பிரபாகரன் மகனை அருகில் நிற்க வைத்துச் சுட்டனர்: சேனல்-4 அதிர்ச்சி தகவல்


“இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனை அருகில் நிற்க வைத்துச் சுட்டுக் கொன்றனர்’’ என்கிற அதிர்ச்சிகரமான தகவலுடன் கூடிய ஆவணப்படத்தை பிரிட்டனின் சேனல் - 4 தொலைக்காட்சி வியாழனன்று வெளியிட்டது.

“இலங்கைக் கொலைக்களம் : தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” என்கிற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த ஆவணப்படம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி கட்டப் போரில் இலங்கை ராணுவத்தினர் கடுமை யான போர்க்குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் கூறுகிறது.
இந்தக் காட்சிகள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
“போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவத் திடம் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சரணடைந்தார். அவரைத் துன்புறுத்தி, பிரபாகரன் எங்கிருக்கிறார் என்று கேட்டு அறிந்து கொண்ட ராணுவத்தினர், பிறகு அவரைச் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். இலங்கை அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை எங்களுக்குத் தெரி வித்தார்’’ என்று இந்த ஆவணப்படம் குறித்து பிபிசியிடம் பேசிய சேனல்-4 செய்தித் தொடர்பாளர் கூறினார்.
போரின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் பாலச் சந்திரன் கொல்லப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக புகழ்பெற்ற தடயவியல் நிபுணர் டெரிக் பெநூன்டரின் கருத்தும் இந்த ஆவணப்படத்தில் சேர்க்கப்பட்டிருக் கிறது.பாலச்சந்திரன் உடலின் உயர்தரமான புகைப் படங்களை சோதனை செய்த அவர், “அந்தச் சிறுவன் போரில் காயப்படவில்லை. அவனைச் சுட்டுக் கொன் றிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் பாலச்சந்திரனை பாதுகாப்பாக இலங்கை ராணுவத்திடம் சரணடைவதற்காக அழைத்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பான தகவலும் வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது.

“பாலசந்திரனுக்கு அருகே 5 ஆண்களின் உடல்கள் கிடந்தன. அவர்கள் 5 பேரும் முன்னரே கொலை செய் யப்பட்டிருக்கலாம். சுட்டுக் கொல்லப்படும்போது, பாலச் சந்திரனின் கண்கள் கட்டப்பட்டிருந்தனவா என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. ஆனால், சில அடி தூரத்தில் நின்ற ஒருவர்தான் அவரைச் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்” என்று பெநூன்டர் கூறுகிறார்.
“இது ஒரு கொலைதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்று அவர் உறுதியாகத் தெரிவிக்கிறார்.
இலங்கை கொலைக்களங்கள் என்கிற பெயரிலான முதலாவது வீடியோவை சேனல் - 4 தொலைக்காட்சி ஏற்கெனவே வெளியிட்டது. இளைஞர்கள் சிலரை நிர் வாணப்படுத்தி, கைகளைப் பின்புறம் கட்டி சுட்டுக் கொன்றது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன. உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத் திய அந்த வீடியோவின் இரண்டாவது பகுதியாக புதிய வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

-பென்னிசெல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

eelatamilan இவ்வாறு கூறியுள்ளார்…
எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

ஏன் எத்தனை பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது

பிஞ்சுகள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள். .

இதில் மிக வேதனைக்குறிய விடையம்

இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.


சொடுக்கி >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.

.
.