TMS 91


TMS ? ... இன்றைய இளைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்பில்லை, 50 வயதை தாண்டியவர்களின் இசைநாயகன். தமிழ்சினிமாவின் கருப்பு வெள்ளை யுகத்தின் குரல். தமிழ்திரையுலகில் ஜிவிஷி என அன்புடன் அழைக்கப்படுகிற டி.எம்.சவுந்தரராஜன் .உங்களில் நிறை பேருக்கு தெரிந்திருக்கலாம்... டி.எம்.எஸ் பிறப்பால் தமிழர் அல்ல என்பது( எனக்கு தெரிந்தவரை தமிழ்பாடகர்களில் யாரும் தமிழர் அல்ல... எஸ்.பி.பி.,மனோ ஆந்திராகாரர்கள், ஜேசுதாஸ், உன்னிமேனன் மலையாளிகள்..பாடகிகளும் அப்படிதான் என்று நினைக்கிறேன்).



டி.எம்.எஸ். பற்றி..

மதுரைக்கு வியாபாரத்திற்காக வந்த சௌராஷ்டிரா குடும்பத்தை சேர்ந்தவர்.1922ம் ஆண்டில் புரோகிதம் செய்யும் சௌராஷ்டிரா குடும்பத்தில் துகுளுவா மீனாட்சி ஐயங்கார் சௌந்திரராஜன் பிறந்தார். ஏழு வயதில் கர்நாடக இசையைக் கற்க தொடங்கிய அவர், தனது 21ம் வயதில் மேடைகளில் பாட ஆரம்பித்தார். 1946ல் தயாரிப்பு தொடங்கி 1950ல் வெளியான கிருஷ்ணவிஜயம் திரைப்படத்தில் ‘ராதே என்னை விட்டு ஓடாதேடி’ என்ற பாடல்தான் அவருடைய முதல் பாடல். அதையடுத்து மந்திரிகுமாரியில் ‘அன்னமிட்ட வீட்டிலே’ என்ற பாடலைப்பாடினார்.தமிழ்த்திரையுலகில் பிரவேசித்த அவர் பின்னணிக்குரல் கொடுக்காத கதாநாயகர்களே இல்லை என்ற அளவுக்கு அவர் உயர்ந்தார். கூண்டுக்கிளியில் ‘கொஞ்சும் கிளியான பெண்ணை’ என்ற பாடலுக்கு சிவாஜிகணேசனுக்கு முதல் முதலாக இவர் குரல் கொடுத்தார். இந்தப் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். மலைக்கள்ளனில் அவரை தனக்கு பின்னணி பாடவைத்தார். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் என்ற பாடல் இவர் எம்.ஜி.ஆருக்கு பாடிய முதல் பாட்டு. இருவரும் ஓய்வு பெறும் வரை அவர்களின் பாடல் குரலாக டி.எம்.எஸ். திகழ்ந்தார்.நடிகர்களின் குரலுக்கொப்ப தன்னுடைய குரலை மாற்றிக்கொண்டு பாடுவதில் வல்லவரான டி.எம்.எஸ். திரைப்படங்களில் ஜெமினி கணேசன், என்.டி.ராமாராவ், எம்.ஆர்.ராதா(சரக்கு இருந்தா அவுத்து விடு-குமுதம்),எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர், ஏ.நாகேஸ்வரராவ், ரவிச்சந்திரன், நாகேஷ், காந்தாராவ், டி.எஸ்.பாலையா, ஜக்கையா என இவர் பின்னணி பாடிய நடிகர்களின் பட்டியல் நீளமானது. 2010ம் ஆண்டில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு கீதத்திலும் இவர் குரல் உள்ளது.

டி.எம்.எஸ். 91...

இன்றைக்கு பாடல்களில், பாடகர்களின் குரலை விட இசை ஆக்கிரமித்துக் கொண்டு என்ன பாடுகிறார்கள் என்பதே பாதி கேட்டும் கேட்காமலும் இருக்கிறது. ஆனால் டி.எம்.எஸ், எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தில் பாடர்களின் குரல் தனித்து கேட்கும் வகையில் இசையிருக்கும். டி,எம்.எஸ் பாடல்கள் பெரும்பாலானவை சாகாவரம் பெற்றவை,இன்றையதலைமுறைக்கும் பிடிக்கும். கடந்த மார்ச் 24 ம் (ஞாயிறு) தேதியுடன் அவர் தனது 91வயதை நிறைவு செய்திருக்கிறார்.தம்முடைய 60 ஆண்டுகளுக்கு மேலான திரைப்பட வாழ்வில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்பாடல்களும் 2500க்கும் மேற்பட்ட பக்திப்பாடல்களும் பாடியுள்ளார்.


அவருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்வரலயா இசை நிறுவனமும் கைரளி தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி கௌரவித்தன. ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில் கழக்குட்டம் அல்-சஜ் கருத்தரங்க மையத்தில் நடந்த விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச்செயலாளர் பினராயி விஜயன், பின்னணிப்பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், பின்னணி பாடகர்கள் மாதுரி, சுஜாதா, உன்னி மேனன், விஜய் ஜேசுதாஸ், ஸ்வேதா மேனன், எம்.ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். எம்.ஜெயச்சந்திரனுக்கு ஸ்வரலயா விருது அளிக்கப்பட்டது. பிறந்தநாள் கொண்டாடும் டி.எம்.எஸ். கேக் வெட்டினார். அவரை பினராயி விஜயன் கேக் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்று கேக் வெட்ட உதவினார். பின்னர் அவர் டி.எம்.எஸ்.சுக்கு கேக் ஊட்டி விட்டார். அவருக்குப்பின் ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் ஆகியோர் கேக் ஊட்டி விட்டனர்.

                                             
டி.எம்.சௌந்திரராஜனுக்கு ஜேசுதாசும், ஜெயச்சந்திரனும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினர். அவருக்கு விருதும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.இந்த விருதை தமிழ்இசைக்கான விருது.
                இதுவரை டி.எம்.எஸ் பாடல் கேட்காதவர்கள் ... கேட்டுபாருங்கள் மனதிற்கும்,வாழ்க்கைக்கும் இனிமையானது. தமிழ் இசை உள்ள வரை டி.எம்.எஸ் குரலும் இருக்கும்.
.-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Anonymous said…
I am actually thankful to the holder of this site who has shared this fantastic article at at this time.



Here is my blog post ... landing page
எங்களின் முன்னோடி என்பதில் சின்னதொரு மகிழ்ச்சியுடன் பெருமைப்பட்டுக் கொள்கிறேன்... அவரின் பல பாடல்களின் தொகுப்புகள் பலவற்றை, கணினியில் தொகுத்து வைத்துள்ளேன்... சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றி...
  • அஜித்தின் விவேக மற்ற படம்...
    28.08.2017 - 0 Comments
    அஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும்…
  • குட்டிப்புலி - சசிக்குமாரின் அலப்பறை...
    01.06.2013 - 2 Comments
    கமல்,ரஜினி,சூர்யா,விஜய் போன்ற நடிகர்களுக்கிடையில் சசிக்குமார் தனகென ஒரு தனிப்பாதை அமைத்துக்கொண்டவர்.…
  • பிரபாகரன் மகனை அருகில் நிற்க வைத்துச் சுட்டனர்:  சேனல்-4  அதிர்ச்சி  தகவல்
    17.03.2012 - 1 Comments
    “இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனை அருகில் நிற்க வைத்துச் சுட்டுக்…
  • 300 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரிய திருமணம்
    03.11.2015 - 1 Comments
    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ளது எழுவனம்பட்டி கிராமம் இங்கே 400 குடும்பங்களை சேர்ந்த…
  • நாளை தவறவிடதீர்கள் ... தவறினால் 105 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் + வீடியோ இணைப்பு
    05.06.2012 - 7 Comments
    ஆம் நண்பர்களே... நாம் வாழும் தற்போதைய காலத்தில் வானில் ஒரு அற்புதம் நிகழவிருக்கிறது.பார்க்க தவறவிட்டால்…