பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...

இன்று (நவம்பர் 18) மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான நாள்!

 

மனித இனம் உருவாகி சுமார் 2 லட்சம் ஆண்டுகளாகியுள்ள நிலையில், மனிதகுலம் படைத்திருக்கும் மிகப் பிரமிக்கத்தக்க அறிவியல் சாதனைகளில் ஒன்றுக்கு இன்று ஒரு புதிய மைல்கல் கிடைக்கிறது.

1977 செப்டம்பர் 5 அன்று அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் ஏவப்பட்ட வாயேஜர் 1 (Voyager 1) விண்கலம், சுமார் 49 ஆண்டுகளாகத் தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இன்று அது பூமியிலிருந்து ஒரு ஒளிநாள் தொலைவை எட்டுகிறது. அதாவது, ஒளி ஒரு நாளில் கடக்கும் சுமார் 2,590 கோடி கிலோமீட்டர் தொலைவு! ஒளி ஒரு நொடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும். அப்படி ஒளி 24 மணி நேரம் தொடர்ந்து பயணிக்கும் தொலைவுதான் ஒரு ஒளிநாள்.

மனிதன் உருவாக்கிய ஒரு சிறிய விண்கலம், பூமியிலிருந்து இவ்வளவு தொலைவில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பது எத்தனை வியப்பான சாதனை!

வியாழன், சனி கோள்களைக் கடந்து, சூரியக் குடும்பத்தின் வெளிப்புற எல்லையைத் தாண்டி விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளியில் பயணிக்கும் வாயேஜர் 1, இன்றும் பூமிக்குத் தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது.

அதன் வழியாக மனிதகுலம் தனது அறிவையும், ஆர்வத்தையும், தேடலையும் பிரபஞ்சத்தின் ஆழங்களுக்கு அனுப்பியிருக்கிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஒட்டி நான் எழுதிய கட்டுரை கீற்று இணைய இதழில் வெளியாகியுள்ளது.

கட்டுரைத் தலைப்பு:
நவம்பர் 18-ல் வரலாறு படைக்கும் மனிதன் அனுப்பிய விண்கலம் – வாயேஜர் 1-ன் நெடும்பயணம்!

வாசிக்கவும், உங்கள் கருத்துகளைப் பகிரவும்.

🔗 https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-72/50305-navampar-18-l-varalaru-pataikkum-manitan-anuppiya-vinkalam-vayejar-1-n-netumpayanam

— அ. தமிழ்ச்செல்வன்

 

No comments:

நூல் அறிமுகம்

50 ஜென் கதைகள் – அமைதி தரும் வாழ்க்கைச் சிந்தனைகள்

மனக்குழப்பம் மற்றும் கவலைகளின் போது அமைதியும் தெளிவும் தரும் எளிய ஜென் கதைகளின் தொகுப்பு.

Google Play Books-ல் வாசிக்க ↗