.எந்திரன் -2 அதில் ரஜினி இருப்பாரா என்பது சந்தேகம்lதான் ????????

ரஜினியின்   எந்திரன்  படத்தில் தொடர்ந்து நடிப்பாரா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள். படபிடிப்பு 100 நாட்கள்  முடிந்துள்ள நிலையில் இப்படி ஒரு அதிர்ச்சி செய்தி. இது வதந்தி அல்ல. படபிடிப்பில் நடந்த ஒரு சம்பவமே இதுக்கு காரணம் என்கிறார்கள் .ரஜினியின் படங்கள் எப்போதும்  பயங்கர பில் டப்புகளோடு வரும்  ஆனால் பில்டப்புக்கு எத்தமாதரி படம் இருக்காது.  சமீபமாக வந்த சில படங்கள் அதற்கு உதாரணம்.லிங்கா.கோச்சடையான் படங்கள் மிக மோசமான தோல்வியை தழுவின. இந்நிலையில் கபாலி வரலாம் என்கிறார்கள். அதில் கூட ரஜினி மிக சோர்வாகத்தான் காணப்படுகிறாராம். உடல் நிலை  ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள்.கபாலிக்கு அடுத்ததாக பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம் 2.0 என்ற எந்திரன்.2. இந்த படத்தில் தான் சில பிரச்சனைகள் காரணமாக படத்திலிருந்து ரஜினி விலக முடிவெடித்திருப்பதாக சொல்கிறார்கள்

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் படம் எந்திரன் 2. இந்த திரைப்படத்தின் 100நாள் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் திடீரென ரஜினி இந்த திரைப்படத்தில் இருந்து விலகுவதாக கூறியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. ரஜினியின் இந்த முடிவுக்கு காரணத்தையும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு சண்டைக்காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ரோப் கட்டி ரஜினியை தூக்க வேண்டிய சூழ்நிலை. வேறு வழியில்லாமல் ரஜினியும் சம்மதிக்க… அவரை மேலே தூக்கிவிட்டார்களாம். அந்த நேரத்தில்தான் அந்த ரோப் முறையாக சுழலாமல் முரண்டு பிடிக்க, அவரது இடுப்புப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக ரோப்பை இறங்குங்க என்று அவர் கத்தியதைத் தொடர்ந்து யூனிட் பரபரப்பானதாக சொல்லப்படுகிறது. அந்த நிமிடமே டைரக்டர் ஷங்கரை அழைத்த ரஜினி, “இதுவரைக்கும் எவ்ளோ செலவானதோ… அதை கொடுத்துடறேன். என்னை விட்ருங்க” என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.கடும் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டார்களாம் அத்தனை பேரும். இதைத் தொடர்ந்துதான் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.எந்திரன்2 இருக்கும்; அதில் ரஜினி இருப்பாரா என்பதுதான் சந்தேகம்..! எந்திரன்2 வரும்... ஆனா வராது..!

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Anonymous said…
wrong news.