இந்த ஓட்டையில் செல்லும் கடல் தண்ணீர் எங்கு செல்கிறது புரியாத....புதிர்

 


இந்த உலகம் பல மர்மங்கள் நிறைந்தது. இதற்கு முந்தய  வீடியோவில் பிரமிடுகளை கட்டியது யார் என்ற பிரமிடுகளை பற்றிய மர்மங்களை பற்றி  சொல்லியிருந்தேன். 

 கடல் பகுதியில் அமைந்துள்ள  ஓட்டையில் செல்லும்  தண்ணீர் எங்கு செல்கிறது என்பது புரியாத புதிராக  உள்ளது.


https://www.youtube.com/watch?v=joPveGoSGTM

 மர்மங்களும் புதிரும்  நிறைந்த  இடங்கள் உலகம் முழுவதும் ஏராளமான   உள்ளது. அப்படிப்பட்ட மர்மம் நிறைந்த ஒரு இடம் ஸ்பெக்டிங் ஹார்ன் என்றும் அழைக்கப்படும் தோர்ஸ் வெல்(Thor’s Well). அமெரிக்காவின் ஓரிகானில் இது உள்ளது. ஓரிகானில்  பகுதியில் ஒரு பிரபலமான பழமொழி தோர்ஸ் கிணற்றின் அருகில் செல்லாதீர்கள் அது உங்களைத் தின்றுவிடும். அப்படி என்ன மர்மம் இருக்கிறது பார்ப்போம்.


ஓரிகானின் யச்சாட்சுக்கு தெற்கே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கேப் பெர்பெட்டுவா பகுதியில் கரடுமுரடான பாறைகளை கொண்ட கடற்கரையில் காணப்படும் ஒரு கிண்ண வடிவ துளையே தோர்ஸ் கிணறு என அழைக்கப்படுகிறது. முதலில் இது கடற்கரை குகையாக இருந்தது. அதன் கூரை இடிந்து விழுந்த பிறகு கடல் நீர் உள்ளே நுழைந்து வெளியேற தொடங்கியது. அலைகள் இந்த துளைக்குள் தண்ணீரை கொண்டு நிரப்புகிறது.

சில நொடிகளில் அந்த தண்ணீர் எங்கு செல்கிறது என தெரியவில்லை. மொத்தமாக தண்ணீர் வற்றி விடுகிறது. மீண்டும் அலை தண்ணீரை கொண்டு நிரப்புகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஓட்டைக்குள் நிரம்பும் தண்ணீர் எங்கு செல்கிறது என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. சில நேரங்களில் உள்ளே செல்லும் தண்ணீர் மேலே ஸ்பிரே போல பீச்சி அடிப்பது பார்க்க இன்னும் அழகு.

  தோர்ஸ் கிணறு குறித்து மேலும் தெரிந்து கொள்ள   வீடியோவை  கிளிக் செய்க



please subcribe my channel



 இந்த கிணற்றை  நரகத்தின் வாயில் என்று பலர் அலைகிறார்கள். பசிபிக்கின் வடிகால் குழாய் என்றும் அழைக்கப்படும் இந்த கிணறு உண்மையில் பாறையில் உள்ள ஒரு துளையாகும். இந்த பெரிய துளை சுமார் 20 அடி ஆழம் மட்டுமே இருக்கும். மர்மமாக புகழ் பெற்றிருந்தாலும் தோர்ஸ் கிணறு அவ்வளவு ஆபத்தானது அல்ல என சொல்லப்படுகிறது. ஆனால் அங்குள்ள உண்மையான ஆபத்து கடல் நீர்.

துளைக்குள் சென்றால் நீங்கள் வெளியே வருவது கடினம். சாகசம் விரும்பும் சுற்றுலா பயணிகள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் இங்கு அதிகம் பார்வையிட வருகின்றனர். புகைப்பட கலைஞர்கள் அருகில் சென்று படம் எடுக்க விரும்பி ஆபத்தில் மாட்டி கொண்ட சம்பவங்களும் உள்ளது.   இந்த கிண்ற்றில்  தண்ணீர் வருவதும் போவதுமாக இருப்பது  பார்க்க அழகாக இருந்தாலும் ஆபத்தான இடம்.



 


Comments