வணக்கம் நண்பர்களே!
உங்கள் பெயர் விண்வெளிக்கு செல்ல
வேண்டுமா? சனி
கிரகத்தின் மிகப்பெரிய நிலவுக்கு செல்ல வேண்டுமா? நாசா உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை
வழங்குகிறது!
நாசாவின் டிராகன்ஃபிளை (Dragonfly) திட்டம் என்றால் என்ன?
டிராகன்ஃபிளை என்பது சனி கிரகத்தின்
நிலவு டைட்டனுக்கு அனுப்பப்படும் ஒரு சிறப்பு ஹெலிகாப்டர்
(Rotorcraft). இது வேறு
ஒரு உலகத்தின் மேற்பரப்பில் பறந்து ஆராயும் முதல் அறிவியல் திட்டம் ஆகும்!
- ஏவப்படும் நாள்: ஜூலை 2028
- ராக்கெட்: SpaceX Falcon Heavy
- டைட்டனை சேரும் நாள்: டிசம்பர் 2034
- பயண தூரம்: 2.2 டிரில்லியன் மைல் (2,200,000,000,000 மைல்!)
![]() |
| சனி கிரகத்தின் நிலவு டைட்டனுக்கு அனுப்பப்படும் விண்கலம் |
சனி கிரகம் மற்றும் டைட்டன் நிலவு பற்றி தெரியுமா?
சனி கிரகம் (Saturn):
- சூரியனிலிருந்து 6-வது கிரகம்
- அழகான
வளையங்களுக்கு (Rings)
புகழ் பெற்றது
- 146 நிலவுகள் உள்ளன!
டைட்டன் (Titan) - ஒரு ஆச்சரிய உலகம்:
- சனியின் மிகப்பெரிய நிலவு, நம் சந்திரனை விட பெரியது! புதன் கிரகத்தை
விடவும் பெரியது!
- சூரிய
குடும்பத்தில் அடர்த்தியான வளிமண்டலம் (Atmosphere) உள்ள ஒரே நிலவு!
- பூமியை போலவே - ஆறுகள், ஏரிகள், கடல்கள் உள்ளன! ஆனால் தண்ணீர் இல்லை, திரவ மீத்தேன் (Liquid Methane) இருக்கிறது!
- மணல் குன்றுகள், பனி மலைகள், எரிமலைகள்
உள்ளன!
- உயிர் வாழ தேவையான
வேதியியல் பொருட்கள் (Prebiotic Chemistry) இருக்கின்றனவா
என்று நாசா ஆராய போகிறது!
- வெப்பநிலை: -179 டிகிரி செல்சியஸ்! மிகவும் குளிர்!
டைட்டன், பூமிக்கு முன்பு உயிர் தோன்றிய காலத்தை
போல இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்!
உங்கள் பெயர் எப்படி டைட்டனுக்கு
செல்லும்?
நாசா நம் அனைவரின் பெயர்களையும் ஒரு
சிறிய Microchip-ல் பதிவு
செய்து, டிராகன்ஃபிளை
ஹெலிகாப்டரில் வைக்கிறது! அந்த ஹெலிகாப்டர் டைட்டனில் இறங்கியதும், நம் பெயர்களும் அங்கே இருக்கும்!.jpeg)
Digital Boarding Pass
பதிவு செய்பவர்களுக்கு நாசா ஒரு அழகான Digital Boarding
Pass வழங்குகிறது!
நான் என் பெயரை பதிவு செய்துவிட்டேன்!
எனக்கு Boarding Pass கிடைத்துவிட்டது!
நீங்களும் பதிவு செய்ய வேண்டுமா? இதோ வழி:
- இந்த Link-ஐ கிளிக் செய்யுங்கள்: https://go.nasa.gov/dragonfly-names
- First
Name, Last Name, Email கொடுங்கள்
(புள்ளி (.) வைக்க வேண்டாம்!)
- Submit
கொடுத்தால், உடனே Boarding Pass கிடைக்கும்!
கடைசி தேதி: ஜனவரி 15, 2027 இரவு 11:59 வரை!
நண்பர்களே, இது ஒரு வரலாற்று வாய்ப்பு! வாயேஜர்
விண்கலத்தில் தமிழ் வணக்கம் சென்றது போல, இப்போது உங்கள் பெயர் சனி கிரகத்தின்
நிலவுக்கு செல்ல போகிறது!
உடனே பதிவு செய்யுங்கள்! உங்கள் Boarding Pass-ஐ நண்பர்களுடன் பகிருங்கள்!
விண்வெளி கனவை நனவாக்குவோம்!


No comments:
Post a Comment