புரியாத கவிதைகள்





















ஆரம்பிப்பதும்
முடிப்பதுமாய்
அல்லோலப்பட
வேண்டியிருக்கிறது
புரிதல் கிட்டாமல்


முற்றுப்புள்ளியில்
புரிதல்
சாத்தியமற்றுத்
திரும்புகிறது.

புரியாத கவிதைகள்
அதிகப்படுத்துகின்றன
வாசிப்பின் இருப்பை...

எப்படியாயினும்
ஒருகவிதையாவது
எழுதிவிடவேண்டும்
யாருக்கும்
புரியாமல்...

முடியாமல் போனதில்
ஒத்துக் கொள்ளத்தான்

















வேண்டியிருக்கிறது
கவிஞன் இல்லையென்பதை...

இருந்தாலும்
எவருக்கும் புரியாமல்
எழுதுவதில்
என்ன பெரிசாக
இருந்துவிடப் போகிறது

-மதுரகாசி

Comments

அற்புதமான கவிதை. பகிர்வுக்கு நன்றி.
balasubramani said…
good
effort to make me understand your kavithai
அருமை உண்மையும் கூட புரியாததை தான் இந்த உலகம் தேடுகிறது புரிந்ததை புறக்கணித்து விடுகிறது
  • 115 வயது 'ஜப்பான் பாட்டி'யும் - குழந்தை ரோபோவும்
    13.01.2013 - 0 Comments
    உலகின் அதிக வயதான பெண்மணியாக கருதப்பட்டவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த டினா மான்ஃப்ரெடினி (115 வயது).…
  • சீதை - லட்சுமணன் கோட்டை தாண்டியது சரியா? தவறா?
    30.09.2011 - 0 Comments
    தந்தை தசரதனின் கட்டளையை தலைமேற்கொண்டு 14 ஆண்டுகள் வனவாசத்தை  கழிக்கும் பொருட்டு ராமன்,லட்சுமணன்…
  • 'ஏழாம் அறிவு’  திரைக்கதையின் உண்மை வரலாறு என்ன?
    26.09.2011 - 8 Comments
    மணிரத்னம், ஷங்கர் படங்களை போல தற்போத ஏ.ஆர்.முருகதாஸ் படங்களுக்கும் கதை தெரிந்து கொள்வ தில் ஆர்வம்…
  • பேஸ்புக்கில் மங்கள்யானை பின் தொடர ....
    07.11.2013 - 1 Comments
    2 மணி நேரத்திற்குஒருமுறை மங்கள்யானை என்ன செய்கிறது  என தெரிந்து கொள்ள விருப்பமா?...…
  • அப்பா....சூப்பர்ப்பா!!!!
    04.07.2016 - 0 Comments
    "அம்மா பத்துமாதம் தான் குழந்தையை வயிற்றில் சுமக்கி றாள்.அப்பா கடைசி வரை மனதில் சுமக்கிறார் " என்பார்கள்.…