சிக்கன் 65 ன் கதை...

சிக்கன 65 சாப்பிட்டுயிருக்கிங்களா? சிக்கன் ஓகே.. அதென்ன சிக்கன் 65... சிக்கனுடன்-, ... 65 சேர்ந்த கதை தெரியுமா? அதற்கு முன்னால் வேறு ஒரு தகவலையம் சொல்லிவிடுகிறேன். இன்று இருக்கும் அவசர உலகில் நம்மில் பலர் காலை உணவை உண்பதில் அக்கறை காட்டுவதில்லை. அப்படி நாம் காலை உணவினை உண்ணாமல் இருந்தால் உடல் சோர்வு ஏற்பட்டு பல்வேறு பிரச்சனைகள் ஏறப்படும். எனது நண்பர் கட்டிட பொறியாளர் , தினசரி காலை உணவு சாப்பிடமாட்டார். காலையில் வேலையாட்களுக்கான வேலகளை பிரித்துக்கொடுப்பது துவங்கி எல்லா வேலைகளையும் முடிக்க காலை 11 மணியாகும்,
காலை மதியம் இரண்டு வேலையும் சேர்த்து மதியம் 12.30 மணிவாக்கில் சாப்பிடுவார். பிறகு இரவு உணவு 10.30 மணி, அவருக்கு அல்சர் மற்றும் இரைப்பை பிரச்சனை வந்து மிக அவதிபட்டார். இதேபோன்று காலை உணவினை சாப்பிடாத குழந்தைகளுக்கு பேச்சுத் திறன், செயல்பாட்டு திறன் போன்றவை பாதிக்கப்படுவது சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மனிதனுக்கு தினசரி காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை உணவு அவசியமாகிறது. பொதுவாக காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையே அதிக இடைவெளி இல்லை. ஆனால், இரவு உணவுக்கு பின் சுமார் 10 மணி நேரத்திற்கும் அதிகமான இடைவெளிக்குப் பின்னரே காலை உணவு உண்ணப்படுகிறது. காலை உணவு என்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளை செயல்பாட்டுக்கும் உதவுகிறது. இதுகுறித்த ஆய்வு ஒன்றை அமெரிக்காவின் பென்சில்வேலியாவில் உள்ள நர்சிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர்.இதில் காலை உணவு சாப்பிடாத குழந்தைகளுக்கும், தொடர்ந்து காலை உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு சீனாவைச் சேர்ந்த 1,269 குழந்தைகளிடம் ஆறு ஆண்டுகளாக நடத்தப்பட்டது. ஆய்வில் காலை உணவு சாப்பிடாத குழந்தைகளின் பேச்சு திறன் மற்றும் செயல்பாட்டு திறன் ஆகியவை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேசமயம், அடிக்கடி அல்லது தொடர்ந்து காலை உணவு சாப்பிடும் குழந்தைகள் நல்ல அறிவு திறன் கொண்டவர்களாக இருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து ஆய்வின் தலைவர் ஜியாங்ஹாங் லியூ கூறுகையில், குழந்தைகளின் அறிவு திறன் அதிகரிக்க போதுமான உணவு அவசியம். காலை உணவு சாப்பிடாத குழந்தைகளுக்கு உடனடி மற்றும் நீடித்த பாதிப்புகள் ஏற்படும். காலை உணவை தவிர்க்காமல் உண்ணும் குழந்தைகள் வளர்ந்த பின்பு சமூகத்தை எதிர்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களையும் தடுக்கும் வலிமையையும் பெறுகின்றனர்.


எனவே, குழந்தையின் காலை உணவில் பெற்றோர் அக்கறை செலுத்துவதுடன் பள்ளிகளும் போதிய நேரத்துக்கு பின்பு வகுப்புகளை தொடங்குதல் அல்லது பள்ளியிலேயே குழந்தைகளுக்கு உணவு அளித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சரி இப்போ சிக்கனுக்கு வரலாம்...

சென்னையில் இருப்பவர்களுக்கு, அடிக்கடி சென்னை சென்றுவரும் நண்பர்களுக்கு, புகாரி ஹாட்டல் தெரிந்துதிருக்கும். அதிலும் அசைவ பிரியர்களுக்கு நிச்சயமாக தெரிந்துதிருக்கும். அந்த ஹாட்டலில் மெனுகார்டில் 65வது இடத்தில் இருந்ததுதான் சிக்கன அயிட்டம். அதன் பொன்போன்ற நிறம், சுவை பிடித்துபோன அசைவ பிரியர்கள் அதை தொடர்ந்து கேட்க ஆரம்பித்தார்கள்.குறிப்பிட்ட 65 வது சிக்கன் அயிட்டம் பிடித்து போனவர்கள் மெனுகார்ட் இல்லாமலேயே 65 அயிட்டம் கொண்டுவாங்க என கேட்க துவங்க. பின்பு சிக்கன் 65 ஆனது.இது தான் சிக்கன் 65 ன் வரலாறு

.-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

காரணம் இது தானா...?
Anonymous said…
good explanation for chicken 65.
ராஜி said…
இதுதானா? நான் கூட என்னமோ வரலாறு பெர்சா இருக்கும்ன்னு பார்த்தேன்
சென்னையில் உள்ள புகாரி உணவு விடுதியில் சிக்கன் வறுவல் வகைகளில் 1965 ல் புதுவகை சிக்கன் வறுவல் அறிமுகபடுத்தபட்டதால் அதற்கு சிக்கன் 65 என்று பெயர். அதற்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட சிக்கன் 78, சிக்கன் 82, சிக்கன் 90 போன்றவைகளும் அதன் வெளியீடு வருடத்தை குறித்தே... இன்று வரை சிக்கன் 65 மட்டும் நம்மிடம் தொடர்கிறது...
arulmozhi said…
WRONG INFORMATION.
CHICKEN 65 IS A CHINESE FOOD.CHICKEN WILL BE CUT EXACTLY 65 DAYS AFTER ITS BIRTH AND THE DISH IS PREPARED.THATS WHY THE NAME CHICKEN 65.