங்கி கி.பி. 2012ல் நிறைவடைகிறது. இதுதான் இப்போது உலகளவில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கிறது.

         மாய மந்திரங்களிலும், வானவியல் சாஸ்திரங்களிலும் கில்லாடிகளான மாயர்கள் 2012ல் காலண்டரை முடித்துவிட்டதற்கு 12.12.12 அன்று உலகம் அழியாப் போவதை பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்களது ஞானதிருஷ்டியால் கண்டறிந்து விட்டனர் என்றே நம்பப்படுகிறது. இது உலகின் கடைசி நாள் என்ற பெயரில் மக்களிடயே விவாதப்பொருளாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
             அப்படி மாயன் காலண்டரில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்-
      சூரியக்குடும்பத்தில் அங்கம் வகித்திடும் பூமி 2012ம் ஆண்டு சூரியமண்டலத்தின் நேர்கோட்டுக்கு வருமாம். இதை தொடர்ந்து நேர்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும் போது புவியின் காந்தபுலன்கள் திசைமாறி துருவங்கள் இடமாற்றும் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணித்துள்ளது. துருவங்களின் இடமாற்றம் என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால் பலஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட விஷயம்தான். ஆனால் அது 2012ல் தான் ஏற்படுமா என்பதை விஞ்ஞானிகளால் உறுத்ப்படுத்த முடியவில்லை.
             மலை உயரத்திற்கு சுனாமி வரும், தினம் தோறும் பூகம்பம்,பனிமலைகள் எரிமலைகளாகும் என ஒட்டுமொத்தமாக இயற்கை பேரழிவுகள் கோரப்பசியுடன் மனிதகுலத்தை கபளீகரம் செய்துவிடும் என மாயன் காலண்டரில் இருப்பதாக கூறப்படுகிறது. இதை வைத்து 12.12.12 ல் உலம் அழிவது உறுதி  என சிலர் உலகத்தை மிரட்டி வருகின்றனர். மாயன் காலண்டரும் இந்த ஊழிப்பெருந்தீ, ஊழிப்பெருநீர்  வகையறாக்களை உறுதிசெய்கிறது.
       சூரிய மண்டலத்திற்கு ஒருநாள் என்பது நம் பூமியின் கணக்கில் பார்த்தோமேயானால் 25,625 வருடங்களாகும்.இதை மாயன்களின்  காலண்டர் ஐந்துகட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலகட்டமும் 5,125 வருடங்களை கொண்டது. இதில் நான்கு கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம், இப்போது நடைபெறுவது 5வது எனப்படும் கடைசி காலகட்டமாகும்.  அதுவும் கூட 2012 டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதை உலகத்தின் கடைசிநாள் ஜட்ஜ்மென்ட் டே என பலரும் அஞ்சுகின்றனர். இப்போது உலகில் வசித்துவரும் அனைவரும் ஐந்தாவது காலகட்ட மனிதர்கள். நான்காவது காலகட்டத்தில் வசித்தவர்கள் 5,125 வருடங்களுக்கு முன்பாக (கி.மு.3113ல்) நடந்த ஏதோ ஒரு இயற்கை பேரழிவில் இறந்திருப்பார்கள். அதுவும் நிலத்தை மூழ்கடித்த நீரால் அவர்கள் அழிந்திருப்பார்கள் என்று மாயன் காலண்டர் கணிப்பு கூறுகிறது.
                         ஆனால் இதற்கு மாறாக பிரான்சு நாட்டில் வாழந்த 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானி நாஸ்டர்டாம் என்பவர் 5079ம் ஆண்டுவரை உலகில் எண்ணென்ன நடக்கப்போகிறது என கணித்து கூறியுள்ளார். இவர் கணித்தபடிதான் முதல் இரண்டு உகப்போர்களும் நடைபெற்றதுடன் பல்வேறு முக்கிய நிகழ்வுகளும் நடைபெற்று உலகை வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் இறுதியாக 5079ம் ஆண்டு உலகம் அழிந்துவிடும் என நாஸ்டர்டாம் தனது கணிப்பின் நிறைவில் கூறியுள்ளார்.
       மொத்தத்தில் உலகம் அழிவது மாயன் காலண்டர் படியா அல்லது ஞானி நாஸ்டர்டாம் படியா என சர்ச்சைகள் எழும்பி பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் சுற்றுச்சூழலை பேணிக்காத்து இயற்கை வளங்களை பாதுகாப்பது உலகை அழிவிலிருந்து மீட்பதற்கான நமது கடமை என இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
      எது எப்படியோ 12.12.12 ல் மாயன் காலண்டர்படி உலகம் அழியப்போவதாக ஏற்பட்டுள்ள பரபரப்பு அடங்குவதற்கு 13.12.12 தேதி வரை ஆகும் என்பதே நிஜம்


 ஜே.எஸ்.செல்வராஜ் 
விமர்சனம் எழுத 
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

கவிதை வீதி... // சௌந்தர் // இவ்வாறு கூறியுள்ளார்…
என்னங்க இப்படி பயமுறுத்திரிங்க...
12-12-12 கேட்கவே பயமாயிருக்கு...

பெருத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
very nice